Montha Cyclone: மோந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு கனமழை இருக்குமா, புயல் எங்கே கரையை கடக்கும் உள்ளிட்ட கணிப்புகளை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.
Montha Cyclone : மோந்தா புயலால் தமிழ்நாட்டிற்கு கனமழை இருக்குமா, புயல் எங்கே கரையை கடக்கும் உள்ளிட்ட கணிப்புகளை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார்.வரும் அக். 26இல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இன்னும் 10 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இனி தங்க மழைதான், 3 ராசிகளுக்கு ராஜயோகம் வங்கக் கடலில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் அக். 26ஆம் தேதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த நாள் புயலாகவும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு அக்டோபரில் உருவாகும் முதல் புயல் இதுவே என பெயரிடப்பட்ட இருக்கிறது. மோந்தா என்ற பெயரை தாய்லாந்து பரிந்துரைத்துள்ள நிலையில், ஆங்கிலத்தில் இதன் அர்த்தம் Churning, அதாவது நுரைத்து கலக்குதல், கொந்தளிப்பது, கடைதல் என்று புரிந்துகொள்ளலாம். மோந்தா புயலால் அக். 27ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இந்த மோந்தா புயல் குறித்து எளிமையாக புரியும்படி சில விவரங்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பிரதீப் ஜான் அவரது X பக்கத்தில் இன்று மாலை 4.24 மணிக்கு போட்ட பதிவில், இந்த புதிய புயல் ஆந்திராவை நோக்கி செல்கிறது என்றும் அங்குதான் கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 99.99999% உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.இந்த 'சக்கரம்' பெரும்பாலும் புயலாக மாறும், மேலும் கிடைக்கக்கூடிய அடுத்த பெயர்களுடன் பெயரிடப்படும். எனவே அது சூறாவளி தீவிரத்தை அடைந்தவுடன் மோந்தா என்று பெயரிடப்படும். மோந்தாவுக்கு பின் சென்யார், தித்வா, அர்ணப், முராசு, அக்வான், காணி என உள்ளிட்ட பெயர்கள் அடுத்தடுத்த புயல்களுக்கு சூட்டப்படும் என்ற தகவல்களையும் தெரிவித்துள்ளார்.2. Will the chakkaram be named: Yes. This chakkaram will mostly become cyclone and will be named with the next… "வடக்கு தமிழ்நாட்டுக்கு அருகில் வராமல், திறந்த கடல்களில் இருந்து ஆந்திராவுக்குச் செல்லும். இதனால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கனமழையைத் தவறவிடும். மேலும் அது வடக்கு தமிழ்நாட்டின் கடற்கரைக்கு அருகில் வராமல் திறந்த கடலில் திரும்பினால் சாதாரண மழையை மட்டுமே பெறும்" என குறிப்பிட்டு இது முதல் சூழல் என்றும விவரித்துள்ளார். "வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு வளைந்து செல்லும். சக்கரம் வடக்கு தமிழக கடற்கரையை நெருங்கி ஆந்திராவிற்கு திரும்பினால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டும் கனமழையை பெறும்" என குறிப்பிட்டு இதனை இரண்டாவது சூழல் என்றும் விவரித்துள்ளார்.மேலும், சென்னை மழையை தவறிவிடுமா அல்லது இதில் இருந்து ஏதாவது பெறப் போகிறோமா என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் தெளிவுபடுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வேறு எந்த மாவட்டமும் இந்த புயலால் பயன்பெறாது என கூறும் அவர், புயல் ஆந்திராவிற்கு செல்வதால் மற்ற மாவட்டங்களில் பெரிய கனமழை பெய்யாது என்கிறார். கேரளாவில் மழை பெய்யும், கன்னியாகுமரி மற்றும் நீலகிரியிலும் கூட சற்று மழை பெய்யக்கூடும்.தொடர்ந்து, அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் கவனிக்க வேண்டிய நாள்கள் என்கிறார் அவர். இந்த புயல் ஆந்திராவிற்கு நகர்ந்த பிறகு, அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைக்கு முன் தமிழ்நாட்டில் நிறைய மழை பெய்யும். நவம்பர் முதல் வாரம் மந்தமானதாக இருக்கும். மழை பெய்யும் ஆனால் மந்தமான நிலை இருக்கும் என்றும் கணித்துள்ளார். வட தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரையில் உள்ள மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மேலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.