8th Pay Commission Salary Hike: 8வது ஊதியக் குழுவில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது எப்படி தீர்மானிக்கப்படுகின்றது? லெவல் 1 முதல் லெவல் 5 வரையிலான மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Salary Hike : 8வது ஊதியக் குழு வில் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இது எப்படி தீர்மானிக்கப்படுகின்றது? லெவல் 1 முதல் லெவல் 5 வரையிலான மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
8th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக காத்திருக்கிறார்கள். சம்பள உயர்வு பற்றிய பேச்சே அதிகமாக உள்ளது. இது முற்றிலுமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை சார்ந்துள்ளது.ஒரு புதிய ஊதியக் குழு உருவாக்கப்படும்போதெல்லாம், அனைத்து நிலை ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் படிகள் திருத்தப்படுகின்றன. பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு புதிய ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. இந்தத் திருத்தங்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகளுக்கு வழிவகுக்கின்றன. 6வது ஊதியக் குழு 1.92 என்ற ஃபிட்மென்ட் ஃபாக்டரின் காரணமாக அடிப்படை ஊதியத்தை 1.92 மடங்கு அதிகரித்தது. 7வது ஊதியக் குழு அதை 2.57 மடங்கு அதிகரித்தது.ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது ஒரு பெருக்கல் காரணியாகும். தற்போதுள்ள அடிப்படை ஊதியம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது.பொருளாதார மற்றும் நிறுவன நிலைமைகளை மதிப்பிட்ட பிறகு, ஊதியக் குழுவால் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தீர்மானிக்கப்படுகிறது. தற்போதுள்ள அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை ஒன்றிணைத்து, தேவையான சம்பள உயர்வின் அளவை மதிப்பிடுவதன் மூலம் இது தீர்மானிக்கப்படுகிறது. பணவீக்கம், வாழ்க்கைச் செலவு, சில்லறைப் பணவீக்கம், தொழில்துறை தொழிலாளர்களுக்கான சில்லறைப் பணவீக்கப் போக்குகள், அரசாங்கத்தின் நிதித் திறன் மற்றும் மொத்த சம்பளச் செலவின் நோக்கம் போன்ற காரணிகளின் தாக்கம் இதில் இருக்கிறது.அகில இந்திய என்.பி.எஸ் ஊழியர் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் கூறியதாக வரும் அறிக்கைகளின்படி, 8வது ஊதியக் குழுவிற்கான ஃபிட்மெண்ட் ஃபாக்ட காரணி சுமார் 2.13 ஆக இருக்கலாம். இந்த மதிப்பீடு தற்போதைய 58% அகவிலைப்படி , அமலாக்கத்திற்கு முன் ஏற்படக்கூடிய அகவிலைப்படி அதிகரிப்புகள், ஆண்டு சம்பள உயர்வுகள் மற்றும் 3.6 அலகுகளின் அடிப்படையிலான குடும்ப நுகர்வுத் தரநிலைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறது.ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், லெவல் 1 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.18,000 ஆகும். நிலை 2 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.19,900 ஆகும். நிலை 3 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.21,700 ஆகும். நிலை 4 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆகும். நிலை 5 ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆகும்.1.92 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் சம்பளம் என்னவாக இருக்கும்? 8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக இருந்தால், நிலை-1 ஊழியர்களின் மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 34,560 ஆகவும், நிலை-2 ஊழியர்களுக்கு ரூ. 38,208 ஆகவும், நிலை-3 ஊழியர்களுக்கு ரூ. 41,664 ஆகவும், நிலை-4 ஊழியர்களுக்கு ரூ. 48,960 ஆகவும், நிலை-5 ஊழியர்களுக்கு ரூ. 56,064 ஆகவும் இருக்கும்.8வது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.15 ஆக இருந்தால், லெவல்-1 ஊழியர்களின் மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 38,700 ஆகவும், லெவல்-2 ஊழியர்களுக்கு ரூ. 