4 மனைவிகள், 38 விமானங்கள்... உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?

World Richest King News

4 மனைவிகள், 38 விமானங்கள்... உலகின் பணக்கார மன்னரின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
Thailand KingThailand King Maha VajiralongkornNet Worth Of The World Richest King
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 186 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 130%
  • Publisher: 63%

World Richest King: உலகின் மிகப் பணக்கார மன்னர் தற்போது யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.

World Richest King : உலகின் மிகப் பணக்கார மன்னர் தற்போது யார், அவரின் சொத்து மதிப்பு என்ன என்பதை இங்கு அறிந்துகொள்ளலாம்.Parenting guideமுத்துபருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? தொடர்ந்து 2 வாரம் இதனை இரவில் தடவுங்கள்.

.உலகில் செல்வந்தர்கள் எக்கச்சக்கமானோர் இருக்கின்றனர். ஆனால், ராஜ கௌரவத்தோடு செல்வந்தர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர்தான். அதில் முக்கியமானவர், தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் எனலாம். அவரை மன்னர் பத்தாம் ராமா என்றும் அழைக்கின்றனர். இவர் வெறும் மன்னர் மட்டுமில்லை, உலகிலேயே மிகவும் பணக்கார மன்னரும் இவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இவர் யார், இவரின் பிரம்மாண்ட வாழ்க்கைமுறை எப்படி இருக்கும் உள்ளிட்ட தகவல்களை இங்கு காணலாம்.மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் தந்தை பூமிபோல் அதுல்யதேஜ் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார். உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்களில் இவரும் ஒருவர். 88 வயதில் தந்தை அதுல்யதேஜ் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி அன்று காலமானார் இதையடுத்து 2019ஆம் ஆண்டு ​​மே மாதத்தில் மகா வஜிரலோங்கோர்னுக்கு முடிசூட்டப்பட்டது. மன்னர் வஜிரலோங்கோர்ன் 1952ஆம் ஆண்டில் பிறந்தவர். தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் - ராணி சிரிகிட்டின் நான்கு குழந்தைகளில் ஒரே மகன் இவர்தான். தாய்லாந்தில் ஆரம்பக் கல்வியை பயின்ற இவர் மேற்படிகளை வெளிநாடுகளில் பயின்றுள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் இவர் பள்ளிகளில் படித்திருக்கிறார்.ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ராணுவப் படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வஜிரலோங்கோர்ன் பயிற்சி பெற்ற ராணுவ நிபுணர் என்றும் கூறப்படுகிறது. அவர் ஒரு தேர்ச்சியடைந்த போர் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விமானி ஆவார். மேலும், அவர் ராயல் தாய் ராணுவத்தில் முழுநேர அதிகாரியாகவும் பணியாற்றியிருக்கிறார். 1970ஆம் ஆண்டுகளில் தாய்லாந்திற்குள் ஏற்பட்ட கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதுவரை அவர் நான்கு பெண்களை திருமணம் செய்துள்ளார். வெவ்வேறு சந்தர்பங்களில், வெவ்வேறு காரணங்களால் நான்கு முறை திருமணம் செய்திருக்கிறார். இவரின் தனிப்பட்ட மற்றும் ஆரம்பர வாழ்க்கை பெரும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும்.மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 3.7 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது. இதில் பெரும்பகுதி அவரின் பரம்பரை சொத்தாகும். இருப்பினும், பரம்பரை சொத்துக்களை அப்படியே வைத்திருப்பதற்கு பதிலாக, நிலத்திலும் தாய்லாந்தின் சில பெரிய நிறுவனங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் தனது பேரரசை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார் மன்னர் வஜிரலோங்கோர்ன். தலைநகர் பாங்காக்கில் மட்டும் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. தாய்லாந்து முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை அவர் தன்வசம் வைத்துள்ளார். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடினாலும் அங்கு ஒரு வீட்டை வாங்குவது மிக கடினமாகும். ஆனால், மன்னர் முழு பாங்காக்கில் சில பகுதிகளையே சொந்தமாக வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.மன்னரிடம் BMW, Mercedes Benz என தற்போது 300க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. மேலும், அவரிடம் 38 தனி விமானங்களும் உள்ளன. விமானங்களின் உட்புறம் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் விட இவரிடம் இருப்பதிலேயே மிகவும் தனித்துவமானது என்றால் அது தங்கப் படகுகள்தான. அதாவது, முழுமையாக தங்கத்தால் பூசப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட படகுகள் இவரிடம் உள்ளது. அதிலும் 52 தங்கப் படகுகளை வைத்திருக்கிறார். இது அரச நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்துப்படகின்றன. இவரது ஆரம்பர வாழ்க்கையின் மீது பல்வேறு விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுப்பப்பட்டாலும் உலகின் பல கோடி மக்கள் கனவு காணும் வாழ்க்கையை, நிஜ வாழ்வில் வாழும் மிக குறைந்த நபர்களில் இவரும் ஒருவரே...மேலும் படிக்க | மீண்டும் படையெடுக்கும் கொரோனா.. இந்தியாவில் பாதிப்பு இருக்கா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பளபளப்பான சருமத்தை கொடுக்கும் வைட்டமின் சி டோனர்... வீட்டிலேயே செலவில்லாமல் தயாரிக்கலாம்...பஞ்சாப் கிங்ஸ் மிரட்டல் வெற்றி... ராஜஸ்தான் படுமோசம் - பிளே ஆப் ரேஸ் எப்படி இருக்கு?Samsung Galaxy S24 Ultra"போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" - விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Thailand King Thailand King Maha Vajiralongkorn Net Worth Of The World Richest King Net Worth Of King Maha Vajiralongkorn King Maha Vajiralongkorn Bio King Maha Vajiralongkorn Net Worth Buddhist Kingdom King Rama X Thailand King உலகின் பணக்கார மன்னர் தாய்லாந்து மன்னர் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் சொத்து மதிப்பு மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் படிப்பு தாய்லாந்து மன்னர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?இந்தியாவில் அதிகரிக்கும் Sleep Divorce! இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
Read more »

விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..விஜய்யை பார்க்க மரக்கிளையில் தொங்கிய நபர்! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா? வைரல் வீடியோ..
Read more »

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இட ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் வருமா?சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இட ஒதுக்கீட்டில் பெரிய மாற்றம் வருமா?Caste Census : சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன? இதை நடத்துவதால் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?
Read more »

TVK: விஜய் திடீர் செய்தியாளர் சந்திப்பு... என்ன பேசினார் தெரியுமா?TVK: விஜய் திடீர் செய்தியாளர் சந்திப்பு... என்ன பேசினார் தெரியுமா?TVK Vijay Press Meet: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பிறகு நடிகரும், அதன் தலைவருமான விஜய் முதல்முறையாக செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.
Read more »

Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?Operation Sindoor: 54 ஆண்டுகளுக்கு பின் இந்தியா எடுத்த முக்கிய முடிவு! என்ன தெரியுமா?
Read more »

பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த நாடுகள்! இந்தியா என்ன செய்தது தெரியுமா?பாகிஸ்தானுக்கு ஆதரவு தந்த நாடுகள்! இந்தியா என்ன செய்தது தெரியுமா?பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில், நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகின்றனர்.
Read more »



Render Time: 2026-04-02 21:06:55