கோப்ராபோஸ்ட் பிரச்சாரம் அவதூறு பரப்பும் ஒரு சதித்திட்டம்: அனில் அம்பானி காட்டம்

Anil Ambani Hits Back News

கோப்ராபோஸ்ட் பிரச்சாரம் அவதூறு பரப்பும் ஒரு சதித்திட்டம்: அனில் அம்பானி காட்டம்
Anil AmbaniReliance Group Strongly Condemns Cobrapost CampaiReliance Group
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 241 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

Anil Ambani: கோப்ராபோஸ்ட் நடத்தும் பிரச்சாரம், அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

Anil Ambani : கோப்ராபோஸ்ட் நடத்தும் பிரச்சாரம், அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.ரிலையன்ஸ் குழுமம் கூறியது என்ன ?ரிலையன்ஸ் குழுமத்திற்கு எதிராக கோப்ராபோஸ்ட் தவறான பிரச்சாரம் செய்வதாக அனில் அம்பானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்திற்கும் கோப்ராபோஸ்டுக்கும் இடையே கடுமையான போர் வெடித்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் கோப்ராபோஸ்ட் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. சில கார்ப்பரேட் போட்டியாளர்கள் அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க தவறான பிரச்சாரத்தை பரப்பி, அதன் மூலம் சதி செய்வதாக நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இந்த சதி அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.கோப்ராபோஸ்ட் நடத்தும் பிரச்சாரம், அச்சுறுத்தல் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது என்று ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் இதை ஒரு கார்பரேட் ஹிட் ஜாப் என விவரித்துள்ளது. மேலும், தங்கள் நிறுவனத்தின் நற்பெயரைத் தாக்குவதும் பங்குச் சந்தையில் செல்வாக்கு செலுத்துவதும்தான் இதன் நோக்கம் என்றும் ரிலயன்ஸ் தெரிவித்துள்ளது. முழு சர்ச்சையை பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையை நிறுவனம் வெளியிட்டது. 2019 முதல் செயல்படாமல் இருந்த கோப்ராபோஸ்ட் திடீரென மீண்டும் செயலில் இறங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிதி உதவி அளிக்கப்பட்ட ஒரு பிரச்சாரம் என்பதை இது காட்டுகிறது. ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றின் சொத்துக்களை மிகக் குறைந்த விலையில் வாங்க விரும்பும் கார்ப்பரேட் போட்டியாளர்கள் இதற்குப் பின்னால் இருப்பதாக நிறுவனம் கூறியது.ரிலையன்ஸ் குழுமம் தனது அறிக்கையில், கோப்ராபோஸ்ட் மூலம் வெளிவந்ததாக கூறப்படும் தகவல்கள் ஏற்கனவே பொதுவில் கிடைக்கின்றன என்று கூறியது. 'அவர்கள் ஏற்கனவே கிடைக்கக்கூடிய வகையில் உள்ள தகவல்களை மீண்டும் மீண்டும் திரித்து வெளியிட்டு வருகின்றனர். அதில் புதிய வெளிப்பாடுகள் எதுவும் இல்லை. இவை ஏற்கனவே பொதுவில் உள்ள பழைய ஆவணங்கள். மேலும் இவை ஏற்கனவே சிபிஐ, இடி, செபி மற்றும் பிற நிறுவனங்களால் விசாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சாரத்தை நடத்துவது நீதித்துறை செயல்பாட்டில் தலையிடுவதற்குச் சமம்' என்று அனில் அம்பானியின் நிறுவனம் கூறியது. கோப்ராபோஸ்ட் நிறுவனம் தவறான பிரச்சாரங்களை நடத்தி, கார்பரேட் ஹிட் ஜாப், அச்சுறுத்தல், சந்தையை வீழ்த்தும் சதி ஆகியவற்றை செய்வதாகவும் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.ரிலையன்ஸ் குழுமம் தனது நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றின் சந்தை மூலதனம் கடந்த மூன்று மாதங்களில் ₹15,000 கோடிக்கு மேல் குறைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது. சந்தையில் பீதியை ஏற்படுத்தி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைக்க வதந்திகள் மற்றும் 'மேனிபுலேடட் டிரேடிங்க்' -ஐ பயன்படுத்தி இந்த சரிவு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. போட்டி நிறுவனங்கள் அதன் பிராஜெக்டுகளில் பங்குகளை வாங்க சதி செய்வதாக நிறுவனம் கூறியது. குறிப்பிடப்பட்ட திட்டங்களில் மும்பை மெட்ரோ திட்டம் மற்றும் ரோசா பவர் ப்ராஜெக்ட் ஆகியவை அடங்கும்.கோப்ராபோஸ்ட் மிரட்டும் வேலையில் ஈடுபடுவதாகவும் ரிலையன்ஸ் அதன் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. கோப்ராபோஸ்ட் தலைவர் அனிருத்தா பஹ்ல் சட்டவிரோதமான மற்றும் நியாயமற்ற வழிகளில் குழுமத்திடமிருந்து சலுகைகளைப் பெற முயன்றதாகவும் நிறுவனம் கூறியுள்ளது. கோப்ராபோஸ்ட் பெயரில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்த விஷயத்தை தீர்த்து வைக்க முயற்சிப்பதாக அவர் கூறினார், இது நேரடியாக மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியாகும். இந்த விவகாரம் தொடர்பாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBIயிடம் முறையான புகார் அளித்துள்ளன. முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்க, வர்த்தக முறை மற்றும் பங்குகளில் ஏற்பட்ட திடீர் சரிவு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று நிறுவனம் விரும்புகிறது.இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் ஆகியவற்றின் மொத்த நிகர மதிப்பு ₹33,000 கோடிக்கு மேலாகும். நிறுவனத்தின் ஆண்டு வருவாய் ₹33,000 கோடியை தாண்டியது. இரண்டு நிறுவனங்களும் கடன் இல்லாதவை. நிறுவனத்தில் 5.5 மில்லியனுக்கும் அதிகமான பங்குதாரர்கள் உள்ளனர். முக்கிய பிராஜெக்டுகளைப் பொறுத்தவரை, நிறுவனம் மின்சாரம், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பெருநகரத் துறையில் பல முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளது. அதன் பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. கோப்ராபோஸ்டின் தவறான பிரச்சாரம் ஒரு பத்திரிகை விசாரணை அல்ல, ஆனால் பெருநிறுவன அச்சுறுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நிறுவனம் தெளிவுபடுத்தியது. முதலீட்டாளர்கள் வதந்திகளை நம்பாமல், நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஒழுங்குமுறை தாக்கல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்று குழு வலியுறுத்தியது. புலனாய்வு ஊடக தளமான கோப்ராபோஸ்ட் அதன் ஸ்டிங் நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றது. 2010 இல், இது பல ஸ்டிங் நடவடிக்கைகளை நடத்தியது.மேலும் படிக்க | அகவிலைப்படி, ஓய்வூதிய உயர்வு, கௌரவ ஊதியம்: தேர்தலுக்கு முன் அரசின் அதிரடி உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு BMW கார் பரிசு! திருமண அன்பளிப்பாக வழங்கிய தயாரிப்பாளர்..நகராட்சி துறை பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் கேஎன் நேரு எச்சரிக்கைKerala man8th Pay Commission8th Pay Commissionமருத்துவமனையில் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர்... முதல்முறையாக போட்ட உருக்கமான பதிவு...!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Anil Ambani Reliance Group Strongly Condemns Cobrapost Campai Reliance Group Cobrapost Campaign Cobrapost Anil Ambani Vs Cobrapost அனில் அம்பானி ரிலயன்ஸ் குழுமம் கோப்ராபோஸ் பிரச்சாரம் கோப்ராபோஸ்ட் அவதூறு பரப்பும் ஒரு சதித்திட்டம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ED ने जारी किया Anil Ambani के लिए लुकआउट नोटिसED ने जारी किया Anil Ambani के लिए लुकआउट नोटिस3000 करोड़ के लोन फ्रॉड मामले में ED ने अनिल अंबानी पर सख्त कार्रवाई करते हुए लुकआउट सर्कुलर जारी किया. जानिए क्या है पूरा मामला और आगे क्या हो सकता है.
Read more »

