Udhayanidhi Stalin: உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
உதயசூரியன் சின்னத்திற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு என்று இறுதி பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.கிரிக்கெட் ஸ்டேடியம் கண்டிப்பாக கொண்டுவரப்படும்.மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.
.... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும்SRH vs RCB Memes: RCB-ஐ அடித்து துவைத்த SRH-இணையத்தில் கதறும் ரசிகர்கள்! வைரல் மீம்ஸ்..திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவிற்கு போடுகின்ற ஓட்டு தான் மோடிக்கு வைக்கப் போகும் வேட்டு எனவும் தெரிவித்தார். 10 வருடத்திற்கு பிறகு உதயசூரியன் சின்னம் கோவையில் நிற்கிறது என தெரிவித்த அவர் இது உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு எனவும் கோவை வெற்றி இந்தியாவின் வெற்றிக்கு முதல் வெற்றியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த முறை கோவையில் குறைந்தது மூன்று லட்சம் ஓட்டு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் எனவும் கூறினார்.கோவையில் மெட்ரோ ரயில் கிரிக்கெட் ஸ்டேடியம் அனைத்தும் கண்டிப்பாக கொண்டுவரப்படும் எனவும் உறுதியளித்தார். மோடி ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை 400 ரூபாயாக இருந்தது எனவும் தற்பொழுது 1200 ரூபாயாக உள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 75 ரூபாய்க்கும் டீசல் ஒரு லிட்டர் 65 ரூபாய்க்கும் தரப்படும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார் என தெரிவித்தார். கொரோனா காலத்தில் நம்மை வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று மோடி கூறினார். ஆனால் தமிழக முதலமைச்சர் 4000 ரூபாய் கொடுத்தார். மகளிர் இலவச பணம் மூலம் 465 கோடி முறை மகளிர் பயணம் செய்து உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மட்டும் 27 கோடி முறை பயணம் செய்து உள்ளீர்கள் எனவும் தெரிவித்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெண்களுக்காக புதுமை பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கோவை மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 14,000 மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இதை வழங்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் இந்தியாவில் முதல் மாநிலமாக காலை உணவு திட்டம் தமிழகத்தில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இதைக் கூறிக் கொண்டிருக்கும் பொழுது மகளிரின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது என தெரிவித்த அவர் மகளிர் உரிமைத் தொகை மூலம் 1 கோடியே 18 லட்சம் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவும் சில இடங்களில் வரவில்லை என்றால் அது சரி செய்யப்படும் என தெரிவித்தார். மோடியை இனிமேல் மோடி என்று அழைக்காதீர்கள் 29 பைசா என்று அழையுங்கள்.இதற்கு முன்பிருந்த முதலமைச்சர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்று தெரியும் எனக் கூறிய அவர் டேபிளுக்கு அடியில் சென்று அந்த அம்மா காலை பிடித்து பிறகு அந்த அம்மாவையே காலை வாரி விட்டவர் எடப்பாடி பழனிச்சாமி என தெரிவித்தார். மேலும் நீட் தேர்வினால் இதுவரை 21 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள் எனவும் ஒரு குடும்பத்தையே நீட் தேர்வினால் இழந்து உள்ளோம் எனவும் தெரிவித்தார். தேர்தல் கணிப்புகள் திமுக 40 தொகுதிகள் இடம் ஜெயிக்கப் போகிறது என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்த அவர் கோவையில் நிச்சயமாக ஜெயிக்கும் எனவும் ஆனால் நான் கேட்பதெல்லாம் அதிகமாக வித்தியாசம் தான் என தெரிவித்தார். மதுரையில் கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனை என்று ஒற்றை செங்கல்லை எடுத்துக் காண்பித்தார். மாநில நிதி உரிமை மீட்க வேண்டும் என்றால் நல்ல பிரதமர் வரவேண்டும், அதேபோல் யார் பிரதமராக வரவேண்டும் என்பது முக்கியம் அல்ல யார் பிரதமராக வரக்கூடாது என்பது தான் முக்கியம். இன்றுடன் மைக்கை வைத்து பிரச்சாரம் முடிந்து விடும் அதன் பின் நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராக தனி தனியாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி திமுக வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்து உரையை முடித்தார். 6 மணிக்கு முன்பு உரையை முடித்து விட்டு புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TASMAC Leave : நாடாளுமன்ற தேர்தலால் டாஸ்மாக் லீவ்! மது கடைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்..அக்ஷய திருதியையில் மகாலட்சுமியின் அருள்... 5 ராசிகளுக்கு தனயோகம்!ஜிகே மணியிடம் பதவியை பிடுங்கியவர் அன்புமணி - எடப்பாடி பழனிசாமி வீசிய புதுகுண்டுபிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டுChhattisgarh Encounter
Udhaynidhi Stalin News Udhaynidhi Stalin Speech Udhaynidhi Stalin Latest News Udhaynidhi Stalin Coimbatore Udhaynidhi Stalin Pm Modi Minister Udhaynidhi Stalin Udhaynidhi Stalin Vs Annamalai Coimbatore Lok Sabha Election உதயசூரியன் கோவையில் மெட்ரோ ரயில் உதயநிதி உதயநிதி ஸ்டாலின் கோவையில் உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலை Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வாஷிங் மெஷினில் அதிகமான துணிகளை போட கூடாது! இந்த பிரச்சனைகள் வரலாம்!Washing Machine Mistakes: வாஷிங் மிஷினில் மொத்தமாக துணிகளை அள்ளி போடும் போது அதன் திறன் பாதிக்கப்படுகிறது. மேலும் துணிகளில் உள்ள அழுக்கும் வெளியேறாமல் போகிறது.
Read more »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
வாஷிங் மிஷினில் துணிகளை போடும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!வாஷிங் மிஷினில் துணிகளை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறோம். இதனால் மிசின் அல்லது துணி எளிதில் கிழிந்துவிடுகிறது அல்லது கெட்டுப்போகிறது.
Read more »
பிரதமர் மோடிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் எழுப்பியிருக்கும் 30 கேள்விகள்!Minister Mano Thangaraj s 30 Questions to PM Modi: 10 ஆண்டுகளில், மோடியின் பிரதமர் பதவி எதற்கு பயன்பட்டது? என்ற தலைப்பில் அமைச்சர் மனோ தங்கராஜ் 30 கேள்விகளை எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ளார்.
Read more »
வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பில் மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?வேலூரில் மீண்டும் உதிக்குமா உதயசூரியன்? கருத்துக் கணிப்பு மாஸ் காட்டிய கதிர் ஆனந்த்! விவரம் என்ன?
Read more »
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
