Kerala DA Hike News: கேரளா அரசு தற்போது பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை சிபிஐ(எம்) தலைமையிலான கேரள அரசு பல நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.
Kerala DA Hike News: கேரளா அரசு தற்போது பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை சிபிஐ தலைமையிலான கேரள அரசு பல நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது.
8th Pay Commission8th Pay Commissionஇந்தியாவில் கடந்த சில வாரங்களாக, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவருக்கும் தொடர்ந்து பல நல்ல செய்திகள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. தீபாவளி பண்டிகை, தேர்தல்கள், வழக்கமான சீர்திருத்தங்கள், ஊதியக்குழு நடவடிக்கைகள் என பல காரணங்களால் ஊழியர்களுக்கு பண வரவு கணிசமாக அதிகரித்துள்ளது.அந்த வரிசையில் கேரளா அரசு தற்போது பல வெகுமதிகளை அறிவித்துள்ளது. வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு புதன்கிழமை சிபிஐ தலைமையிலான கேரள அரசு பல நலத்திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டது. அவற்றில் மாதாந்திர நல ஓய்வூதியத்தில் அதிகரிப்பு, நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கான 'பாதுகாப்பு' உதவி மற்றும் ரப்பர் ஆதரவு விலை உயர்வு ஆகியவையும் அடங்கும்.கேரளாவில் 1,200 கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளை உள்ளடக்கிய உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் முதல் வாரத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மாநில தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் அட்டவணையை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதன்கிழமை அமைச்சரவை பல நலத்திட்ட நடவடிக்கைகளை வெளியிட்டது. இது தவிர, அங்கு அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.அமைச்சரவை அறிவித்த நலத்திட்ட நடவடிக்கைகளில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது ஓய்வுதிய உயர்வு. மாதாந்திர நல ஓய்வூதியத்தை அரசு ரூ.1,600 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், பல்வேறு பிரிவுகளில் சுமார் 49 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இந்த அதிகரிப்பு எல்.டி.எஃப்-இன் 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருந்தது.முதல்வர் பினராயி விஜயன் ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் 35 முதல் 60 வயதுக்குட்பட்ட நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகையை வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 31.34 லட்சம் பெண்கள் பயனடைவார்கள், இதற்கு ஆண்டுதோறும் ரூ.3,800 கோடி செலவாகும்.இயற்கை ரப்பரின் ஆதரவு விலை ரூ.180ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய கேரளாவில் ரப்பர் விவசாயிகளை சமாதானப்படுத்த சிபிஐ கூட்டணிக் கட்சியான கேரள காங்கிரஸ் இந்த விலை உயர்வை கோரி வந்தது.மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பல மாதங்களாக காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆஷா தொழிலாளர்களின் கௌரவ ஊதியம் ரூ.1000/மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.‘கனெக்ட் டு வொர்க்’ மற்றொரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ரூ.1,000 உதவி வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவாகும் இந்தத் திட்டத்தின் மூலம் 5 லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பயனடைவார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் ஆகியவற்றின் நிலுவைத் தொகை இந்த நிதியாண்டில் இரண்டு தவணைகளில் வழங்கப்படும் என்றும், டிஏ முந்தைய 2 மற்றும் 3 சதவீதத்திற்குப் பதிலாக 4 சதவீதம் அதிகரிக்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். கூடுதலாக, இந்த ஆண்டு மேலும் ஒரு தவணை அகவிலைப்படி/அகவிலை நிவாரண தொகையும் வழங்கப்படும்.பொதுப்பணித் துறையின் ஒப்பந்ததாரர்களுக்கான கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழுள்ள நிலுவைத் தொகையை நீக்குவதாகவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. முன்னதாக, 2020 உள்ளாட்சி மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில், தொற்றுநோய் காலத்தில் இலவச வீட்டுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி, சிபிஐ தேர்தல் ஆதாயங்களைப் பெற்றது. இந்த நலன்புரி சார்ந்த அணுகுமுறை அரசாங்கத்திற்கு ஆட்சி எதிர்ப்பு அலையை எதிர்கொள்ள உதவியது. தற்போதும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் கை கொடுக்கும் என கேரளா அரசு நம்புகிறது.மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: லெவல் 1-18 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, இதோ விவரம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.Shreyas IyerWhatsApp புதிய அம்சம் அறிமுகம்: இனி Facebook போல இதிலும் கவர் ஃபோட்டோ போடலாம்Bihar Election 2025மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதிக்கு எதிராக திரும்பிய மக்கள்! காரணம் ‘இந்த’ பதிவுதான்..PM Kisan 21வது தவணை: மத்திய அரசின் 3 நிபந்தனைகள்.... இதை செய்யவில்லையென்றால் ரூ.2,000 கிடைக்காதுதவெக விஜய்யுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையா...? அமித்ஷா டக்குனு சொன்ன பதில்!
