ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஸ்குவாடை ஆஸ்திரேலியா தற்போது அறிவித்துள்ளது.
The Ashes: ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி க்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான ஸ்குவாடை ஆஸ்திரேலியா தற்போது அறிவித்துள்ளது.பிரிஸ்பேன் நகரில் இப்போட்டி நடைபெற இருக்கிறது.IPL 2026Suresh Raina2025-26 ஆஷஸ் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த நவ. 21ஆம் தேதி தொடங்கியது.பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி வெறும் 2 நாள்களிலேயே நிறைவடைந்துவிட்டது. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி தொடரின் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் இந்த போட்டி வரும் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை வென்று 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியே ஆஷஸ் கோப்பையை வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதை நிறுத்தவே, இங்கிலாந்து அணி பேஸ்பால் அணுகுமுறைக்கு மாறியது. ஆனால், முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைய அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.ஆஸ்திரேலியா ஸ்குவாடை பொருத்தவரை முதல் போட்டியில் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் கிடையாது. ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டார். ஓபனிங்கும் செட்டாகவில்லை. இந்தச் சூழலில் களமிறங்கியும் ஆஸ்திரேலியா வெற்றியடைந்துள்ளது. தற்போது 2வது டெஸ்ட் பிங்க் பால் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான பிங்க் பால் போட்டிகள் அடிலெய்ட் நகரில் நடைபெறும் நிலையில், தற்போது பிரிஸ்பேனில் நடைபெற இருக்கிறது.இந்தச் சூழலில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்கள் அடங்கிய ஸ்குவாடை அறிவித்துள்ளது. இதிலும் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறவில்லை. கடந்த போட்டியில் காயத்தால் அவதிப்பட்ட ஓபனர் உஸ்மான் கவாஜா, இரண்டாவது போட்டிக்கான ஸ்குவாடில் இடம்பெற்றுள்ளார். முதல் போட்டிக்கான ஸ்குவாடில் இருந்து எந்த மாற்றத்தையும் ஆஸ்திரேலியா செய்யவில்லை. முதல் போட்டிக்கும் இரண்டாவது போட்டிக்கும் சுமார் 10 நாள்கள் இடைவெளி கிடைத்திருக்கும் சூழலில், அடுத்து இரண்டாவது போட்டிக்கும் மூன்றாவது போட்டிக்கும் இடையே 8 நாள்கள் இடைவேளை கிடைக்கும். எனவே, இதை பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்து நடைபெற இருக்கும் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் திட்டமிட்டிருப்பார்கள் என கூறப்படுகிறது.2வது டெஸ்ட் பிரிஸ்பேனில் டிச. 4ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்து 3வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச. 17ஆம் தேதி தொடங்க உள்ளது. அடுத்து மெல்போர்னில் டிச. 26ஆம் தேதியும், சிட்னியில் ஜன. 4ஆம் தேதியும் கடைசி இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஸ்குவாடில் மாற்றம் இல்லாத சூழலில் ஆஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனிலும் மாற்றம் இருக்காது எனலாம். தோல்வியடைந்த இங்கிலாந்து அணி தனது கம்பேக்கிற்கு காத்திருக்கும். ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியுடன், இங்கிலாந்து அணி நாளை மோதும் நான்கு நாள் பயிற்சி போட்டி கான்பெரா நகரில் நாளை தொடங்க இருக்கிறது. பிங்க் பாலில் ஹேசில்வுட் இல்லாமல் இளம் வீரர்களுடன் ஆஸ்திரேலியா வருவது இங்கிலாந்துக்கு சாதகமாகும்.மேலும் படிக்க | வரலாற்று சாதனை படைத்த சஞ்சு சாம்சன்.. CSK அணிக்கு 2026ல் கப் கன்ஃபார்ம் போலயே? மேலும் படிக்க | 36 வயது வீரருக்கு மினி ஏலத்தில் 'செம மவுஸ்' - CSK உள்பட 3 அணிகள் நிச்சயம் சுத்துப்போடும்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Tamil Nadu voter listThe AshesSengottaiyanCroma Black Friday Sale: கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்த Macbook Air M4 விலை, விவரம் இதோகௌதம் கம்பீரின் பிடிவாதம் பேராபத்தா? டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்! 16 மோசமான சாதனைகள்!
Australia Vs England Pat Cummins Josh Hazlewood Team Australia Squad In The Ashes Team Australia Team England Ashes Second Test Ashes Latest News Updates Ashes Squad AUS Vs ENG ஆஸ்திரேலியா இங்கிலாந்து டெஸ்ட் பாட் கம்மின்ஸ் ஜோஷ் ஹேசில்வுட் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் லேட்டஸ்ட் நியூஸ் அப்டேட்ஸ் ஆஷஸ் பிங்க் பால் டெஸ்ட் Ashes Pink Ball Test
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
East Medinipur: স্ত্রীর গলার নলি কেটে খুন স্বামীর! শ্বশুরবাড়িকে পুড়িয়ে ছাই করল উত্তেজিত গ্রামবাসীরা...wifes brutally killed by her husband Excited villagers burnt the in laws house to ashes
Read more »
Masan Holi 2025: এই হোলি খেলা হয় শ্মশানে, খেলেন স্বয়ং শিব, ভূতপ্রেতদের সঙ্গে! মণিকর্ণিকার অলৌকিক হোলি দেখলে...Masan Holi 2025 aghori sadhus play with ashes not colour Discover significance of playing holi with pyre ashes in Banaras
Read more »
एशेज के पहले टेस्ट के लिए इंग्लैंड की टीम जारी: पर्थ स्टेडियम में 21 नवंबर से शुरू होगा मैच, ऑस्ट्रेलिया ने...The Ashes 2025; England Playing-11 Squad List Update.
Read more »
क्या ऑस्ट्रेलिया में 15 साल बाद एशेज जीत पाएगा इंग्लैंड: कल पर्थ स्टेडियम में पहला मैच; इंग्लिश टीम यहां पह...England Vs Australia The Ashes 2025 Test Series Update; Follow Ashes 2025 Match Schedule, Venue Date Details On Dainik Bhaskar.
Read more »
Ethiopia Volcano Eruption: কলকাতার আকাশে কেন ইথিওপিয়ার ১২ হাজার বছরের ঘুমন্ত আগ্নেয়গিরির ছাইয়ের ছায়া? বিস্মিত বিজ্ঞানীরা জানান...Experts On Why Volcano Hayli Gubbi Erupted After 12000 Years ashes of Ethiopia in the air and sky of kolkata
Read more »
Ashes 2025: पैट कमिंस नहीं खेलेंगे ब्रिस्बेन टेस्ट, ऑस्ट्रेलिया ने दूसरे टेस्ट के लिए किया स्क्वाड का एलानऑस्ट्रेलिया ने एशेज सीरीज के दूसरे टेस्ट के लिए 14 सदस्यीय स्क्वाड की घोषणा कर दी है। नियमित कप्तान पैट कमिंस ब्रिस्बेन टेस्ट नहीं खेल सकेंगे। कमिंस स्क्वाड के साथ यात्रा करेंगे और चोट से उबरने पर ध्यान देंगे। कमिंस की गैरमौजूदगी में स्टीव स्मिथ ऑस्ट्रेलिया की कप्तानी करेंगे। कंगारू टीम ने पहला टेस्ट 8 विकेट से जीतकर पांच मैचों की...
Read more »
