Mewat Gang : நாமக்கல் மாவட்ட வெப்படையில் மாட்டிக் கொண்டவர்கள் மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது.
Mewat Gang : நாமக்கல் மாவட்ட வெப்படையில் மாட்டிக் கொண்டவர்கள் மேவாட் கொள்ளை கும்பலின் பின்னணி அதிர்ச்சி அளிக்கிறது.100 பேர் வரை இந்த கும்பலில் இருக்க வாய்ப்புrelationshipsமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் தீபாவளி பரிசு: அகவிலைப்படி உயர்வு, டிஏ அரியர்.
.. விரைவில் அறிவிப்பு தென்னிந்தியா முழுவதும் கொள்ளைகளை அரங்கேறி வரும் மேவாட் கொள்ளை கும்பல் பற்றிய அதிர்ச்சி பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. கேராளவில் ஏடிம் கொள்ளையில் ஈடுபட்ட மேவாட் கொள்ளை கும்பல், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் வெப்படையில் மாட்டிக் கொண்டது. அவர்களை பிடிக்கும்போது பாதுகாப்புக்காக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்த மேவாட் கொள்ளை கும்பலின் பூர்வீகம் எல்லாம் ஹரியானா மாநிலம். ஆனால், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள். இவர்களின் முழுநேர தொழிலே திருடுவது தான். இந்த கும்பலில் குறைந்தபட்சம் 100 பேர் இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. உண்மையான எண்ணிக்கை இதுவரை வெளியில் தெரியவில்லை. மேலும் படிக்க | வடநாட்டுக் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலி - நாமக்கலில் பரபரப்பு! நாடு முழுவதும் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருடுவதே இக்கொள்ளை கும்பலின் வேலை. குறிப்பாக ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள். பணம் அதிகம் இருக்கும் ஏடிஎம்களை நோட்டமிட்டு திருடிவிடுவார்கள். சரக்கு லாரியில் லோடு ஏற்றிக் கொண்டடு ஒரு கும்பல், தனியாக ஒரு காரில் ஒரு கும்பல், விமானத்தில் ஒரு கும்பல் என ஒரு கொள்ளைக்கு மூன்று குழுக்களாக தனித்தனியாக சென்று சேருவது இவர்களது வழக்கம். கொள்ளை அரங்கேற்றிய பிறகு காரை சரக்கு லாரியில் ஏற்றிக் கொண்டு வேறு பகுதிக்கு கிளம்பிவிடுவார்கள். இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திய காருக்கு பதிவெண் எல்லாம் இருக்காது. அப்படியே பதிவெண் நம்பர் பிளேட் இருந்தாலும் அடிக்கடி அதனை மாற்றிவிடுவார்கள். அதனால் இவர்களை காரை வைத்து பிடிப்பது எல்லாம் இயலாத காரியம். இவர்கள் வசிக்கும் மேவாட் பகுதி மட்டும் அல்ல, அண்டை கிராமங்களுமே திருட்டு பெயர் போன இடங்கள். குறிப்பாக வாகன திருட்டு. டெல்லி, ராஜஸ்தான், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் திருடபடும் வாகனங்கள் எல்லாம் இரண்டு நாட்களில் அடையாளம் தெரியாதளவுக்கு மாற்றிவிடுவார்கள். அதற்கு ஏற்ப டாக்குமென்டுகளையும் ரெடி செய்துவிடுவார்கள். மேவாட், லுகிகாகலான், ஜமால் கார்க், தேவ்லா நங்கிலி, சோர்ஹார்கி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திருட்டு வாகனங்களுக்கு என ஏலமே நடைபெறும். ஏலத்தில் போகாத வாகனங்கள் சில நமிடங்களில் பிரித்து மேயப்பட்டு ஸ்பேர் கடைகளுக்கு பொருட்களாக அனுப்பி வைக்கப்படும். இந்த பகுதிகளில் மார்க்கெட்டில் கிடைக்காத ஸ்பேர்கள் கூட மிக குறைந்த விலையில் கிடைக்கும். இப்போது நாமக்கல் மாவட்டம், வெப்படையில் சிக்கியவர்களின் பின்னணியும் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான். இந்த ஏ.டி.