பெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் உடலுக்கு பூஜை செய்த மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Venus Transitரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Lord Shaniபெரம்பலூரில் இறந்த தாயை உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் மகன், அவரது உடலுக்கு பூஜை செய்திருக்கிறார்.
துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் ரோவர் ஆர்ச் சாலையில், முத்து நகரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு இருக்கிறது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் படிக்க | திருவொற்றியூர் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த வீடியோ வைரல்! கொலை மிரட்டல் விடுத்தவர் கைது! இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அழுகிய நிலையில், காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டியும், புகைப்படக் கலைஞரான ