India vs Australia 2nd ODI: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
India vs Australia 2nd ODI: முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அணிக்குள் மீண்டும் கொண்டுவர 3 வழிகள்!தீபாவளி அன்று இந்த 4 தவறை மட்டும் செய்ய வேண்டாம்! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், அணியின் தேர்வு குறித்து கடுமையான விவாதங்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, சமீபத்திய டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தவிர்க்க முடியாத சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும், பெர்த் போட்டியில் விளையாடும் அணியில் சேர்க்கப்படாதது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் நோக்கில், அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், குல்தீப் யாதவ் வெளியே அமர வைக்கப்பட்டார்.ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவின் புள்ளிவிவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. அவர் தனது அறிமுக போட்டிக்கு பிறகு, இன்றுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையுடன் திகழ்கிறார். சுவாரஸ்யமாக, இந்த பட்டியலில் அவருக்கு அடுத்த இடங்களில் இருக்கும் அடில் ரஷித், ஆடம் ஜம்பா, ரஷித் கான் ஆகியோரும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களே. இத்தகைய சாதனை வீரரை, அதுவும் ஒருநாள் போட்டிகளில் புறக்கணித்தது, இந்திய அணி நிர்வாகத்தின் வியூகம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அடிலெய்டில் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டுவர மூன்று வழிகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.முதல் போட்டியில் பெரிதும் சோபிக்காத வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்ப்பது முதல் வாய்ப்பாகும். ஆனால், அவ்வாறு செய்தால் அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்வி எழும். அந்த இடத்திற்கு ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டியை அணி நிர்வாகம் நம்ப வேண்டி இருக்கும். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும், ஒருநாள் போட்டிகளில் நிதிஷ் ரெட்டியின் பந்துவீச்சை முழுமையாக பயன்படுத்த அணி நிர்வாகம் தயங்குவது முதல் போட்டியிலேயே தெரிந்தது. எனவே, இந்த முடிவை எடுப்பது அணிக்கு ஒருவிதத்தில் பின்னடைவாக அமையலாம்.இரண்டாவது வழி, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் குல்தீப் யாதவை கொண்டு வருவது. இதுவே மிகவும் குழப்பான தேர்வாக பார்க்கப்படுகிறது. ஆனால், எட்டாவது வீரர் வரை பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் வேண்டும் என்பதில் இந்திய அணி நிர்வாகம் மிகவும் கறாராக உள்ளது. வாஷிங்டன் சுந்தரை நீக்கினால், பேட்டிங் வரிசையின் ஆழம் குறையும் என்பதை அணி நிர்வாகம் ஒரு பலவீனமாக கருதுகிறது.மூன்றாவது வழி, அணியின் அடிப்படை வியூகத்தையே மாற்றுவது. அதாவது, ஹர்ஷித் ராணாவின் வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் திறனை நம்பி, அவரை அணியில் தக்கவைத்துக்கொண்டு, வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக குல்தீப் யாதவை சேர்ப்பது. இது பந்துவீச்சு துறையை வலுப்படுத்துவதோடு, ஹர்ஷித் ராணாவுக்கு கீழ் வரிசையில் தனது பேட்டிங் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகவும் அமையும். ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்கள், சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு உள்ள அனுபவ குறைவு போன்றவை குல்தீப் யாதவிற்கு சாதகமான அம்சங்கள். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு, இந்திய அணி தனது வியூகத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பேட்டிங் ஆழத்திற்காக விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்ட ஒரு பந்துவீச்சாளரை பலி கொடுப்பதா அல்லது வெற்றிக்காக ரிஸ்க் எடுத்து குல்தீப்பை அணிக்குள் கொண்டு வருவதா என்ற குழப்பத்தில் அணி நிர்வாகம் உள்ளது. அடிலெய்டு போட்டியில் எடுக்கப்படும் முடிவே, இந்த தொடரில் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Tamil naduIndia vs Australiaரோகித் சர்மாவுக்கு முன் 500 சர்வதேச போட்டிகளில்.. விளையாடிய வீரர்களின் பட்டியல்!ஆஸ்திரேலியா அபார வெற்றி... இந்திய அணி 2வது போட்டியில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?நீங்கள் ஏடிஎம் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு தெரியாத முக்கிய காப்பீடு தகவல்
Kuldeep Yadav Odi Kuldeep Yadav Playing Xi Australia Series Kuldeep Yadav Odi Wickets Kuldeep Yadav Wrist Spinner India India Odi Spin Combo Kuldeep Yadav Kuldeep Yadav Australia India Cricket Team Change Kuldeep Yadav Kuldeep Yadav Best Format Odi India Kuldeep Yadav Selection Kuldeep Yadav Vs Harshit Rana Harshi Rana Gautam Gambhir குல்தீப் யாதவ் குல்தீப் யாதவ் இந்தியா ஓடி பிளேயிங் XI இந்தியா குல்தீப் யாதவ் குல்தீப் யாதவ் ஆஸ்திரேலியா குல்தீப் யாதவ் செய்ய வேண்டியது இந்தியா கிரிக்கெட் அணி குல்தீப் யாதவ் தேர்வு இந்திய அணி ஆஸ்திரேலியா விராட் கோலி ரோஹித் சர்மா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IND vs AUS Live 1st ODI: शुभमन गिल पहली बार करेंगे वनडे में कप्तानीIndia vs Australia 1st ODI Live Score: भारत और ऑस्ट्रेलिया के बीच आज यानी 19 अक्टूबर को पर्थ के ऑप्टस स्टेडियम में सीरीज का पहला वनडे खेला जाएगा।
Read more »
IND vs AUS: 3 खिलाड़ियों का डेब्यू, कुलदीप OUT, जानें दोनों टीमों की प्लेइंग 11बतौर वनडे कप्तान शुभमन गिल का ये पहला वनडे मैच है. वहीं पैट कमिंस की अनुपस्थिति में मिचेल मार्श ऑस्ट्रेलियाई टीम की कप्तानी की जिम्मेदारी संभाल रहे हैं. इस मुकाबले के लिए प्लेइंग इलेवन दिलचस्प है, क्योंकि तीन खिलाड़ियों का इस मैच में डेब्यू हुआ है.
Read more »
IND vs AUS: पहले वनडे में भारत की खराब शुरुआत, कोहली शून्य पर आउटऑस्ट्रेलिया के साथ पहले वनडे मैच में भारत ने टॉस हारकर पहले बल्लेबाजी की। रोहित शर्मा सस्ते में आउट हुए और विराट कोहली बिना खाता खोले शून्य पर आउट हो गए। मिचेल स्टार्क ने कोहली को आउट किया। यह कोहली का वनडे करियर में 17वां मौका है जब वह शून्य पर आउट हुए।
Read more »
இந்தியா அடித்தது 136 ரன்கள்; ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 131IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 136 ரன்களை அடித்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் இலக்கு 131 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Read more »
बारिश ने बिगाड़ा टीम इंडिया का खेल,ऑस्ट्रेलिया ने 7 विकेट से जीता मैचIND vs AUS 1st ODI Highlights: बारिश ने बिगाड़ा टीम इंडिया का खेल, पहले वनडे में ऑस्ट्रेलिया ने 7 विकेट से मारा मैदान
Read more »
IND vs AUS : રોહિત-વિરાટની વાપસી છતાં ભારતની હાર, પ્રથમ ODIમાં ઓસ્ટ્રેલિયાની 7 વિકેટે જીતIND vs AUS : પર્થ વનડેમાં ટીમ ઈન્ડિયાનો કારમો પરાજય થયો. ઓસ્ટ્રેલિયાએ મેચ 7 વિકેટથી જીતી લીધી. આ સાથે ઓસ્ટ્રેલિયાએ ત્રણ મેચની શ્રેણીમાં 1-0થી લીડ મેળવી લીધી છે.
Read more »