மேலும்,"நேற்றைய அதே போக்கு இன்றும் நிலவும். கன்னியாகுமரியில் இன்றும் சூப்பர்-டூப்பர் மழை பெய்யும். மேற்கு திசையில் இருந்து காற்றுடன் கூடிய மழை, நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், வால்பாறை மற்றும் நீலகிரி போன்ற தென் மாவட்டங்களில் மழை இருக்கும். டெல்டா பெல்ட்டிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என்றார்.மேலும் படிக்க | சென்னை, திருச்சி: வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.கிஷ்கிந்தாபுரி: ஓடிடியில் இன்று முதல் பார்க்கலாம் - ஜீ5 தளத்தில் வெளியீடு!TN Alert Appbus fire accidentஐஸ்லாந்தில் கொசு..இது ஏன் இவ்வளவு பெரிய விஷயமாகிறது? காரணம் இதுதான்..இந்தியா vs ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி: நேரடி ஒளிபரப்பு, ஸ்ட்ரீமிங் விவரங்கள்Anbumani Ramadossநவம்பர் 1 ஆம் தேதி முதல் வங்கி விதிமுறைகளில் வரும் மிக முக்கிய மாற்றங்கள்
Montha Cyclone Effect In Tamilnadu Will TN KTCC Get Heavy Rain Due To Montha Cyclone Tamil Nadu Weatherman Pradeep John Tamil Nadu Weatherman Pradeep John Pradeep John Prediction On Montha Cyclone Pradeep John Rain Forecast KTCC Montha Cyclone Impacts TN Rains Chennai Rains Montha Cyclone Name Reason மோந்தா புயல் மோந்தா புயலால் தமிழ்நாட்டில் என்ன பாதிப்பு வெதர்மேன் பிரதீப் ஜான் மோந்தா புயல் பிரதீப் ஜான் மழை கணிப்பு சென்னை மழை மோந்தா புயல் குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் மோந்தா புயலால் தமிழ்நாட்டில் மழை இருக்குமா மோந்தா புயலால் தமிழ்நாட்டில் கனமழை இருக்குமா மோந்தா புயல் பெயர் காரணம்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
साइक्लोन 'दाना' से बंगाल में 4 लोगों की मौत: ओडिशा में 1.75 लाख एकड़ में फसलें बर्बाद; बिहार-झारखंड और छत्ती...Cyclone Dana Landfall Tracking Real-Time LIVE News Update; Follow Cyclone Dana Rainfall Impact, IMD Weather Forecast Latest News, Reports, Satellite Images and Video Footage On Dainik Bhaskar
Read more »
Cyclone Fengal'in Etkileri: Tamil Nadu ve Puducherry'da Şiddetli Yağmur ve Sarin RüzgarlarTamil Nadu ve Puducherry'de Cyclone Fengal'in etkileri hakkında canlı haberler. Çevre bakanlığı, Cyclone Fengal'in bu gece aktif hale gelebileceği uyarısında bulundu.
Read more »
Deadliest Tropical Cyclone: ভয়াবহ! বঙ্গোপসাগরের বুকে জন্ম-নেওয়া ঝড়ে তছনছ বাংলাদেশ, পশ্চিমবঙ্গও! লক্ষ লক্ষ মৃত্যু...deadliest tropical cyclone in history Great Cyclone killing an estimated 300000 500000 people
Read more »
Cyclone Alert: ముంచుకొస్తున్న తుపాను, భారీ నుంచి అతి భారీ వర్షాలుIMD Warns Cyclone Alert in Bay of Bengal Heavy Rains Cyclone Alert: బంగాళాఖాతంలో మరో తీవ్ర వాయుగుండం ఏర్పడింది. ఇది రానున్న రోజుల్లో తుపానుగా మారనుందని ఐఎండీ తెలిపింది.
Read more »
Cyclone Shakti Updates: উপকূলে আছড়ে পড়তে চলেছে ভয়ংকর তীব্র ঝড়! উত্তাল সমুদ্রে পাহাড়প্রমাণ ঢেউ, তুমুল বৃষ্টি, অ্যালার্ট...cyclone Shakti Updates IMD issues warning Maharashtra braces for heavy rains Sea conditions along coast become rough dangerous due to Cyclone
Read more »
Cyclone Alert: উত্তাল বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়! ওদিকে ট্রপিক্যাল হারিকেনের রক্তচক্ষু... ভয়ংকর ঝড়ের আশঙ্কায় কাঁপছে...Cyclone Alert tropical depression Low pressure forms over BoB rain gusty winds is there any cyclone threat what says IMD
Read more »
