TVK Vijay Response To Karur Stampede Issue : கரூரில் 41 பேர் உயிரை காவு வாங்கிய தவெக தேர்தல் பரப்புரை பிரச்சனையில், விஜய் முதன்முறையாக வாய்திறந்துள்ளார்.
TVK Vijay Response To Karur Stampede Issue : கரூரில் 41 பேர் உயிரை காவு வாங்கிய தவெக தேர்தல் பரப்புரை பிரச்சனையில், விஜய் முதன்முறையாக வாய்திறந்துள்ளார்.மக்களின் கேள்விகளுக்கு பதில்!தீபாவளிக்கு முன் குரு பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், அனைத்திலும் வெற்றிநாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு! கரூரில் தேர்தல் பரப்புரையின் போது பெண்கள் குழந்தைகள் உள்பட, மொத்தம் 41 பேர் உயிரிழந்த விவகாரம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது.
ஒரு அரசியல் நிகழ்வில் இப்படிப்பட்டி சம்பவம் நடந்தது, இந்திய அளவில் கடும் எதிர்ப்புகளையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து, விஜய் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்., கடந்த செப்டம்பர் 27ஆம் தேதியன்று கரூர் மற்றும் நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறியும், அடிப்பட்டும் கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் மனங்களில் இருந்த சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்து இருக்கிறார். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறக்க ஆரம்பித்த செய்திகள் வெளிவந்த போது, விஜய் கரூரில் இருந்து கிளம்பவில்லை. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு பின்தான் அவர் அங்கிருந்து கிளம்பினார். அப்போது பத்திரிகையாளர்கள் பலியான உயிர்கள் குறித்து கேள்வி கேட்ட போது அதற்கு பதிலளிக்காமல் சென்று விட்டார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. தற்போது வெளியிட்டிருக்கும் வீடியோவில், தான் கரூருக்கு திரும்ப போகாதது ஏன் என்பதற்கு பதிலளித்திருக்கிறார். “நானும் மனிஷன்தானே..அந்த நேரத்தில் அத்தனை பேர் அப்படி உயிரிழந்து இருக்கும் போது என்னால் எப்படி அப்படியே கிளம்பி வர முடியும்? நான் திரும்ப அங்கே போக வேண்டும் என்று யோசித்தால், அதை காரணமாக வைத்து அங்கு வேறு சில பதற்றமான சூழ்நிலைகள் உருவாகலாம். வேறு அசம்பாவிதம் நடக்கலாம். அதனால்தான் அதை அப்போது தவிர்த்தேன்” என்று பேசியிருக்கிறார்.தேர்தல் பரப்புரையின் போது பலர் உயிரிழந்ததற்கு விஜய்தான் காரணம் என்று கூறி, ஒரு சிலர் அவரை கைது செய்ய வேண்டும் என்று கண்டன குரல்களை எழுப்பினர். அப்போது, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் தொ.திருமாவளவன் உள்ளிட்ட பலரிடம் “விஜய் கரூருக்கு போகாமல் இருப்பது சரியா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் அனைவரும் விஜய்க்கு ஆதரவாக பேசினர். ராகுல் காந்தியும் விஜய்யிடம் போனில் பேசியதாக கூறப்பட்டது. இன்றைய வீடியோவில் இது குறித்து பேசியிருக்கும் விஜய், தனக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.கரூரில் நடந்த சம்பவம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், இதற்கு பின்னால் பெரிய தலைகள் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்படி அவதூறு பரப்ப வேண்டாம் என்று நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டார். இதையடுத்து, இப்படி அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிரபல யூடியூபர் கைது செய்ப்பட்டார். தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நகர செயலாளர் பவுன்ராஜ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இது குறித்து பேசிய விஜய், “சிஎம் சார், பழி வாங்க வேண்டும் என்றால், என்னை வேண்டுமானாலும் பண்ணுங்க..