Train Ticket Rules : இந்திய ரயில்வே வெப்சைட் மற்றும் ஐஆர்சிடிசி உள்ளிட்ட செயலிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி, ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் விதிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Train Ticket Rules : இந்திய ரயில்வே வெப்சைட் மற்றும் ஐஆர்சிடிசி உள்ளிட்ட செயலிகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி, ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் விதிமுறைகள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்முன்பதிவு பெட்டிகளில் யார் பயணிக்கலாம்?யூரிக் அமிலம் அதிகமா இருக்கா, மூட்டு வலி பாடாய் படுத்துதா? இதோ சூப்பர் டிப்ஸ் Train Ticket Rules : மத்திய அரசின் ரயில்வே துறை, ரயில் பயணங்களுக்கான விதிமுறைகளை மாற்றியுள்ளது.
அதன்படி, ரயில் பயணத்துக்கான முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை எடுப்பது எப்படி, ஆர்ஏசி, வெயிட்டிங் லிஸ்ட் விதிமுறைகள் என்ன, முன்பதிவு பெட்டியில் பயணிக்கும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பொறுத்தவரை ரயில் நிலையங்களுக்கு நேரடியாக சென்று உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். மொபைல் செயலிகளான ஐஆர்சிடிசி , யுடிஎஸ் , ரயில்ஒன் உள்ளிட்ட செயலிகளில் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். செயலிகளில் முன்பதிவில்லா டிக்கெட்டுகளை எடுக்கும்போது, ரயில் நிலையத்துக்கு வெளியே இருந்து எடுக்கவும். இதேபோல், முன்பதிவு ரயில் டிக்கெட்டுகளையும் அதற்கான ஆப்சனில் சென்று, தேவையான தகவல்களான புறப்படும் ரயில்வே ஸ்டேஷன், சேரும் ரயில்வே ஸ்டேஷன், பயணிகள் விவரம் உள்ளிட்டவைகளை உள்ளிட்டு முன்பதிவு செய்யவும்.பொதுவாக, ஒரு ரயில் கிளம்பும் நிலையத்திலிருந்து 60 நாட்களுக்கு முன்பாகவே நீங்கள் முன்பதிவு செய்ய முடியும். சில குறிப்பிட்ட இன்டர்சிட்டி ரயில்களில் இந்த கால அளவு குறைவாக இருக்கலாம். சிறப்பு ரயில்களுக்கு இந்த கால அளவு மாறுபடலாம், ஆனால் அதிகபட்சம் 60 நாட்கள் மட்டுமே.உங்கள் டிக்கெட்டிலேயே முன்பதிவு நிலை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். டிக்கெட் உறுதியாகி இருந்தால் , பெட்டி எண் மற்றும் இருக்கை எண் அச்சிடப்பட்டிருக்கும். முதல் வகுப்பு மற்றும் ஏசி முதல் வகுப்பிற்கு இது மாறுபடும். ஒருவேளை RAC அல்லது காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அதுவும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். PNR எண்களை வைத்து ஆன்லைனில் PNR Status என தேடி, அந்த எண்ணை உள்ளிட்டால் உங்கள் டிக்கெட்டின் தற்போதைய நிலை தெரிந்துவிடும்.RAC டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் பயணிக்கலாம். படுக்கை வசதி உள்ள ரயிலில் உங்களுக்கு சீட் எண்ணுடன் உட்காருவதற்கு இடம் ஒதுக்கப்படும். பயணத்தின் போது யாராவது வராமல் இருந்தால், உங்களுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படும்.இதுவும் மிக முக்கியமான கேள்வி. காத்திருப்போர் பட்டியலில் உங்கள் டிக்கெட் இருந்தால் கட்டாயம் ரயிலில் ஏற அனுமதி இல்லை. ரயில் புறப்படுவதற்கு முன்பாக சார்ட் தயாரிக்கப்படும். அப்போதும், உங்கள் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலிலேயே இருந்தால், நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறுவதற்கு அனுமதி இல்லை. இந்த விதியை மீறி ஏறினால், அடுத்த நிறுத்தத்திலேயே நீங்கள் இறக்கிவிடப்படுவீர்கள் அல்லது அபராதம் விதிக்கப்படும்.உங்களிடம் டிக்கெட் இல்லையென்றால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரயிலில் பயணிக்கலாம். முன்பதிவு பெட்டியில் உள்ள டிக்கெட் பரிசோதகரிடம், காலியாக சீட் ஏதேனும் இருந்தால் ஒதுக்கிக்கொடுக்குமாறு கேட்கலாம். ஒருவேளை சீட் இருப்பின், முன்பதிவு டிக்கெட்டுக்கான தொகையை, அதாவது உங்கள் கையில் இருக்கும் முன்பதிவில்லா டிக்கெட் தொகையை கழித்து எஞ்சிய தொகையை செலுத்தி முன்பதிவு சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.தொலைபேசி: 139 என்ற எண்ணிற்கு அழைத்து விவரம் பெறலாம்.