42,785 ஆகவும், லெவல்-3 ஊழியர்களுக்கு ரூ. 46,655 ஆகவும், லெவல்-4 ஊழியர்களுக்கு ரூ. 54,825 ஆகவும், லெவல்-5 ஊழியர்களுக்கு ரூ. 62,780 ஆகவும் இருக்கும்.ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக இருந்தால், நிலை-1 ஊழியர்களின் மதிப்பிடப்பட்ட குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 46,260 ஆகவும், நிலை-2 ஊழியர்களுக்கு ரூ. 51,143 ஆகவும், நிலை-3 ஊழியர்களுக்கு ரூ. 55,769 ஆகவும், நிலை-4 ஊழியர்களுக்கு ரூ. 65,535 ஆகவும், நிலை-5 ஊழியர்களுக்கு ரூ. 75,044 ஆகவும் இருக்கலாம்.7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 2025 டிசம்பர் மாதம் நிறைவடைந்தன. 10 ஆண்டு விதிப்படி 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். எனினும், அமலாக்க தேதி குறித்து இன்னும் மத்திய அரசு அதிகாரப்புர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.Kalaignar Magalir Urimai Thogaiதமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் பவர் கட்.. மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்
What Will Be The Salary Hike Of Level 1 To Level Salary Hike Of Central Government Employees Central Government Employees Salary Hike Fitment Factor 8Th Pay Commission Salary Hike 8Th Pay Commission Latest News 8வது ஊதியக்குழு 8வது ஊதியக் குழு லெவல் 1-5 அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான சம்பள உயர அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான சம்பள உயர்வு மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு Business News In Tamil 8Th Pay Commission Latest News In Tamil Central Government Employees News In Tamil Central Government Employees Latest News Central Government Pensioners News In Tamil Tamil Nadu Central Government Pensioners News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
केंद्रीय कर्मचारियों की सैलरी 34% तक बढ़ सकती है: अभी मिनिमम बेसिक सैलरी 18 हजार है, 8वां वेतन आयोग 1 जनवरी...8th Pay Commission Employees Salary Hike Update.
Read more »
8th Pay Commission: অষ্টম পে কমিশনের কৃপায় কত হচ্ছে বেতন? পুরনো সব ভাতা উঠে যাচ্ছে? লক্ষ্মীলাভের আশায় অধীর আগ্রহে...8th Pay Commission 8th Pay Commission salary hike Central Govt Employees Salary Hike Many old allowances may end in 8th Pay Commission why
Read more »
8th Pay Commission Big Update: ৯ নতুন বিষয়ে মিলবে টাকা, অষ্টম পে কমিশনে ন্যূনতম বেতন ফর্মুলায় আমূল বদল! বড় খবরের বড় আপডেট!8th Pay Commission Big Update: 8th pay commission minimum salary formula these items will be considered
Read more »
8वां वेतन-आयोग लागू होने तक DA बढ़ेगा या नहीं: जानें इससे जुड़ी डिटेल्स; नया आयोग 1 जनवरी 2026 से हो सकता है ...8th Pay Commission Employees Salary Vs DA Hike Details Update. Follow 8th Pay Commission Latest News and Updates On Dainik Bhaskar (दैनिक भास्कर).
Read more »
8th Pay Commission 2026 Update: নতুন অধ্যায় সূচনা-করা অষ্টম পে কমিশনে বিগেস্ট স্যালারি, অবিশ্বাস্য পেনশন! ২০২৬ সালের আপডেট...8th Pay Commission Govt Sets Stage for Biggest Salary and Pension Reform Scope Objectives Expected Salary Pension Hike in 8th Pay Commission
Read more »
8th Pay Commission: सरकारी कर्मचारियों और पेंशनर्स के लिए 2026 बनेगा फायदे का साल, सैलरी-पेंशन में होगी बड़ी बढ़ोतरीUtilities News | Utilities News in Hindi | 8th Pay Commission | 8th Pay Commission Date | 8th Pay Commission News | 8th Pay Commission in Hindi | What is DA | Utilities | Central government employees and pensioners |
Read more »
