Sora App : ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ். இனி OpenAI-ன் வைரல் Sora செயலியை பயன்படுத்தலாம். முழு விவரம் இங்கே
Sora App : ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ். இனி OpenAI-ன் வைரல் 'Sora' செயலியை பயன்படுத்தலாம். முழு விவரம் இங்கேஆண்ட்ராய்டுக்கு சோரா செயலி வந்தாச்சுசென்னை சென்ட்ரலில் வந்த புது வசதி.
. இனி ரயில் டிக்கெட் எடுக்க கியூ தேவையில்ல!டொனால்ட் பிராட்மேன் டூ விராட் கோலி: ஐசிசி மதிப்பீட்டில் உச்சத்தை எட்டிய டாப் 5 வீரர்கள்! Sora App : செயற்கை நுண்ணறிவு உலகில் பெரும் புயலைக் கிளப்பிய OpenAI நிறுவனத்தின் 'Sora' செயலி, இப்போது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டது. ஐபோனில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த AI வீடியோ உருவாக்கும் செயலி, தற்போது கூகுள் பிளே ஸ்டோரிலும் களமிறங்கியுள்ளது. கடந்த செப்டம்பரில் Sora 2 மாடலின் அறிமுகத்துடன், OpenAI ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த AI செயலி, இத்தனை நாட்களாக ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட இந்த AI ஸ்டார்ட்அப் நிறுவனம், செவ்வாய்க்கிழமை அன்று, Sora செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.இந்த செயலி எந்தெந்த நாடுகளில் கிடைக்கும் என்றால் அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 7 நாடுகளில் தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இந்தச் செயலி கிடைக்கிறது.உலகிலேயே ஸ்மார்ட்போன்களுக்கான இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியா இருக்கும் நிலையில், துரதிர்ஷ்டவசமாக, Sora செயலி தற்போது இந்தியப் பயனர்களுக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் எப்போது இந்தச் செயலி வெளியிடப்படும் என்பது குறித்த காலக்கெடுவை OpenAI இதுவரை அறிவிக்கவில்லை.Sora செயலி அறிமுகமான 5 நாட்களுக்குள் 1 மில்லியன் முறைக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு பெரும் சாதனை படைத்தது. மேலும், கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தது. இன்றும் கூட, ChatGPT மற்றும் ஜெமினி போன்ற செயலிகளுக்குப் பின்னால், ஆப்பிள் ஆப் ஸ்டோர் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் நீடித்து, அதன் பிரபலத்தை நிரூபிக்கிறது.புதிய Sora 2 மாடலைப் பயன்படுத்தி செயல்படும் இந்தச் செயலி, பயனர்கள் கொடுக்கும் உரை அல்லது படங்களை அடிப்படையாகக் கொண்டு, 60 வினாடிகள் வரையிலான வீடியோக்களை உருவாக்க அனுமதிக்கிறது. இதில் ஆட்டோ-ஜெனரேட்டட் பின்னணி இசையும் சேர்க்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு செயலியில் ஐஓஎஸ் பதிப்பில் உள்ள அனைத்து அம்சங்களும் உள்ளன. குறிப்பாக 'Cameos' எனப்படும் அம்சம் மிகவும் பிரபலமானது. 'Cameos' அம்சம்: இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பயனர்கள் தாங்கள் விரும்பிய செயல்களைச் செய்வது போலவோ அல்லது தங்கள் நண்பர்களை ஈடுபடுத்தியோ AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உருவாக்க முடியும். பிற அம்சங்கள்: ஏற்கனவே இருக்கும் வீடியோக்களை ரீமிக்ஸ் செய்தல், புதிய ஸ்டைல்களைச் சேர்த்தல் மற்றும் உருவாக்கப்பட்ட வீடியோக்களை மற்ற சமூக ஊடக தளங்களில் நேரடியாகப் பகிர்வது போன்ற அம்சங்களும் இதில் உள்ளன. சோரா செயலியின் இலவசப் பதிப்புப் பயனர்களுக்கு அடிப்படை வீடியோ உருவாக்கும் வசதி கிடைக்கும். ஆனால், ChatGPT Plus சந்தாதாரர்களுக்கு, நீண்ட வீடியோக்களை உருவாக்கும் விருப்பம் மற்றும் வேகமான செயலாக்க நேரம் போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.இந்தச் செயலி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், 'டீப்ஃபேக்' மற்றும் காப்புரிமைப் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியுள்ளது. சமீபத்தில், பயனர்கள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரின் வீடியோக்களை மரியாதைக்குறைவாக உருவாக்கியதால், அவரது குடும்பத்தின் கோரிக்கைக்குப் பிறகு, OpenAI நிறுவனத்தால் அந்த வீடியோ உருவாக்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேலும், ஆரம்பத்தில் காப்புரிமை பெற்ற உள்ளடக்கம் குறித்து ‘Opt-out’ கொள்கையைப் பயன்படுத்திய OpenAI, கடும் எதிர்ப்புக்குப் பிறகு, இப்போது ‘Opt-in’ முறையைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் Sora செயலி எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து OpenAI நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ காலக்கெடுவையும் இதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும், இந்தச் செயலியானது தற்போது அமெரிக்கா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் மட்டுமே ஆண்ட்ராய்டில் கிடைக்கிறது. அடுத்து ஐரோப்பாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக OpenAI கூறியுள்ள போதும், உலகின் இரண்டாவது பெரிய சந்தையான இந்தியாவிற்கான அறிவிப்பு வரவில்லை.