ரயில் நிலையத்தில் விசாரிக்கலாம்: ரயில் நிலையங்களில் உள்ள விசாரணை மையங்களில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.கட்டாயம் தேவை. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்கும் போது ஏதேனும் ஒரு பயணி தனது அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை ஆதார் உள்ளிட்ட எந்த ஆவணமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், அந்த டிக்கெட்டில் பயணிக்கும் அனைவரும் டிக்கெட் இல்லாத பயணிகளாகவே கருதப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும்.மேலும் படிக்க | மொத்தமாக மாறும் தாம்பரம் ரயில் நிலையம்... தென் மாவட்ட பயணிகளுக்கு இதனால் என்ன நன்மை? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Virat KohliBudget 2026Mars TransitsWashington SundarEuphoria Movie
RAC Ticket Rules Indian Railways Waiting List Ticket Rules IRCTC Ticket Booking Guidelines PNR Status Check Rules ரயில் டிக்கெட் விதிமுறைகள் இந்திய ரயில்வே விதிமுறைகள் ரயில் டிக்கெட் லேட்டஸ்ட் ரூல்ஸ் முன்பதிவு ரயில் டிக்கெட் விதிமுறைகள் வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் விதிமுறைகள் காத்திருப்பு ரயில் டிக்கெட் ரூல்ஸ் Railway Reservation Rules India Confirmed RAC Waiting List Difference Indian Railways Booking Update Unreserved Ticket Rules ID Proof Required Train Travel
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
सावधान: टिकट कैंसिल करते समय की ये गलती तो रेलवे एक रुपये भी नहीं करेगा रिफंड, अभी हो जाएं ALERTयूटिलिटीज Know How to cancel Railway Ticket properly Indian Railways refund rules, ticket cancellation policy, confirmed ticket refund, Tatkal ticket refund, railway ticket chart preparation
Read more »
Indian Railway: ये लोग 365 दिन पहले भी बुक कर सकते हैं टिकट, स्पेशल ट्रेनों में मिलता है कोटायूटिलिटीज Indian Railway train ticket booking facility in 365 days know the rules ये लोग 365 दिन पहले भी बुक कर सकते हैं टिकट स्पेशल ट्रेनों में मिलता है कोटा
Read more »
Train Ticket Rules : ரயில் டிக்கெட் தொலைந்தால், கிழிந்தால் டூபிளிகேட் டிக்கெட் பெறுவது எப்படி?train ticket Rules : ரயில் டிக்கெட் தொலைந்துவிட்டாலோ அல்லது கிழிந்துவிட்டாலோ டூபிளிகேட் ரயில் டிக்கெட்டை எப்படி பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
वंदे भारत स्लीपर का इतना होगा किराया, सामने आई ट्रेन की हर डिटेलVande Bharat Sleeper Prices: भारतीय रेलवे जल्द ही हावड़ा–कामाख्या रूट पर पहली वंदे भारत स्लीपर ट्रेन शुरू करने जा रही है. इसमें RAC सुविधा नहीं होगी और टिकट या तो कन्फर्म मिलेगा या नहीं. 3AC का किराया हावड़ा–कामाख्या 2299 रुपये, 2AC 2970 रुपये और 1AC 3640 रुपये तय किया गया है.
Read more »
Vande Bharat Sleeper: न RAC, न वेटिंग का झंझट, मिलेगा सिर्फ कन्फर्म टिकट...वंदे भारत स्लीपर ट्रेन का किराया ₹13300 तक, शुरुआत से पहले रूट,स्टॉपेज,रिजर्वेशन की डिटेल जानिएVande Bharat Sleeper Train: वंदे भारत स्लीपर ट्रेन बनकर तैयार है और जल्द ही पटरी पर दौड़ने वाली है.ट्रेन की खूबियां, उसकी खासियत, रूट सब सामने आ चुका है. अब रेलवे ने इस ट्रेन के टिकटों को लेकर जानकारी दी है. वंदे भारत एक्सप्रेस के हिट होने के बाद रेलवे ने लंबी दूरी पर चलाने के लिए वंदे भारत स्लीपर ट्रेन तैयार किए.
Read more »
वेटिंग लिस्ट, न RAC, कंफर्म टिकट, जानिए हावड़ा-गुवाहाटी वंदे भारत स्लीपर ट्रेन का किराया, रूट समेत सारी बातेंHowrah To Guwahati Vande Bharat : प्रधानमंत्री नरेन्द्र मोदी 17 जनवरी को गुवाहाटी और कोलकाता के बीच चलने वाली पहली वंदे भारत स्लीपर ट्रेन को हरी झंडी दिखाएंगे जिससे उत्तरी बंगाल क्षेत्र में ‘कनेक्टिविटी’ को बढ़ावा मिलेगा। उत्तरी बंगाल को 17 जनवरी से कोलकाता और कामाख्या के बीच वंदे भारत स्लीपर ट्रेन सेवा शुरू होने से बड़ा प्रोत्साहन...
Read more »
