கழுத்து சுளுக்கு காரணமாக சுப்மான் கில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்திய ஓடிஐ அணியின் கேப்டன்ஸி மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்
IND vs SA: கழுத்து சுளுக்கு காரணமாக சுப்மான் கில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இந்திய ஓடிஐ அணியின் கேப்டன்ஸி மீண்டும் ரோஹித் சர்மா வுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.வரும் நவ.
30ஆம் தேதி ஓடிஐ தொடர் தொடங்குகிறது.இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரபல நடிகை! த்ரிஷா, நயன்தாரா கூட இல்ல..தென்னாப்பிரிக்க அணி தற்போது இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், ஐந்து டி20ஐ போட்டிகள் என டிசம்பரின் பிற்பகுதி வரை இந்தச் சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது.முதல் டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணி பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் நவ. 22ஆம் தேதி கௌகாத்தி நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சி என்றால், கேப்டன் சுப்மான் கில்லுக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 பந்துகளை சந்தித்தபோது அவருக்கு கழுத்து சுளுக்கு ஏற்பட்டது. அதன்பின் அவர் பேட்டிங் செய்யவே இல்லை. இந்திய அணி இரண்டு இன்னிங்ஸில் 10 பேட்டர்களுடன் மட்டுமே விளையாடியிருந்தது. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் சுப்மான் கில், எப்போது அணிக்கு திரும்புவார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும், இன்னும் மூன்று நாள்களில் தொடங்க இருக்கும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ரிஷப் பண்ட் முதல் போட்டியை போல், 2வது போட்டியிலும் கேப்டன்ஸியை கவனித்துக்கொள்வார் எனலாம். சுப்மான் கில் விலகல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை, ரஞ்சி கோப்பை 5வது சுற்று முடிவடைவதால் இன்று கில்லின் மாற்று வீரர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.டெஸ்ட் தொடர் ஒருபுறம் இருக்க, வரும் நவ. 30ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வியே தற்போது எழுந்திருக்கிறது. கடந்த மாதம் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், இந்திய ஓடிஐ அணியின் கேப்டனாக சுப்மான் கில் மற்றும் துணை கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் செயல்பட்டனர். கில் கழுத்து சுளுக்கு காரணமாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் மண்ணீரல் காயம் காரணமாகவும் தொடரில் விளையாட வாய்ப்பு குறைவு எனலாம். ஷ்ரேயாஸ் ஐயர் குணமடைய இன்னும் சில மாதங்கள் எடுக்கலாம் என்றும் சுப்மான் கில் இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை மட்டும் தவறவிடலாம் என கூறப்படுகிறது.இந்தச் சூழலில், இந்திய அணியின் ஓடிஐ கேப்டன்ஸி மீண்டும் ரோஹித் சர்மாவின் வசம் வரலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணியை பொருத்தவரை கில் கடந்த ஆஸ்திரேலிய தொடரில்தான் ஓடிஐ கேப்டன்ஸியை பெற்றார். தற்போது 2வது தொடரிலேயே அவர் விளையாட வாய்ப்பில்லை என்ற நிலையில், துணை கேப்டனும் இல்லாத சூழலில் முந்தைய கேப்டனான ரோஹித் வசம் கேப்டன்ஸி செல்வதே சரியாக இருக்கும் என இணையத்தில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ரோஹித் சர்மா டி20ஐ மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஓடிஐ போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிஐ ஸ்குவாடில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து கே.எல். ராகுல் மட்டுமே சீனியராக உள்ளார்.ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் காயத்தில் இருந்து குணமடைந்து தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடரில் விளையாட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை கேப்டன்ஸி ரோஹித் சர்மா வசம் செல்லாதபட்சத்தில், கேஎல் ராகுல் அல்லது ஹர்திக் பாண்டியா ஓடிஐ அணியின் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புள்ளது. கேஎல் ராகுல் இதுவரை 12 ஓடிஐ போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 8 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஹர்திக் பாண்டியா இதுவரை 3 ஓடிஐ போட்டிகளில் மட்டுமே கேப்டனாக செயல்பட்டிருக்கிறார். அதில் இரண்டில் வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார்.மறுமுனையில், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 56 போட்டிகளில் விளையாடி, 42 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது. 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும்போது ஓடிஐ தொடருக்கான இந்திய ஸ்குவாட் அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.மேலும் படிக்க | 2வது டெஸ்ட்டில் இருந்து விலகும் சுப்மன் கில்.. அவருக்கு பதில் வரும் CSK வீரர்? முழு விவரம்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.Bigg Boss 9மேல்மருவத்தூர் தைப்பூசம், இருமுடி விழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு அறிவிப்புபிசிசிஐ கதவை உடைக்கும் ருதுராஜ்! தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரில் வாய்ப்பு?
Rohit Sharma ODI Captaincy IND Vs SA India Vs South Africa India Vs South Africa ODI Series Team India ODI Squad Team India ODI Captaincy Shubman Gill Injury Updates Shreyas Iyer Injury Updates Rohit Sharma May Get Captaincy Once Again IND Vs SA ODI Schedule IND Vs SA Shubman Gill Replacement IND Vs SA 2Nd Test IND Vs SA ODI Latest News IND Vs SA ODI Squad KL Rahul Hardik Pandya KL Rahul ODI Captaincy Records Hardik Pandya ODI Captaincy Records ரோஹித் சர்மா ரோஹித் சர்மா ஓடிஐ கேப்டன்ஸி மீண்டும் கேப்டனாகும் ரோஹித் சர்மா சுப்மான் கில் கழுத்து சுளுக்கு சுப்மான் கில் காயம் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் சுப்மான் கில் காயம் அப்டேட் சுப்மான் கில் விளையாடுவாரா சுப்மான் கில் மாற்று வீரர் யார் இந்தியா தென்னாப்பிரிக்கா இந்தியா தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர் இந்தியா தென்னாப்பிரிக்கா ஓடிஐ தொடர் அட்டவணை இந்தியா ஓடிஐ ஸ்குவாட் அறிவிப்பு எப்போது இந்தியா ஓடிஐ கேப்டன் கேஎல் ராகுல் ஹர்திக் பாண்டியா கேஎல் ராகுல் ஓடிஐ கேப்டன்ஸி ஹர்திக் பாண்டியா ஓடிஐ கேப்டன்ஸி