Da Hike Welfare Pension Hike Pension Hike ASHA Workers Honorarium Kerala Government Local Body Polls Kerala Local Body Polls அகவிலைப்படி ஓய்வூதிய உயர்வு கௌரவ ஊதியம்: தேர்தலுக்கு முன் அரசின் அதிரடி Kerala DA Hike News Kerala Government Good News CPI(M) Pinarayi Vijayan கேரள அரசின் அறிவிப்புகள் கேரளா உள்ளாட்சித் தேர்தல்கள் Women Safety Project பெண்கள் பாதுகாப்பு திட்டம் Natural Rubber இயற்கை ரப்பரின் ஆதரவு விலை ASHA Workers Honorarium ஆஷா தொழிலாளர்களின் கௌரவ ஊதியம் Connect To Work கனெக்ட் டு வொர்க் திட்டம் டிஏ அரியர் தொகை Public Works Department: பொதுப்பணித் துறையின் ஒப்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Kerala Lottery Results : केरल लॉटरी की रिजल्ट हुआ जारी, ये रही विजेताओं की लिस्टKerala Lottery Results Monday 14-04-2025 Apr Live: Kerala Lottery Results, Kerala Lottery Results : केरल लॉटरी की रिजल्ट हुआ जारी, ये रही विजेताओं की लिस्ट
Read more »
DA hike: দেবীপক্ষের শুরুতেই কি মুখের হাসি চওড়া হচ্ছে সরকারি কর্মচারীদের? মিলতে চলেছে ডিএ?DA hike for West Bengal govt employees 5 percent DA hike confirmed whether it in 2025 or in 2026
Read more »
Goodnews For Central Govt Employees: మోదీ సర్కార్ మంచి మూడ్లో ఉన్నట్లుంది.. దసరాకు కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు శుభవార్త వినిపించబోతున్న ప్రభుత్వం..!!Central Government employees DA hike news: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు, పెన్షనర్లకు మోదీ సర్కార్ భారీ గుడ్ న్యూస్ వినిపించబోతున్నట్లు సమాచారం.
Read more »
DA HIKE: বিরাট সুখবর! ডিএ বাড়ছে সেপ্টেম্বরেই! হাতে টাকা দীপাবলির আগেই! কত পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনাররা? বয়স্ক ভাতা?DA HIKE news Central Government Announces 6 percent DA Hike for Employees and Pensioners from September 2025 da will increase before diwali
Read more »
Kerala Lottery: இன்று ரூ.1 கோடி பரிசு யாருக்கு? பாக்யதாரா BT-22 லாட்டரி குலுக்கல்!Kerala Lottery News in Tamil: கேரளா பாக்யதாரா 22 லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற அதிர்ஷ்ட எண்களின் முழு பட்டியல்
Read more »
DA Hike News: PSU कर्मचारियों के लिए खुशखबरी, DA में हुई बढ़ोतरी; कब से होगी लागू?सरकारी सार्वजनिक उपक्रमों PSU में कार्यरत कर्मचारियों के लिए खुशखबरी है। सरकार ने 1 अक्टूबर 2025 से लागू होने वाली नई औद्योगिक महंगाई भत्ते DA Hike News दरों की घोषणा की है। यह दरें बोर्ड स्तर से लेकर गैर-यूनियनीकृत पर्यवेक्षकों तक लागू होंगी। 1987 के वेतनमान वाले कर्मचारियों के लिए AICPI के अनुसार, IDA बढ़कर 17812 रुपये तक हो...
Read more »
