தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் படிப்பிற்காகவும், திருமண செலவிற்காகவும் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.திருமணத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.
அந்த குரு பகவானுக்கே பிடித்த ராசிகள் இவை: வாழ்நாள் முழுதும் குரு பார்வை, கோடீஸ்வர யோகம்ரூ.80 ஆயிரம் கல்வி கட்டணம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ஒவ்வொரு பெண்ணுக்கும் படிப்பும், திருமணமும் அவர்களது வாழ்க்கையில் மாற்றுகிறது. ஆனால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு இது இரண்டுமே பெரும் சுமையாக இருந்து வருகிறது. இன்றைய சூழலில் மிகவும் சிம்பிளாகசெய்தாலே லட்ச கணக்கில் செலவாகும் சூழ்நிலை தான் இறுதி வருகிறது. இதனை ஏழை குடும்பங்கள் சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு திருமண உதவித் திட்டங்களை செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்களின் உயர் கல்விக்காகவும், திருமணத்திற்காகவும் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏழைப் பெண்கள் திருமணத்திற்காக ரூபாய் 25,000 மற்றும் ரூபாய் 50,000 உதவித்தொகை பெற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் தாலிக்கு எட்டு கிராம் எடையுள்ள தங்க நாணயமும் வழங்கப்படும். முன்பு இந்த திட்டத்தில் திருமணத்தின் போது ரூபாய் 10,000 நிதி உதவி வழங்கப்பட்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு ரூபாய் 25000 ஆகவும், 2011 ஆம் ஆண்டு 50,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. மேலும் தாலிக்கு நான்கு கிராம் தங்கம் வழங்கப்பட நிலையில், 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அது எட்டு கிராம் ஆக உயர்த்தப்பட்டது. ஏழை குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பத்தாம் வகுப்பு முடித்தவராக இருந்தால் திருமணத்தின் போது ரூபாய் 25,000 ரொக்கமும் எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். அதே போல பட்டப்படிப்பு படித்தவராக இருந்தால் திருமணத்திற்கு ரூபாய் 50,000 உதவித்தொகையும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும். மூலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற உங்களிடம் வருமானச் சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, திருமண அழைப்பிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் நிரம்பி இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால் அதில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டத்தில் உதவித்தொகை வழங்கப்படும். அதேபோல ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அதே போல கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.கடந்த 2022 ஆம் ஆண்டு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் தொகை திட்டத்தை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்று தமிழக அரசு மாற்றியது. இதன் மூலம் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகையாக மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டமாக மாற்றி அமைக்கப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Retirement planningவிரைவில் நல்ல செய்தி.. 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதி - பாமக நிறுவனர் ராமதாஸ்Director Venkat Prabhuகெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 இலைகள்: கொழுப்புக்கு குட் பைதமிழ்நாட்டில் எங்குமே பெண்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை.. இதுதான் திமுக அரசின் சாதனையா? - அன்புமணி ராமதாஸ்பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்ஹனிமூனில் கணவர் கொலை; மனைவியே கொன்றது அம்பலம்.. சினிமாவையே மிஞ்சும் ட்விஸ்ட்!
Moovalur Ramamirtham Ammaiyar Ninaivu Marriage As இராமமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் புதுமைப் பெண் திட்டம் தமிழ்நாடு அரசு திருமண உதவி திட்டம் திருமண உதவி தொகை விண்ணப்பம் Thirumana Uthavi Thogai Status Marriage Assistance Scheme In Tamilnadu Tamil Nadu Marriage Scheme Apply Online Pudhumai Penn Scheme Women Schemes In Tamilnadu Mk Stalin Magalir Urimai Thogai
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!Tamil Nadu government : ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை, சுயதொழில், இலவச மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »
சொந்த தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கான தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!Kalaignar Kaivinai thittam : கலைஞர் கைவினைத் திட்டம் நன்மைகள், அதற்கான தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
TNPSC படிப்பவர்களுக்கு மாதம் ரூ. 4000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?மத்திய தமிழ்நாடு பல்கலைக்கழகம் (Central Tamil Nadu University) UPSC மற்றும் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்குகிறது.
Read more »
பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Read more »
ரூ.25000 மத்திய அரசு உதவித்தொகை : 1 ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்Central Government scholarship : ஒன்றாம் ஆம் வகுப்பு முதல் டிகிரி படிப்பவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.25000 கல்வி உதவித் தொகை கொடுக்கிறது. எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Read more »
மூத்த குடிமக்களுக்கு குட் நியூஸ் : சீனியர் சிட்டிசன் செயலியை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்Tamil Nadu Senior Citizen App: மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சீனியர் சிட்டிசன் செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
