முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி...

Indian Women Cricket Team News

முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி...
India Women's National Cricket TeamICC Womens World Cup 2025Team India Won ICC Womens World Cup 2025 Champion
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 181 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி முதல்முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்துள்ளது.

India-W vs South Africa-W: தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி முதல்முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்துள்ளது.இன்னும் 35 நாட்களில் மிதுனத்தில் குரு பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, நல்ல நாட்கள் தொடங்கும்ஐப்பசி மாத பவுர்ணமி.

. கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்.. நோட் பண்ணுங்க ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டி ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் தங்களின் முதல் ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் இரண்டு மணிநேரம் தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும், ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் லாரா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் தங்களின் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றங்களையும் செய்யவில்லை. தொடர்ந்து, இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஓபனர்கள் ஸ்மிருதி மந்தனா - ஷபாலி வர்மா ஆகியோர் சிறப்பான ஓபனிங்கை கொடுத்தனர். பவர்பிளேவில் இந்தியா 64 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்தது. இந்த ஜோடி 104 ரன்களை எடுத்தது.ஸ்மிருதி மந்தனா 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து ஜெமிமா உடன் ஜோடி சேர்ந்த ஷாபாலி அதிரடியாக ரன்களை குவித்தார். இருப்பினும் அவர் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜெமிமா 24, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 20, அமன்ஜோத் சிங் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். தீப்தி சர்மா ஒரு முனையில் நிதானமாக ரன்களை சேர்த்து வந்தார். 7வது பேட்டராக வந்த ரிச்சா கோஷ் முதல் பந்திலேயே சிக்ஸருடன் தொடங்கினார். அவரும் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உடன் 34 ரன்களை எடுத்து கடைசிக்கு முந்தைய ஓவரில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் தீப்தி சர்மா ரன் அவுட்டானரா். அவர் 58 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸர் உடன் 58 ரன்களை அடித்திருந்தார்இதன்மூலம் இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 298 ரன்களை எடுத்தது. தென்னாப்பிரிக்கா மகளிர் அணி தரப்பில் காகா 3 விக்கெட்டையும், மலாபா, கிளெர்க், ட்ரையான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து 299 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. தென்னப்பிரிக்காவின் தொடக்க ஜோடியான லாரா மற்றும் பிரிட்ஸ் நிதானமாக இன்னிங்ஸை கட்டமைத்தனர்.பிரிட்ஸ் 23 ரன்கள் எடுத்தபோது ரன் அவுட்டானார். அடுத்து ஸ்ரீ சரணி பந்துவீச்சில் பாஷ் டக்அவுட்டானார். அடுத்து லாரா உடன் லூஸ், 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஷாபாலி வர்மா பந்துவீச வந்த நிலையில் அவரது அடுத்தடுத்த ஓவர்களில் லூஸ் 25, மாரிசான் காப் 4 ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். விக்கெட் கீப்பர் பேட்டரான ஜாப்டாவும் 16 ரன்களில் தீப்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கு பின் ஜோடி சேர்ந்த லாரா - டெர்க்ஸன் ஆகியோர் 61 ரன்களை சேர்த்தனர். தீப்தி சர்மா வீசிய 42வது ஓவரில் டெர்க்ஸன் 35 ரன்களுக்கும், சதம் அடித்த லாரா 101 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்த ஓவர் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. லாரா கொடுத்த கேட்ச்சை அமன்ஜோத் கவுர் தட்டித் தட்டி மூன்றாவது முறையாக பிடித்தார். 1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் பிடித்த விவியன் ரிச்சர்ஸின் கேட்ச், 2024 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் பிடித்த மில்லரின் கேட்ச்சிற்கு ஒப்பானது. கடைசியில் க்ளெர்க் மட்டும போராட, தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி முதல்முறையாக ஐசிசி மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை வென்று வரலாறு படைத்துள்ளது.I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Senior Citizens Card: மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசின் பரிசு.. என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?ஆளுங்கட்சி வேட்பாளர் அதிரடி கைது... அதுவும் கொலை வழக்கில்... பீகாரில் பரபரப்புகூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி.. கோயிலுக்கு சென்ற இடத்தில் சோகம்.. ஆந்திராவில் பரபரப்பு!SIR: அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் போது... விஜய் போட்ட திடீர் குண்டு!IPL 2026 Mini Auction

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Women's National Cricket Team ICC Womens World Cup 2025 Team India Won ICC Womens World Cup 2025 Champion IND W Vs SA W IND W Vs SA W Final IND W Vs SA W Final Highlights Team India Prize Amount For ICC Womens World Cup 2025 Championship Prize Amount For ICC Womens World Cu IND W Vs SA W Match News Deepti Sharma Shafali Verma இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இந்திய மகளிர் தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இந்தியா மகளிர் Vs தென்னாப்பிரிக்கா மகளிர் இறுதிப் தீப்தி சர்மா ஷஃபாலி வர்மா ஷபாலி வர்மா ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 சாம்பியன் அணிக்கான இந்திய அணி

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

DUSU Election: दिल्ली यूनिवर्सिटी में छात्र संघ का चुनाव, 52 कॉलेजों के 2.75 लाख छात्र डालेंगे वोटDUSU Election: दिल्ली यूनिवर्सिटी में छात्र संघ का चुनाव, 52 कॉलेजों के 2.75 लाख छात्र डालेंगे वोटराज्य DUSU Election: दिल्ली यूनिवर्सिटी में छात्र संघ का चुनाव, 52 कॉलेजों के 2.75 लाख छात्र डालेंगे वोट DUSU Election today 2.75 Lakh voters of 52 Colleges
Read more »

बहराइच के राजकीय माध्यमिक स्कूलों मे शिक्षा व्यवस्था होगी मजबूत, 52 विद्यालयों में भेजी गई 1.25 करोड़ की धनराशिबहराइच के राजकीय माध्यमिक स्कूलों मे शिक्षा व्यवस्था होगी मजबूत, 52 विद्यालयों में भेजी गई 1.25 करोड़ की धनराशिबहराइच के 52 राजकीय माध्यमिक विद्यालयों में शिक्षा व्यवस्था को सुदृढ़ करने हेतु 1.
Read more »

नेपाल: प्राकृतिक आपदाओं में 52 लोगों की मौतनेपाल: प्राकृतिक आपदाओं में 52 लोगों की मौतनेपाल: प्राकृतिक आपदाओं में 52 लोगों की मौत
Read more »

बुक रिव्यू- मंजिल तक पहुंचाने वाले ‘सक्सेस प्रिंसिपल्स’: चुनौतियों से कैसे लड़ें, आगे बढ़ें, सफलता के 52 गुरु...बुक रिव्यू- मंजिल तक पहुंचाने वाले ‘सक्सेस प्रिंसिपल्स’: चुनौतियों से कैसे लड़ें, आगे बढ़ें, सफलता के 52 गुरु...Success Principles: 52 Hafte Safalta Ke 52 Guru Mantra Book Review - What is the book about.
Read more »

जेल के खाते से 53 लाख निकालने के मुख्य आरोपित की मां गिरफ्तारजेल के खाते से 53 लाख निकालने के मुख्य आरोपित की मां गिरफ्तारआजमगढ़ जिला कारागार से 52.
Read more »

सितंबर में चीन ने 6 लाख 52 हजार ऑटो गाड़ियों का निर्यात कियासितंबर में चीन ने 6 लाख 52 हजार ऑटो गाड़ियों का निर्यात कियासितंबर में चीन ने 6 लाख 52 हजार ऑटो गाड़ियों का निर्यात किया
Read more »



Render Time: 2026-04-01 22:04:39