Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
Cholesterol Control Tips : கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.ஆனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் பல ஆபத்துகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர், தீபாவளி போனஸ்Chennai Rain: எந்தெந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல்? எங்கெல்லாம் மழைநீர் தேங்கி நிற்கிறது?மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட்: இந்த நாளில் டிஏ ஹைக் அறிவிப்பு... அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? Cholesterol Control Tips: இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோய், உயர் கொலஸ்ட்ரால், யூரிக் அமிலம், உடல் பருமன் என பல வாழ்க்கை முறை நோய்கள் மக்களை ஆட்டிப்படைக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை இவற்றுக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் பிரச்சனை பலரிடம் காணப்படுகின்றது. கொலஸ்ட்ரால் நம் உடலுக்கு அவசியம்தான். ஆனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல ஆபத்துகளை நாம் எதிர்கொள்ள வேண்டி வரலாம். இது இதய ஆரோக்கியத்தை மோசமாக்குவது மட்டுமல்லாமல், உடலை பல நோய்களுக்கு ஆளாக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். பல இயற்கையான வழிகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். இவற்றால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. தினமும் இரண்டு அல்லது மூன்று எலுமிச்சை பழங்களின் சாறை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இது எடை இழப்பில் உதவுவதோடு இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.அக்ரூட் பருப்புகள், குறைந்த அடர்த்தி கொண்ட கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இரண்டு ஆண்டுகள் தினமும் அக்ரூட் பருப்புகளை உட்கொண்டவர்களின் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருந்ததாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.அவுரிநெல்லி, ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் பிற பெர்ரி வகைகளில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இவை இரத்த அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. கெட்ட கொழுப்பை குறைக்க இவை உதவுவதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.நெல்லிக்காய் அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது நல்ல கொழுப்பின் அளவை பாதிக்காமல் ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் கொழுப்பு அமிலங்கள் உட்பட கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. . மக்கள் பொதுவாக அதிக கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த நெல்லிக்காயை பயன்படுத்துகின்றனர். நெல்லிக்காயில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.தினமும் ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவு 10% குறையும். கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் தினமும் இரண்டு பூண்டு பற்களை சாப்பிடலாம். இதை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கலாம். பூண்டில் இன்னும் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.இன்னும் பல நோய்களுக்கும் காரணம் ஆகின்றது. இது மாரடைப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி, எல்டிஎல் அதிகமாக இருந்தால், இரத்த நாளங்களில் அடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூளை பக்கவாதம் ஆகியவை ஏற்படும் அபாயமும் பன்மடங்கு அதிகரிக்கிறது. ஆகையால் அவ்வப்போது கொலஸ்ட்ரால் அளவை பரிசொதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. மேலும், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொலஸ்ட்ரால் அளவை பொறுத்த வரை அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sarfaraz KhanCholesterolசைக்காலஜி ட்ரிக்: நீங்கள் கேட்கும் உதவிக்கு எல்லாரும் Yes சொல்லனுமா? ‘இதை’ செய்யுங்கள்..Viral Videoகாலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை பார்க்க கூடாது! வீட்டில் வறுமை வரும்!Chennai
Home Remedies To Control Cholesterol Home Remedies Control Cholesterol Cholestreol Garlic Walnuts Lemon Amla Berry Health Tips In Tamil Health Tips கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் வீட்டு வைத்தியங்கள் பூண்டு அக்ரூட் பருப்புகள் எலுமிச்சை பெர்ரி நெல்லிகாய் மாரடைப்பு பக்கவாதம் கொழுப்பு கெட்ட கொழுப்பு Cholesterol Control Tips How Can I Lower My Cholesterol Level Quickly How Is High Cholesterol Controlled What Are Four Ways To Prevent High Cholesterol What Is The Best Remedy For High Cholesterol What Foods Are Highest In Cholesterol Which Food Is Best To Reduce Cholesterol How To Reduce High Cholesterol
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உங்கள் உணவில் தினமும் இதை சேர்த்தால் போதும்Cholesterol Control Tips: இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் (எல்டிஎல்) அளவு அதிகரிக்கும் நிலை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகின்றது. இதை கட்டுக்குள் வைக்க வேண்டியது மிக அவசியமாகும்.
Read more »
யூரிக் அமிலம், மூட்டு வலி: இரண்டுக்கும் நிவாரணம் அளிக்கும் எளிய வீட்டு வைத்தியங்கள்Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அதனால், மூட்டுவலி, வீக்கம், சிறுநீரக கற்கள் ஆகிய பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன.
Read more »
Fatty Liver: பாடாய் படுத்தும் கொழுப்பு கல்லீரலை பதமாய் சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Fatty Liver: கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை புறக்கணிக்கக் கூடாது. சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்து மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியமாகும்.
Read more »
Acidity பிரச்சனைக்கு நிவாரணம் அளிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Home Remedies For Acidity: வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது அமிலத்தன்மை ஏற்படுகிறது. பல காரணங்களால் இது நிகழலாம். அவற்றில் சில காரணங்களை இங்கே காணலாம்.
Read more »
LDL கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்கள்: கெட்ட கொழுப்புக்கு குட்பைCholesterol Control Tips: உடலில் உள்ள எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சில எளிய இயற்கையான வழிகளின் மூலம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
Read more »
நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இயற்கையான வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ அதற்கான எளிய வழிகள்.
Read more »