இந்தியத் தரவு தனியுரிமை விதிமுறைகள் : Sora போன்ற ஒரு சக்திவாய்ந்த AI செயலி, இந்திய அரசின் கடுமையான தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்க வேண்டியிருக்கலாம். மேலும், அதிகப்படியான பயனர்களைக் கையாளும் வகையில், பிராந்திய சேவையக அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புத் தயார்நிலை தேவைப்படலாம். ஆகவே, தற்சமயம் இந்தியப் பயனர்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.மேலும் படிக்க | உங்கள் பிஎஃப் இருப்பை நொடியில் அறியுங்கள்! அரசு புதிய அப்டேட் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamil Nadu weatherCentral Government Pensionerstrain accidentராகுல் காந்தியின் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தின் பதிலடிஆயுள் சான்றிதழ்: தனியார் துறை EPS ஓய்வூதியதாரர்களும் DLC சமர்ப்பிக்க வேண்டுமா?Virat Kohli
Sora AI Video Generator Openai Sora Download Sora App Features சோரா செயலி ஓபன் ஏஐ சாட்ஜிபிடி ஆண்ட்ராய்டு மொபைல் செயலி Sora App Release Date India Sora Google Play Store Openai Sora Countries Sora 2 Model AI Video Creation App Deepfake Concerns Openai Sora Ios Vs Android
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
इस मामले में इंसान से हार गया AI! अब OpenAI ने ChatGPT पर लगाई बड़ी पाबंदी, अब नहीं देगा मेडिकल या लीगल सलाहNEXTA की रिपोर्ट के मुताबिक, “29 अक्टूबर से ChatGPT किसी भी तरह का ट्रीटमेंट, लीगल केस या निवेश से जुड़ा सीधा सुझाव नहीं देगा.” अब इसे एक Educational Tool यानी शैक्षिक उपकरण के रूप में ही इस्तेमाल किया जा सकेगा.
Read more »
Free मिल रहा ChatGPT Go का सब्सक्रिप्शन, समझें क्लेम करने का आसान सा तरीकाOpenAI ने 4 नवंबर से भारत में ChatGPT Go सब्सक्रिप्शन को एक साल के लिए मुफ्त कर दिया है। यूजर्स ChatGPT में लॉगइन कर “Upgrade” सेक्शन से इसे क्लेम कर सकते हैं। यह ऑफर कब तक के लिए उपलब्ध रहेगा इसे लेकर OpenAI की ओर से जानकरी नहीं आई है।
Read more »
OpenAI ने ChatGPT Go को सभी भारतीय उपयोगकर्ताओं के लिए किया मुफ्तOpenAI ने अपने पेड सब्सक्रिप्शन ChatGPT Go को भारत में सभी के लिए मुफ्त कर दिया है। कंपनी ने एक साल तक मुफ्त सर्विस का ऐलान किया है, जिससे भारतीय यूजर्स को करीब 4788 रुपये की बचत होगी। मुफ्त प्लान की तुलना में अब ज्यादा इमेज बना सकेंगे, बड़ी फाइलें अपलोड कर सकेंगे, और अधिक सवाल पूछ सकेंगे।
Read more »
OpenAI का ऐलान: ChatGPT Go अब सभी के लिए 1 साल तक मुफ्त, जानें कैसे उठाएं लाभOpenAI ने ChatGPT Go सब्सक्रिप्शन को एक साल के लिए मुफ्त कर दिया है। जानिए, कैसे आप इस शानदार ऑफर का लाभ उठा सकते हैं और ChatGPT Go की सभी सुविधाओं का अनुभव कर सकते हैं। इसमें GPT-5 मॉडल तक पहुंच, इमेज जनरेशन, डेटा एनालिसिस टूल्स जैसे कई फायदे शामिल हैं। साथ ही, इसके उपयोग की सीमाएं और एक्टिवेट करने का तरीका भी जानें।
Read more »
फ्री या कंपनी की कोई नई ट्रिक? ChatGPT Go अपग्रेड करने से पहले ये बातें जरूर जान लेंChatGPT Go Free India : OpenAI ने अपने 399 रुपये की कीमत वाले प्लान यानी ChatGPT GO को सभी भारतीयों के लिए फ्री कर दिया है. यह सर्विस 12 महीने तक मुफ्त में मिलेगी, लेकिन इसके लिए कंपनी की शर्तों को जानना होगा. दरअसल, chatGPT Go के साथ अपग्रेड करने पर यूजर्स को अपनी बैंक डिटेल्स शेयर करनी होगी.
Read more »
₹4788 कीमत का चैटजीपीटी गो सब्सक्रिप्शन आज से फ्री: ज्यादा चैट और इमेज जनरेट कर सकेंगे, यहां जानें कैसे क्ल...OpenAI is offering its mid-tier ChatGPT Go subscription plan free for all users in India for one year.
Read more »