Yes Bank Case: Anil Ambani को SEBI का बड़ा झटकाYes Bank Case: Anil Ambani को SEBI का बड़ा झटकाSEBI ने Anil Ambani की ₹2150Cr Yes Bank निवेश मामले में Settlement Plea खारिज कर दी. जांच में नीतियों के उल्लंघन और निवेशकों को ₹1828Cr नुकसान की बात सामने आई, जिससे Reliance Infra और Reliance Power के शेयर गिरे.
Read more »

Anil Ambani के हाथ लगा 5260000000 रुपये का जैकपॉट, कहां फंसा था र‍िलायंस का पैसा?Anil Ambani के हाथ लगा 5260000000 रुपये का जैकपॉट, कहां फंसा था र‍िलायंस का पैसा?Reliacne Infra Share Price: अन‍िल अंबानी की कंपनी रिलायंस इंफ्रा को एक मामले में बड़ी जीत म‍िली है. र‍िलायंस इंफ्रा ने अरावली पावर कंपनी प्राइवेट लिमिटेड के खिलाफ 526 करोड़ रुपये का आर्ब‍िटेशन अवार्ड जीता है.
Read more »

अनिल अंबानी के 2 शेयर... दोनों में लगा अपर सर्किट, ये है वजहअनिल अंबानी के 2 शेयर... दोनों में लगा अपर सर्किट, ये है वजहAnil Ambani की कंपनियों रिलायंस पावर के शेयर ने कारोबार के दौरान अपर सर्किट हिट किया, तो वहीं उनकी दूसरी कंपनी रिलायंस इंफ्रा के शेयर में भी बुधवार को Upper Circuit लगा.
Read more »

Kokilaben Ambani Health Update: Anil Ambani या Mukesh Ambani... किसके साथ रहती हैं मां कोकिलाबेन?Kokilaben Ambani Health Update: Anil Ambani या Mukesh Ambani... किसके साथ रहती हैं मां कोकिलाबेन?Kokilaben Ambani health: कोकिलाबेन अंबानी (Kokilaben Ambani) आजकल खबरों में हैं. उनको मुंबई के अस्पताल में भर्ती कराया गया है. कईयों के मन में सवाल आता है कि आखिर कोकिलाबेन अंबानी किस बेटे के साथ रहती हैं – अनिल या मुकेश?
Read more »

BOI ने अनिल अंबानी के लोन-अकाउंट को फ्रॉड घोषित किया: रिलायंस कम्युनिकेशंस पर ₹700 करोड़ के गलत इस्तेमाल का...BOI ने अनिल अंबानी के लोन-अकाउंट को फ्रॉड घोषित किया: रिलायंस कम्युनिकेशंस पर ₹700 करोड़ के गलत इस्तेमाल का...Reliance Group Anil Ambani Loan Fraud Case; स्टेट बैंक ऑफ इंडिया के बाद बैंक ऑफ इंडिया ने भी अनिल अंबानी की रिलायंस कम्युनिकेशंस (RCom) के लोन खाते को फ्रॉड घोषित किया है।
Read more »



Render Time: 2026-04-02 05:19:40