Vaibhav Suryavanshi: பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.
Vaibhav Suryavanshi: பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார்.வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.50 லட்சம் பரிசு.
Tirupati TTD Booking New Rules: திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி..புதிய விதிகள் இதோ..!சனியின் நட்சத்திர மாற்றம்.. 3 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்! பணத்தையும் குவிக்கலாம்சமீபத்தில் நடந்து முடிந்த 2026ம் ஆண்டுக்கான ஐசிசி U19 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி தான். இந்நிலையில் இதற்காக அவரை பாராட்டும் விதமாக, பிஹார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ரூ. 50 லட்சம் வழங்கி கவுரவித்துள்ளார். பிஹார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது உலக கிரிக்கெட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.பிப்ரவரி 6ம் தேதி நடைபெற்ற U19 உலக கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்களை குவித்து இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்தார். மேலும் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார் வைபவ். ஐபிஎல்லில் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, தனது முதல் சீசனிலேயே சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையையும் படைத்துள்ளார்.ஐபிஎல் மட்டும் இன்றி, உள்ளூர் போட்டி, உலக கோப்பை என்ற தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. இந்நிலையில் அவரின் இந்த சாதனைகளை பாராட்டும் விதமாக, பிஹார் மாநில அரசு பசுபதிநாத் யோஜனா திட்டத்தின் கீழ் அவருக்கு ரூ. 50 லட்சம் ரொக்க பரிசை அறிவித்திருந்தது. சமீபத்தில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதாத வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் 2026 தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில், முதலமைச்சர் நிதிஷ் குமார் வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ. 50 லட்சத்துக்கான காசோலையையும், சால்வையையும் வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த விழாவில் பேசிய பீகார் முதலமைச்சர்,"தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக வைபவ் சூர்யவன்ஷி உருவெடுத்துள்ளார். U19 உலக கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. எதிர்காலத்தில் அவர் தேசிய அணிக்காக விளையாடி, புதிய சாதனைகளை படைத்து பிஹாருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார்.முதலமைச்சரின் இந்த பரிசை தொடர்ந்து, வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னொரு சர்ப்ரைஸ் பரிசும் காத்திருந்தது. அவரின் சமீபத்திய சிறப்பான ஆட்டத்திற்காக டாட்டா மோட்டார்ஸ் சார்பில் அவருக்கு டாட்டா கர்வ் சொகுசு கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தனது தந்தையுடன் சென்று இந்த காரை பெற்றுக்கொண்ட வைபவ்,"இது வெறும் பரிசு மட்டுமல்ல, எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கான உந்துதல். எனது வெற்றிக்கு காரணமான பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார். மேலும் படிக்க | பாபர் அசாமுக்கு டி20 கிரிக்கெட் ஏற்றதல்ல.. ஸ்ட்ரைக் ரேட் வெறும் 115 தான் - முழு விவரம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Abhishek SharmaO PanneerselvamZodiac SignsKetuDonald Trump
Vaibhav Suryavanshi Bihar CM Nitish Kumar வைபவ் சூர்யவன்ஷி ரூ. 50 லட்சம் பரிசு Vaibhav Suryavanshi 50 Lakh Reward அண்டர்-19 உலகக் கோப்பை வைபவ் சூர்யவன்ஷி U19 World Cup 2026 Vaibhav Suryavanshi வைபவ் சூர்யவன்ஷி டாட்டா கார் பரிசு Vaibhav Suryavanshi Tata Curvv Gift பிஹார் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி Vaibhav Suryavanshi Rajasthan Royals IPL 2026
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
BSNL अफसर का 'शाही' प्रोटोकॉल, सेवा में लगाए 50 अफसर: प्रयागराज में ड्यूटी का चार्ट बनाया, अंडरवियर तक अरें...Prayagraj BSNL Officer Protocol Controversy Latest Updates. Follow BSNL Director Vivek Banjal Visit, 50 Officers Duty, Underwear Arrange Order Cancelled News On Dainik Bhaskar.
Read more »
मौत के 1 दिन बाद वायरल हुआ एक्टर का फाइनल इंटरव्यू, 50 मिनट के एपिसोड में खोल दिए राज, बोले- ‘ये मेरे शरीर…’मौत के 1 दिन बाद वायरल हुआ एक्टर का फाइनल इंटरव्यू, 50 मिनट के एपिसोड में खोल दिए राज, बोले- ‘ये मेरे शरीर…’
Read more »
साइबर ठगों पर मथुरा पुलिस का बड़ा प्रहार: सुबह-सुबह दबिश देकर 50 से अधिक किए गिरफ्तार; धरपकड़ से मची खलबलीमथुरा पुलिस ने शेरगढ़ के गांवों में साइबर ठगों के खिलाफ बड़ी कार्रवाई की। 400 पुलिसकर्मियों ने तड़के छापेमारी कर 50 से अधिक लोगों को हिरासत में लिया।
Read more »
श्रीगंगानगर में छाया कोहरा, तापमान में गिरावट: विजिबिलिटी 50 मीटर से भी कम, 28 तक मौसम ड्राई रहेगाSriganganagar weather update: Visibility below 50 meters due to dense fog. Follow Dainik Bhaskar Latest Updates.
Read more »
50 हफ्तों तक थिएटर्स में चली थी Amitabh Bachchan की ये ब्लॉकबस्टर फिल्म, लोगों ने यश चोपड़ा को दी थी चेतावनीअमिताभ बच्चन की ब्लॉकबस्टर फिल्म ने 50 हफ्तों तक सिनेमाघरों में राज किया था। जब फिल्म बनाई जा रही थी, तब लोगों ने प्रोड्यूसर को चेतावनी दी थी कि यह नहीं चलेगी।
Read more »
सपा अध्यक्ष अखिलेश यादव ने यूट्यूबर शिक्षक नवीन शर्मा को कराया पार्टी में शामिलSamajwadi Party Joining: समाजवादी पार्टी के अध्यक्ष अखिलेश यादव ने रविवार को 50 से अधिक लोगों को पार्टी की सदस्यता दिलाई।
Read more »
