NEET PG: நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு... ஜூன் 15 நடக்காது

NEET PG 2025 Postponed News

NEET PG: நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு... ஜூன் 15 நடக்காது
NEET PG Exam Postponedநீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்புNEET PG Will Not Held On June 15
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 147 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

NEET PG 2025 Postponed: நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET PG 2025 Postponed: வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.தற்போது ஒரே ஷிப்டாக தேர்வு நடந்த உத்தரவு.

பெண் பிள்ளைகளின் பள்ளிப் பயணத்தை பாதுகாக்க தெரிந்திருக்க வேண்டியவை! வரும் ஜூன் 15ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கபடுவதாக தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அடுத்து தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீட் முதுகலை தேர்வை இரண்டு ஷிப்டாக நடத்துவதற்கு பதில் ஒரே ஷிப்டாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை அடுத்து, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில்,"நீட் முதுகலை தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். ஒரே ஷிப்ட் தேர்வுக்கு அதிக தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதால் 2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை தேர்வின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.நீட் முதுகலை தேர்வு என்பது இந்தியாவில் முதுகலை மருத்துவப் படிப்புகளை பயில விரும்பும் மருத்துவ பட்டதாரிகளுக்கான ஒரு தகுதி தேர்வாகும். தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமே இந்த நீட் முதுகலை தேர்வை நிர்வகித்து, அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறது. நீட் முதுகலை தேர்வு நாடு முழுவதும் MD, MS, PG டிப்ளமோ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக அமைகிறது.2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், நீட் தேர்வு நகரச் சீட்டை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இன்று வெளியிட இருந்தது. ஆனால், தற்போது தேர்வே தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் நகரச் சீட்டு வழங்கப்படவில்லை. இதனால் நகரச் சீட்டு விநியோகிக்கப்படும் தேதி, அனுமதி அட்டை வழங்கப்படும் தேதி, தேர்வு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படலாம்.இவை அறிவிக்கப்பட்ட உடன் மாணவர்கள் அவர்களுக்கான ஹால் டிக்கெட்டை NBEMS இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கு, நீட் முதுகலை கலந்தாய்வு நடைபெறும். அதற்கு தகுதிபெறும் மாணவர்கள் MD, MS, PG முதுகலை படிப்புகளில் சேர்ந்துகொள்ளலாம். 50% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவ கலந்தாய்வு குழுவே நடத்தும். மீதமுள்ள இடங்கள் அந்தந்த மாநில கலந்தாய்வு அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும்.இது ஒருபுறம் இருக்க, கடந்த மே 4ஆம் தேதி நீட் இளநிலை தேர்வு நடைபெற்றிருந்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், உத்தர பிரதேச உயர் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்குகளிலும் தற்போது உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை என்பதால் நீட் இளநிலை தேர்வு வெளியாகும் தேதியும் இன்னும் உறுதியாகவில்லை.மேலும் படிக்க | இந்தியாவில் 3500+ கொரோனா பரவல்.. தமிழ்நாட்டில் எத்தனை பேர் பாதிப்பு?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!June 1: பொதுமக்களுக்கு குட் நியூஸ்... சிலிண்டர் விலை குறைப்பு - இப்போது எவ்வளவு?ஐபிஎல் 2025 : பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி, ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..!!MoisturizerTamil Cinema

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

NEET PG Exam Postponed நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு NEET PG Will Not Held On June 15 NBEMS Postpones NEET PG Supreme Court ஜூன் 15 நடக்க இருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவை நீட் தேர்வு ஒத்திவைப்பு உச்ச நீதிமன்றம் Supreme Court Order Regarding NEET PG NEET PG Single Shift Exam தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்LIVE : நீட் தேர்வு இன்று கத்திரி வெயில் இன்று தொடக்கம் EPFO ஓய்வூதியம் அதிகரிப்பு சிக்கிய ரபாடா -இன்றைய அப்டேட்ஸ்
Read more »

யார் அந்த முட்டாள்? ஸ்டாலின் போல் உளற வேண்டாம் ஹெச்.ராஜா தாக்குயார் அந்த முட்டாள்? ஸ்டாலின் போல் உளற வேண்டாம் ஹெச்.ராஜா தாக்குTamil Nadu News: நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதற்கு, யார் அந்த முட்டாள் என ஹெச். ராஜா அவரை விமர்சித்துள்ளார்.
Read more »

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! நேற்று மத்திய பிரதேசம், இன்று தமிழ்நாடுநீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை! நேற்று மத்திய பிரதேசம், இன்று தமிழ்நாடுNEET 2025 Result: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த முழு விவரத்தை இங்கு காணலாம்.
Read more »

NEET UG पर एमपी हाईकोर्ट में सुनवाई आज: कोर्ट ने 11 सेंटर्स का रिजल्‍ट रोका था, NEET PG नॉर्मलाइजेशन पर भी ...NEET UG पर एमपी हाईकोर्ट में सुनवाई आज: कोर्ट ने 11 सेंटर्स का रिजल्‍ट रोका था, NEET PG नॉर्मलाइजेशन पर भी ...NEET UG Supreme Court Hearing Today for Reexam NEET PG Supreme Court Hearing today for Normalization
Read more »

सुप्रीम कोर्ट का बड़ा फैसला: NEET-PG 2025 अब एक ही शिफ्ट में, दो शिफ्ट को बताया मनमाना!सुप्रीम कोर्ट का बड़ा फैसला: NEET-PG 2025 अब एक ही शिफ्ट में, दो शिफ्ट को बताया मनमाना!NEET-PG 2025: सुप्रीम कोर्ट ने NEET-PG 2025 की परीक्षा एक ही शिफ्ट में करवाने का निर्देश दिया, NBE के दो शिफ्ट के फैसले को खारिज किया.
Read more »

SC का आदेश- NEET PG एग्जाम एक शिफ्ट में हो: कहा- समय चाहिए तो आवेदन कर सकते हैं, 15 जून को होनी है परीक्षाSC का आदेश- NEET PG एग्जाम एक शिफ्ट में हो: कहा- समय चाहिए तो आवेदन कर सकते हैं, 15 जून को होनी है परीक्षाHearing on NEET PG normalization case in Supreme Court today
Read more »



Render Time: 2026-04-01 22:56:10