Good News For Foreign Travelers : வெளிநாட்டுபயணிகள், இந்தியாவிற்கு வரும் சமயத்தில், இந்திய வங்கி கணக்கோ அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே கூட, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Good News For Foreign Travelers : வெளிநாட்டுபயணிகள், இந்தியாவிற்கு வரும் சமயத்தில், இந்திய வங்கி கணக்கோ அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே கூட, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அலர்ட் மாணவர்களே.. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்புஇரண்டாம் பாதத்தில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் குரு, 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட பொற்காலம் ஆரம்பம்வழக்கமாக, வெளிநாட்டவர் இந்தியாவிற்கு வரும் போது தாங்கள் கையில் கொண்டு வந்த பணத்தை இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்வர். அப்படி இல்லையென்றால், வெளிநாட்டு பணங்களை பெற்றுக்கொள்ளும் இடங்களில் மட்டும் தங்கள் பணத்தை செலவு செய்வர். ஆனால், காலம் மாறும் போது, வெளிநாட்டவரின் இந்திய வருகையை எளிமையாக்கும் சில நடைமுறைகளும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்போது புதிதாக வந்துள்ள UPI Wallet குறித்த விவரத்தை, இங்கு பார்ப்போம்.சுற்றுலா பயணிகள், இந்திய வங்கி கணக்கு அல்லது இந்திய மொபைல் எண் இல்லாமலேயே டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம். அதற்கு, ஈ-வாலட் உதவுகிறது. டிஜிட்டல் முறையில், கார்டு அல்லது பணம் இல்லாமல், மொபைல் ஆப் மூலமாகவே பாதுகாப்பாக பணம் செலுத்த இது உதவுகிறது. கூகுள் பே, அமேசான் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்டவைதான் இந்தியாவில் முன்னணி வாலட்களாக இருக்கின்றன. இவை, பில் கட்டணம் செலுத்த, மளிகை பொருட்கள் வாங்க, பிறருக்கு பணம் செலுத்த என அனைத்து சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலமாக, இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள், இனி கையில் ரொக்கப்பணம் இல்லாமலேயே UPI-ஐ பயன்படுத்தி, எளிதாக பணம் செலுத்த முடியும்.இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்காக, UPI One World என்கிற சிறப்பு வசதியை, தேசிய இந்திய கொடுப்பனவு கழகம் - NPCI அறிமுகப்படுத்தி இருக்கிறது.வெளிநாட்டு பயணிகள், இந்தியாவிற்கு வரும் சமயத்தில், கையில் பணமோ அல்லது கிரெடிட் கார்டோ பயன்படுத்துவர். ஆனால், அவர்களுக்கு இனி அந்த தலைவலி இருக்காது. ரோட்டோரம் இருக்கும் டீக்கடை முதல், பெரிய வணிக வளாகங்கள் வரை, அனைத்து இடங்களிலும் அவர்கள் QR கோட்-ஐ பயன்படுத்தி, கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பறிமாற்றத்தை செய்து விடலாம். இதற்காக அவர்கள், ஒவ்வொரு முறையும் தங்களின் வங்கி அல்லது கிரெடிட் கார்ட் விவரங்களை உள்ளிட தேவையில்லை. எப்போதும் UPI பயன்படுத்தும் போது, பயன்படுத்தப்படும் Pin அல்லது கடவுச்சொற்களையே பயன்படுத்தலாம். அந்த பாஸ்வோர்ட்கள், வலுவானதாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.வெளிநாட்டு பயணிகள், இந்த சேவையை பெறுவதற்கு சில எளிய வழிமுறைகள் இருக்கிறது.இருக்கும் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில், Transcorp நிறுவனத்தில், Cheq UPI செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இதில், உங்களது பெயர், செல்பேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டு, அதன் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.