Team India: இந்திய ஓடிஐ அணியில் அதிரடி வீரர் என்ட்ரி கொடுக்க இருப்பதால், இனி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.
Team India : இந்திய ஓடிஐ அணியில் அதிரடி வீரர் என்ட்ரி கொடுக்க இருப்பதால், இனி யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைப்பதில் பெரிய சிக்கல் எழுந்துள்ளது.அங்கு 3 ஓடிஐ மற்றும் 3 டி20ஐ போட்டிகளில் விளையாடுகிறது.பணக்கார தமிழ் நடிகைகள்: கோடிகளில் சொத்து! யார் யார் தெரியுமா?கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிய விண்ணப்பங்கள் நிராகரிப்பு! முக்கிய அப்டேட்இந்திய அணி தற்போது டெஸ்ட், ஓடிஐ, டி20ஐ என மூன்று பார்மட்டிலும் சிறந்த அணியாக திகழ்ந்து வருகிறது.
ஓடிஐ மற்றும் டி20ஐ தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திலும், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திலும் நீடிக்கிறது.தற்போது டி20ஐ வடிவில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. விளையாடிய 4 போட்டிகளிலும் எவ்வித அழுத்தமும் இன்றி வெற்றியை பதிவு செய்து, சாம்பியன் அணியாக வலம் வருகிறது. அடுத்து, உள்நாட்டில் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதால் அதில் வெற்றி பெற்றாலே இந்திய அணி WTC புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களுக்கு முன்னேறும். டெஸ்டில் முன்னணி வீரர்களின் ஓய்வை தொடர்ந்து தற்போது இந்திய அணி மொத்தமாக மாறிவருவதும் நாம் கவனிக்கத்தக்கது.இந்திய அணி கடைசியாக விளையாடிய ஓடிஐ போட்டி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டிதான், அத்தொடரையும் இந்தியா கைப்பற்றியது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்களின் மண்ணில் 3 ஓடிஐ மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக உள்நாட்டில் 3 ஓடிஐ போட்டிகளையும் இந்தியா விளையாட உள்ளது. 2027 ஐசிசி உலகக் கோப்பையை குறிவைத்து இந்திய அணி ஓடிஐ அணியை கட்டமைக்க நினைக்கும். கடந்த முறை 2023 ஐசிசி உலகக் கோப்பையையே இறுதிப்போட்டி வரை வந்தும் கைப்பற்ற முடியாததால், 2027 ஆண்டிலும் தவறவிடக்கூடாது என்ற வைராக்கியம் இந்திய அணிக்கு இருக்கிறது.தற்போதைய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு அதுவே கடைசி மற்றும் முக்கியமான தொடராக கூட அமைய வாய்ப்புள்ளது. எனவே இப்போது இருந்த ஓடிஐயில் சிறந்த வீரர்களை கொண்டு அணியை கட்டமைக்க பல பிளான்களை இந்தியா செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது டி20ஐ போட்டிகளில் அமர்களப்படுத்தும் அபிஷேக் சர்மாவை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ தொடரில் களமிறக்க தேர்வாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்போது இந்திய ஓடிஐ அணியின் ஓப்பனர்களாக ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பேக்-அப்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் பார்க்கப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரிலேயே ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது பெரியளவில் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது டி20ஐ வைத்து ஓடிஐ போட்டிகளிலும் அபிஷேக் சர்மாவை கொண்டுவர நினைத்தால் நிச்சயம் ஜெய்ஸ்வாலுக்கு பின்னடைவு எனலாம். மேலும், 2027ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை தொடர் வரை ரோஹித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் இருக்கிறது.ஒருவேளை, வரும் ஆஸ்திரேலிய தொடருடன் ரோஹித் சர்மா ஓடிஐ தொடரிலும் இருந்தும் ஓய்வு பெற்றால் அந்த இடத்தை ஜெய்ஸ்வாலை விட அபிஷேக் சர்மா பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. சுப்மான் கில் ஒரு பக்கம் நிதானம் காட்டினார் என்றால் மறுபக்கம் அதிரடி காட்ட பெரிய ஹிட்டிங் வைத்துள்ள அபிஷேக் பேரூதவியாக இருப்பார். ஜெய்ஸ்வாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடக்கூடியவர் என்றாலும் அவர் சமீபத்திய பார்மின் அடிப்படையில் அபிஷேக் சர்மாவுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் அபிஷேக் சர்மா இடம்பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது.மேலும் படிக்க | ஐபிஎல்லில் பயிற்சியாளராக களமிறங்கும் அஸ்வின்? எந்த அணிக்கு தெரியுமா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Dinesh Karthikசெக் வாங்கிய அன்றே பணம் கையில் வரும்... அக்டோபர் 4 முதல்... எப்படி தெரியுமா?TN Govt WorkshopTamil Nadu government
Abhishek Sharma Team India IND Vs AUS India Vs Australia Yashasvi Jaiswal Will Not Have Chance In ODI India Vs Australia Latest Updates IND Vs AUS India National Cricket Team Rohit Sharma Retirement யஷஸ்வி ஜெய்ஸ்வால் அபிஷேக் சர்மா இந்தியக அணி இந்தியா ஆஸ்திரேலியா போட்டி இநதியா ஆஸ்திரேலியா போட்டியின் லேட்டஸ்ட் அப்டேட் இந்திய தேசிய கிரிக்கெட் அணி ரோஹித் சர்மா ஓய்வு இந்திய தேசிய கிரிக்கெட் அணி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
हर्षित राणा इंग्लैंड में टीम इंडिया के साथ रुकेंगे: मैनेजमेंट ने इंग्लिश पिच को देखते हुए फैसला लिया; 20 जू...Harshit Rana will stay with Team India in England updates dainik bhaskar
Read more »
₹600 में जूनियर आर्टिस्ट से टीम इंडिया तक का सफर: वरुण बोले- आर्किटेक्ट, म्यूजिशियन बनने की कोशिश भी की; चै...Journey from Junior Artist to Team India in ₹600 ravichandran ashvin dainik bhaskar updates
Read more »
भारत की घर से बाहर सबसे बड़ी जीत: शुभमन बर्मिंघम टेस्ट जीतने वाले इकलौते भारतीय कप्तान, आकाशदीप ने 10 विकेट...birmingham-test-2025-shubman-gill-430-runs-records-team-india-historic-win dainik bhaskar updates
Read more »
इंग्लैंड में सीरीज बराबर करने के बाद टीम-इंडिया घर लौटी: वॉशिंगटन सुंदर इम्पैक्ट प्लेयर बने; गंभीर बोले- बह...Team India returned home after levelling the series in England
Read more »
विमेंस वर्ल्डकप से पहले टीम इंडिया का कैंप विशाखापट्टनम में: 25 अगस्त से शुरुआत होगी, साउथ अफ्रीका और ऑस्ट्...Team India's camp in Visakhapatnam before Women's World Cup
Read more »
Team India New ODI Captain: টিম ইন্ডিয়া বেছে নিল নতুন ওডিআই অধিনায়ক, সাতাশের কাপজয়ের স্বপ্নে বিভোর রোহিতের বিদায়!BCCI Has Choosen Team India New ODI Captain And Confirms Rohit Sharma Exit
Read more »
