Sanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது.
Sanju Samson CSK Trade: சஞ்சு சாம்சனை டிரேட் செய்வதில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் வைத்த 3 டிமாண்ட்களை சிஎஸ்கே நிராகரித்ததாக கூறப்படுகிறது. Chennai Super Kings : கடந்த 2025 ஐபிஎல் சீசன் நிறைவடைந்த ஓரிரு மாதங்களிலேயே சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய சிஎஸ்கே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் பரவின.
இந்த பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாக முன்னர் தகவல் வந்த நிலையில், தற்போது சிஎஸ்கே மொத்தமாகவே பின்வாங்கிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனால், டிரேடிங் பேச்சுவார்த்தையும் தற்போது வேகமெடுத்துள்ளது. அந்த வகையில், பெரும் பரபரப்பை எழுப்பிய சஞ்சு சாம்சன் - சிஎஸ்கே டிரேடிங் பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது, சஞ்சு சாம்சனை டிரேட் செய்யும் முடிவில் இருந்து சிஎஸ்கே பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. தோனிக்கு மாற்று வீரராக ஒரு விக்கெட் கீப்பர் பேட்டராகவும், கேப்டன் மெட்டீரியலாகவும் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே பார்த்தது. இதனால், டிரேடிங்கில் சஞ்சுவை குறிவைத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் டிரேடிங் செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும், சஞ்சு சாம்சனுக்கும் பிரச்னை நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், சிஎஸ்கே நடத்திய பேச்சுவார்த்தையால் சஞ்சு ராஜஸ்தானை விட்டு வெளியேறுகிறார் என தகவல்கள் கூறின. ஆனால் தற்போது வரை இது உறுதியாகவில்லை. சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய ராஜஸ்தான் சிஎஸ்கேவுக்கு மூன்று டிமாண்டுகளை வைத்திருந்தாக கூறப்பட்டது. இந்த மூன்று டிமாண்டுகளையும் நிராகரித்த பின்னரே, சிஎஸ்கே இந்த டிரேட் பேச்சுவார்த்தையில் பின்வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. முதலில், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவரை டிரேட் செய்ய வேண்டும் என ராஜஸ்தான் கேட்டுள்ளது. இதை சிஎஸ்கே ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அடுத்து ஷிவம் தூபேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்டதாகவும், அதையும் மறுத்த சிஎஸ்கே, தற்போது விளையாடும் எந்த வீரரையும் டிரேட் செய்ய விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளது. இதனால், சஞ்சு சாம்சனை All-in Cash டிரேட் மூலம் பெற சிஎஸ்கே திட்டமிட்டது. ஆனால் அது கைக்கூடவில்லை. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு வர அதிக வாய்ப்பு இருந்தாலும் கூட, டிரேட் பேச்சுவார்த்தை சரிவராததால் அது நிறைவேறவில்லை. கேகேஆர், டெல்லி அணிகளும் கூட சஞ்சு சாம்சனை டிரேட் செய்ய முயற்சித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது சஞ்சு சாம்சன் மினி ஏலத்திற்கு விடுவிக்கப்படுகிறாரா, டிரேட் செய்யப்படுகிறாரா அல்லது தக்கவைக்கப்படுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Aadhaar card update without documentsசனி பகவானுக்கு பிடித்த ராசிகள்: அதிகம் படுத்தாமல் அற்புதமாய் வாழவைப்பார் சனி
Sanju Samson CSK Three Demands By Rajasthan Royals In Samju Samson Rajasthan Royals Three Demands To CSK For Sanju S Rajasthan Royals Chennai Super Kings CSK Called Off Sanju Samson Trade RR CSK IPL 2026 IPL 2026 Mini Auction சஞ்சு சாம்சன் டிரேட் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே ஆர்ஆர் சஞ்சு சாம்சன் டிரேடில் ராஜஸ்தான் அணி வைத்த 3 டிமா சிஎஸ்கேவுக்கு மூன்று டிமாண்ட் வைத்த ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் வேண்டாம் ஐபிஎல் 2026 ஐபிஎல் 2026 மினி ஏலம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
संजू सैमसन को CSK टीम में शामिल करना चाहती है: ऋतुराज के बदले हो सकता है ट्रेड; राजस्थान को 2022 में फाइनल ...CSK wants to include Sanju Samson in the team dainik bhaskar ipl updates
Read more »
एक के बदले 3, सौदेबाजी में उतरा राजस्थान रॉयल्स, संजू सैमसन के बदले CSK से मांग लिए ये तीन प्लेयरSanju Samson trade IPL 2026: संजू सैमसन को ट्रेड करने के लिए राजस्थान रॉयल्स और चेन्नई सुपरकिंग्स के बीच बातचीत फाइनल स्टेज तक पहुंच चुकी है.
Read more »
சஞ்சு சாம்சனுக்காக கோடிகளை கொட்டும் இந்த அணி... மினி ஏலத்தில் ட்விஸ்ட் வருமா?Sanju Samson: வரும் டிசம்பர் மாதம் 13 - 15 தேதிகளில் ஐபிஎல் தொடரின் மினி ஏலம் நடைபெற இருக்கிறது.
Read more »
CSK मध्ये मोठा बदल! अश्विनच्या बदल्यात येणार 'हा' टीम इंडियाचा महत्त्वाचा खेळाडू?IPL 2026: चेन्नई सुपर किंग्ज (CSK) आगामी आयपीएल सिझनसाठी मोठा निर्णय घेण्याच्या तयारीत आहे.
Read more »
IPL ऑक्शन से पहले बड़ा धमाका, तुरुप के इक्के पर मुंबई इंडियंस की नजर, CSK में ये स्टार होगा अश्विन का रिप्लेसमेंट!IPL 2026 Mumbai Indians Chennai Super Kings: आईपीएल 2026 को लेकर सभी टीमों ने अपनी तैयारियों को अंतिम रूप देने का काम शुरू कर दिया है. मिनी ऑक्शन का आयोजन दिसंबर को दूसरे हफ्ते में हो सकता है. उससे पहले सभी टीमों को 15 नवंबर तक रिटेन किए गए खिलाड़ियों की लिस्ट देनी होगी.
Read more »
CSK-வில் இருந்து சாம் கரன் நீக்கமா? இன்ஸ்டாவில் வந்த மாற்றம் என்ன?Sam Curran CSK Trading: ஆல்-ரவுண்டர் சாம் கரன் அவரது இன்ஸ்டாகிராம் பயோவில் இருந்து சிஎஸ்கேவை நீக்கிவிட்டதாகவும், இதனால் அவர் சிஎஸ்கேவில் இருந்து வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
Read more »
