தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Caste Honour Killing: தனது குடும்பத்தினரால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த காதலனின் சடலத்தோடு, காதலி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.செவ்வாய் பெயர்ச்சி: டிசம்பர் 7 முதல் 4 ராசிகளுக்கு ராஜயோகம், பண வரவு அதிகமாகும்December 2025 Releasesமகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் நடந்துள்ள சாதி ஆணவப் படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை அடித்து, சுட்டுக்கொன்றுள்ளனர். மேலும், அவரது தலையில் பெரிய கல்லை போட்டு உடைத்துள்ளனர்.நடந்த இந்த ஆணவப் படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், உயிரிழந்த இளைஞரை காதலித்த பெண், அவனின் இறுதிச்சடங்கில் செய்த விஷயம் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது. இளைஞரின் இறுதிச் சடங்கில் அவரது காதலி தனது நெற்றியில் குங்குமப்பூவைப் பூசிக்கொண்டு, உயிரிழந்த தனது காதலனின் வீட்டில் மருமகளாக வாழப்போவதாக சபதம் செய்திருக்கிறார்.உயிரிழந்த இளைஞரின் பெயர் சாக்சம் டேட். அவரது காதலியின் பெயர் ஆஞ்சல் மாமித்வார். தனது சகோதரர்கள் மூலம் சாக்சம் ஆஞ்சலுக்கு பழக்கமாகி உள்ளார். ஆஞ்சலின் சகோதரர்கள் உடன் சாக்சம் அடிக்கடி அவரது வீட்டுக்குச் சென்றதன் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் சுமார் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.ஆனால் இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆஞ்சலின் வீட்டில் பிரச்னை வெடித்துள்ளது. பெற்றோர் பலமுறை அதட்டியும் ஆஞ்சல், சாக்சம் டேட் உடனான உறவை முறித்துக்கொள்ளவில்லை. இருவரும் தொடர்ந்து பழகிவந்துள்ளனர். ஆஞ்சல் டேட்டை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்பதை ஆஞ்சலின் சகோதரர்களும், தந்தையும் அறிந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை அன்று சாக்சம் டேட்டை, ஆஞ்சலின் சகோதரர்களும் தந்தையும் பலமாக தாக்கி உள்ளனர். மேலும், அவரது தலையில் சுட்டு, கல்லை வைத்து மண்டையை உடைத்து, கொலை செய்திருக்கின்றனர்.சாக்சம் டேட்டின் இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, ஆஞ்சல் கண்ணீர் வழியும் முகத்துடனும், துயரம் தோய்ந்த மனதுடனும் டேட்டின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அங்கு அவர் தனது உடலில் மஞ்சள் பூசி, நெற்றியில் குங்குமத்தை பூசி, இறந்த தனது காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்டார். மேலும், அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவரது மனைவியாகவே, அவருடைய வீட்டிலேயே வாழ முடிவு செய்திருக்கிறார்."சாக்சத்தின் மரணத்திலும் கூட எங்கள் காதல்தான் ஜெயித்தது. என் தந்தையும் சகோதரர்களும் தோற்றுவிட்டனர்" என அவர் மன வருத்தத்தில் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சாக்சம் டேட்டை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். காதலன் உயிரிழந்தாலும், தங்களின் காதல் இன்னும் உயிருடன் இருப்பதால், தான் அவரை திருமணம் செய்து கொண்டதாக அந்தப் பெண் கூறியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளது.மேலும் படிக்க | இனி பிறப்புச் சான்றிதழ் பெற ஆதார் செல்லாது... மாநில அரசு அறிவிப்புஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடர்: எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்? முழு விவரம்!தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் SIR பூர்த்தி செய்வதில் முறைகேடு: அம்பாசமுத்திரம் எம்எல்ஏகுழந்தைகளுக்கு எந்த வயதில் அசைவ உணவு கொடுக்கலாம்? விவரிக்கும் மருத்தவர்..8th Pay Commission 8வது ஊதியக்குழு: சம்பள உயர்வு, டிஏ இணைப்பு.... அரசு ஊழியர்களுக்கு 2026 புத்தாண்டில் அதிரடி அறிவிப்புகள்
Maharashtra Crime News Maharashtra Nanded Caste Honour Killing Saksham Tate Aanchal Crime News Latest Crime News Girl Married Dead Body Of Her Boyfriend மகாராஷ்டிரா சாதி ஆணவக்கொலை மகாராஷ்டிரா குற்ற செய்திகள் சாக்சம் டேட் ஆன்ஞல் குற்ற செய்திகள் காதலனின் சடலோத்தோடு திருமணம் செய்த பெண் மகாராஷ்டிரா செய்திகள்
