Ration Card : ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Ration Card : ரேஷன் கார்டு பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Ration Card : தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்தாயுமானவர் திட்டத்தின் கீழ் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரேஷன் கார்டு பொருகள் வீடு தேடிச் சென்று கொடுக்கப்படுகின்றன.
பிரதி மாதம் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அண்மையில் முதலமைச்சர் தொடங்கி வைத்த இத்திட்டத்தில் கள ஆய்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இப்போது புதிய பயனாளிகளும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்கலாம். ஆனால், பலருக்கும் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர எங்கு விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மாதந்தோறும் நடக்கும் ரேஷன் கார்டு குறைதீர் முகாமில், அதாவது பொதுவிநியோக திட்ட முகாமில் கலந்து கொண்டு ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ரேஷன் கார்டு குறைதீர் முகாமில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், அலைபேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள தவறான குடும்பத் தலைவரின் புகைப்படம், பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது விநியோகத்திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன் பெறலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயன் பெறலாம்.மேலும் நியாய விலைக்கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோகக் கடைகளின் செயல்பாடு மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களில் குறைபாடுகள் இருப்பின், மக்கள் குறைகளைத் தெரிவித்தால், விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொது மக்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின், இந்த சிறப்பு முகாமில் மனு செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை: கணவர்களை விட அதிக சொத்து வைத்திருக்கும் 7 இந்திய நடிகைகள்!12 ஆண்டுக்குப் பிறகு உச்ச ராசியில் பெயர்ச்சியடையும் குரு: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வ மழைகலைஞர் மகளிர் உரிமைத் தொகை : பொங்கல் பரிசாக ரூ.1000 யாருக்கெல்லாம் கிடைக்கும்?ஹர்திக் பாண்டியாவின் புது காதலி! பிரபலமான பெண்..யார் தெரியுமா?
Ration Home Delivery Tamil Nadu Thayumanavar Scheme Ration Delivery Tamil Nadu Ration Card Home Service How To Apply For Ration Delivery Senior Citizen Ration Scheme TN ரேஷன் கார்டு ரேஷன் பொருட்கள் வீடி தேடி வர விண்ணப்பிப்பது எப்பட ரேஷன் பொருட்கள் தாயுமானவர் திட்டம் ரேஷன் கார்டு முக்கிய அப்டேட் Differently Abled Ration Card Delivery Tamil Nadu Public Distribution Scheme 2025 Ration Grievance Camp TN Apply For Ration Card Delivery Ration Delivery Scheme Application Form TN
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
புதிய ரேஷன் கார்டு அப்டேட்! அமைச்சர் சக்கரபாணி கொடுத்த குட் நியூஸ்New Ration Card : ரேஷன் பொருட்கள் எந்தெந்த நாட்களில் வீடு தேடி வரும், புதிய ரேஷன் கார்டு நிலை உள்ளிட்ட முக்கிய அப்டேட்டுகளை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
Read more »
सोनीपत में दीपेंद्र हुड्डा का बीजेपी पर हमला, SIR खुलासे: हरियाणा में भी जल्द होगा वोट चोरी का खुलासा; बाढ़...Congress MP Deepender Singh Hooda in Gohana questioned BJP and Election Commission over SIR vote fraud, ration card scam and flood relief failure, promising to expose facts soon.
Read more »
ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய வேண்டுமா? முக்கிய அப்டேட்Ration Card : ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கான முக்கிய தகவலை அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது.
Read more »
புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க நல்ல வாய்ப்பு!New Ration card : புதிய ரேஷன் கார்டு, நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு குறைதீர்வு முகாம்கள் நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
SIR: SIR নিয়ে বড় আপডেট! স্বাস্থ্যসাথী ও রেশন কার্ড প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য নয়, রাজ্যের প্রস্তাব নাকচ কমিশনের...Swasthasathi and Ration card will not be the evidence of SIR stated by Election Commission
Read more »
ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்ய கடைசி தேதி அறிவிப்பு!Ration card : ரேஷன் கார்டு கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு விவரம்
Read more »