என் மக்கள் மேல மட்டும் கை வைக்காதீங்க. நான் ஒன்னு ஆஃபிஸ்ல இருப்பேன், இல்ல வீட்ல இருப்பேன்..” என்று கூறினார்.மேலும் படிக்க | கரூர் துயர சம்பவம்.. வீடியோ வெளியிட்ட விஜய்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Karur Stampedeமாதம் ரூ.8000 பென்சன் பெற விண்ணப்பிக்கவும் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புTn Weather Alertஅக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்: மக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: LPG, UPI, டிஏ உயர்வு, டிக்கெட் முன்பதிவு.... முழு பட்டியல் இதோParijatham
Karur Stampede TVK Stampede Vijay Video Vijay Stampede Issue TVK Vijay Karur Stampede News Vijay Video On Karur Tvk Rally Stampede Issue கரூர் விஜய் தவெக தவெக கரூர் செய்தி தவெக விஜய் வீடியோ விஜய் வீடியோ லேட்டஸ்ட் Vijay Latest Video News Tamil Vijay TVK News Tamil Vijay About Karur Stampede Vijay TVK Karur Rally Stampede
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Karur Stampede: स्टालिन दिया कार्रवाई का भरोसा तो TVK ने की सीबीआई जांच की मांग, 10 बड़े अपडेटतमिलनाडु के करूर में विजय की पार्टी तमिलगा वेत्री कझगम की रैली में भगदड़ मचने से 41 लोगों की जान चली गई। मुख्यमंत्री एमके स्टालिन ने न्यायिक जांच आयोग के निष्कर्षों के आधार पर कड़ी कार्रवाई का भरोसा दिलाया है। उन्होंने मृतकों के परिवारों को 10-10 लाख रुपये की राहत राशि देने की घोषणा की...
Read more »
Karur stampede: കരൂർ ദുരന്തത്തിൽ ആദ്യ അറസ്റ്റ്; ടിവികെ കരൂർ വെസ്റ്റ് ജില്ലാ സെക്രട്ടറി അറസ്റ്റിൽ, അറസ്റ്റിലായത് ഒളിവിൽ കഴിയുന്നതിനിടെകരൂർ ദുരന്തത്തിൽ ടിവികെ കരൂർ വെസ്റ്റ് ജില്ലാ സെക്രട്ടറി അറസ്റ്റിൽ
Read more »
करूर भगदड़ से विवादों में आए थलापति विजय: राजनीति के लिए फिल्में छोड़ रहे; कभी इससे दूर रहने के लिए माता-पि...Karur Stampede Actor Talapathy Vijay life Career Controversies
Read more »
Karur Stampede Death: കരൂർ ദുരന്തം: ടിവികെ നേതാക്കൾ മുൻകൂർ ജാമ്യാപേക്ഷ നൽകിKarur stampede death case: ടിവികെ നേതാക്കളായ ബുസി ആനന്ദും നിർമൽ കുമാറുമാണ് മുൻകൂർ ജാമ്യത്തിന് മധുര ബെഞ്ചിൽ അപേക്ഷ നൽകിയത്
Read more »
'इतना दर्दनाक हादसा कभी...', भगदड़ में हुई 41 लोगों की मौत के बाद थलापति विजय का पहला बयान, TN सरकार पर बरस...Thalapathy Vijay First Reaction on Karur Rally Stampede: थलापति विजय की चुनावी रैली में हुई 41 मौत के बाद तमिलनाडु की राजनीति गरमा गई है. इस बीच, थलापति ने भगदड़ में मरने वालों और घायलों के प्रति दुख जताया. उन्होंने तमिलनाडु सरकार पर निशाना भी साधा है. उन्होंने पार्टी के कार्यकर्ताओं को गिरफ्तार करने पर भी सवाल उठाए हैं.
Read more »
CM சார்.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்.. ஆனால்! வீடியோ வெளியிட்ட விஜய்!TVK Vijay Video: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
Read more »