எம் கொள்ளையர்கள் 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் கொள்ளையடிக்க சென்றபோது மாடு திருட வந்ததாக மாட்டிக் கொண்டனர். அப்போது அவர்கள் முகவரியை மாற்றி கொடுத்து வந்துள்ளனர். அவர்கள் புகைப்படம் கைரேகை பதிவாகியுள்ளது. இது தவிர ஆந்திர மாநிலம் கடப்பாவில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இதே கும்பல் atm மெஷின் கொள்ளை அடித்து பணத்தை திருடி உள்ளது. அது மட்டும் இல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டம் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். கொள்ளையில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா கூறும்போது,"இவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்கள் குழு 60 பேர் 70 பேர் கொண்ட கும்பலாக இருக்கிறது. திருடுவதற்கு கைதேர்ந்த ஆறு ஏழு பேரை தேர்வு செய்து மற்றும் ஏடிஎம் மெஷின் வெல்டிங் செய்ய ஒரு நபரும், ஓட்டுநர் ஒரு நபரும் இணைந்து குழுவாக ஏற்கனவே தேர்வு செய்த பகுதிக்கு சென்று கொள்ளையடிப்பதை இவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்" என கூறினார். தற்போது, நாமக்கல்லில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் இருப்பிடம், வங்கி, இருப்பு ஆகியவற்றை தனிப்படை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது. இவர்களை பற்றி விசாரிப்பதற்காகவே அமைக்கப்பட்ட நான்கு குழுவில், ஒரு குழுவினர் இவர்கள் கொள்ளையடித்த பணம் எங்கு செல்கிறது?, யாருக்காவது கொடுக்கிறார்களா? அல்லது சொத்து வாங்கி சேர்த்தார்களா?, வேறு காரணத்துக்கு செலவிடப்படுகிறதா? என்பது குறித்தும் தனிப்படை விசாரிக்கிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!செந்தில் பாலாஜி அப்போ சீட்டிங், பிராடு... இப்போ ஸ்டாலினுக்கு தியாகியா? - ஜெயக்குமார் சரமாரி கேள்விsnake videoOverdoing ExerciseFatty liverவடநாட்டுக் கொள்ளைக் கும்பல் மீது துப்பாக்கிச் சூடு... ஒருவர் பலி - நாமக்கலில் பரபரப்பு!சென்னை : லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குட்டி ஷாப்பிங் மால், மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி விரைவில்அன்ன பறவைக் குஞ்சுகளுக்கு.... இதை விட சிறந்த Z+ பாதுகாப்பு இருக்க முடியுமா என்ன!
ATM Heist Tamil Nadu Mewat Gang Arrested Namakkal Mewat Criminal Network மேவாட் கொள்ளை கும்பல் மேவாட் கொள்ளையர்கள் பின்னணி மேவாட் ஹரியானா Full-Time Thieves In India Mewat Haryana Criminals ATM Theft Techniques Rajesh Kanna Namakkal Police Mewat Gang ATM Heists Mewat Gang Robbery Background Car Theft Network Mewat Stolen Vehicles Auction Mewat Mewat Gang ATM Welding Mewat Criminals Arrested Namakkal Police Investigation Mewat Gang நாமக்கல் மேவாட் கொள்ளை கும்பல் நாமக்கல் மாவட்ட போலீஸ் ஏடிஎம் கொள்ளையடிப்பது எப்படி மேவாட் கும்பல் கொள்ளையடிப்பது எப்படி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »
நினைத்ததை நிறைவேற்றும் முருகன்! கந்தனை சரணடைந்தால் போராட்ட வாழ்க்கையும் பொற்காலம் ஆகும்!Lord Murugan Worship : முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும் முருகனை வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். முருகனின் அருளால் அனைத்து நலன்களும் வந்து சேரும்...
Read more »
WWE பாடிஸ்டாவா இது... எப்படி இருந்த மனுசன்... இப்படி ஆனது ஏன்...?Dave Bautista: நல்ல உடல்கட்டுடன் திடகாத்திரமாக இருந்த WWE சூப்பர்ஸ்டார் டேவ் பாடிஸ்டா இப்போது உடல் எடை குறைந்து வித்தியாசமாக மாறிவிட்டார். இதன் பின்னணி இங்கு விரிவாக காணலாம்.
Read more »
ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் புத்தம் புது திரைப்படங்கள்! முழு லிஸ்ட் இதோ..
Read more »
’நான் ரெடி, என்னை டீமில் எடுக்கலாம்’ பிசிசிஐக்கு தூது அனுப்பிய வேகப்பந்துவீச்சாளர்Mohammed Shami : காயம் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையடாமல் இருந்த முகமது ஷமி, முழு உடல்தகுதியை எட்டிவிட்டதாக பிசிசிஐக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
Read more »
தெலுங்கானா முதலமைச்சர் 7 நாளில் 32 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - முன்னாள் அமைச்சர் பா.வாளர்மதிஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி.
Read more »