உங்கள் செல்பி புகைப்படம் ஒன்றௌ பதிவேற்றி, UPI பின்-ஐ உருவாக்கிக்கொள்ளவும்.. சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்ட் மூலம், உங்கள் வாலட்டில், பணத்தை நிரப்பிக்கொள்ளுங்கள். இப்போது இதை வைத்து, இந்தியாவின் எந்த மூலைக்கு சென்றாலும் நீங்கள் UPI மூலம் பணம் செலுத்தலாம்.ஒருவர், அதிகபட்சமாக ரூ.25,000 வரை மட்டுமே வாலட்டில் பணம் ஏற்ற முடியும். ஒரு மாதத்திற்கு ரூ.50,000 மட்டுமே பயன்படுத்த முடியும். பயணம் முடிந்த பின், சொந்த நாட்டிற்குதிரும்பும் போது, அதே பழைய வங்கி கணக்கிற்கு, மீதமிருக்கும் பணத்தை மாற்றிக்கொள்ளலாம். மேலும் படிக்க | தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.48,534 ஒதுக்கீடு! மாணவர்களுக்கு ஜாக்பாட்..உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தமிழக பட்ஜெட் 2026: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் அக்கரை காட்டிய திமுக அரசுKalaignar Kanavu Illam Scheme 2026heavy rain alertதமிழ்நாடு அரசின் ஈமச்சடங்கு நிதியுதவி பற்றி தெரியுமா? ரூ.5000 வரை பெறலாம் - முழு விவரம்Kadhal Reset Repeatநடிகைக்கு ரூ.30 கோடி பிரைவேட் ஜெட் பரிசு! ஜெயிலில் இருந்து அனுப்பிய காதலன்..10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு 2026: புதிய நடைமுறை அறிமுகம்.. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
AI Travelers AI Impact Summit One Wallet UPI For Travelers யுபிஐ ஏஐ சம்மிட் One Wallet News Tamil சுற்றுலா பயணிகள் AI Summit
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ಭಾರತದಲ್ಲಿ ಹೊಸ ಶಕೆ ಆರಂಭ! ಇನ್ನುಮುಂದೆ ಅಕೌಂಟ್ನಲ್ಲಿ ಹಣ ಇಲ್ಲದಿದ್ರೂ UPI ಮೂಲಕ ಹಣ ಪಾವತಿಸಬಹುದು.! ಹೇಗೆ ಅಂತ ತಿಳಿದರೆ ಅಚ್ಚರಿಪಡ್ತೀರಿbhim upi circle feature pay Kannada: ಭಾರತದಲ್ಲಿ ಡಿಜಿಟಲ್ ಪಾವತಿಗಳನ್ನು ಸುಲಭ ಮತ್ತು ಹೆಚ್ಚು ಸುರಕ್ಷಿತವಾಗಿಸಲು, BHIM UPI ಅಪ್ಲಿಕೇಶನ್ UPI ಸರ್ಕಲ್ ಎಂಬ ಹೊಸ ವೈಶಿಷ್ಟ್ಯವನ್ನು ಪ್ರಾರಂಭಿಸಿದೆ.
Read more »
EPFO 3.0: EPFO-তে কর্মীদের জন্য এবার দারুণ সুবিধা! UPI দিয়েই তোলা যাবে PF-র টাকা... দিচ্ছে মোটা টাকা লাইফ ইনস্যুওরেন্সও...EPFO Big News: EPFO 3.0 expected to roll out in April, members withdraw money through UPI
Read more »
UPI: యూపీఐ లావాదేవీలు రూ. 1000 దాటితే ఛార్జీలు కట్ అవుతాయా? ఎన్పీసీఐ క్లారిటీ ఇదే!Charges On UPI Transactions: మనదేశంలో ప్రస్తుతం యూపీఐ ద్వారా చెల్లింపుల సేవలు ఎక్కువగా అయ్యాయి. ఈ నేపథ్యంలో ఎక్కువ శాతం మంది లిక్విడ్ క్యాష్ బదులుగా ఈ సేవలనే ఎంచుకుంటున్నారు. ఎక్కడికి వెళ్లినా యూపీఐ సర్వీసులు అందుబాటులో ఉంటున్నాయి.
Read more »
AI Impact Summit 2026: मेहमानों के लिए शुरू हुई खास UPI सर्विस, बिना बैंक खाते-फोन नंबर के होगा पेमेंटनई दिल्ली में 16 से 20 फरवरी तक चल रहे एआई इम्पैक्ट समिट 2026 में भाग लेने आए 40 से अधिक देशों के प्रतिनिधियों के लिए बड़ी सुविधा शुरू की गई है। नेशनल पेमेंट
Read more »
UPI का जलवा! कैश हुआ पीछे; अब सरकार गांव-गांव पहुंचाएगी RuPay कार्ड, जानिए क्या है प्लान?फाइनेंस मिनिस्ट्री की एक रिपोर्ट के मुताबिक, UPI पेमेंट का सबसे पसंदीदा तरीका बन गया है. इसने कैश को पीछे छोड़ दिया है. 50% से अधिक यूजर्स डिजिटल ट्रांजैक्शन को पसंद कर रहे हैं.
Read more »
कैश और कार्ड नहीं... UPI पेमेंट बना फेवरेट, डिजिटल ट्रांजेक्शन में 80% हुई हिस्सेदारीUPI Payment: देश में यूपीआई का इस्तेमाल करने वालों की संख्या में तेजी आ रही है। वहीं साल 2021 से 2025 के बीच डिजिटल ट्रांजेक्शंस में करीब 11 गुना की तेजी आई है।
Read more »
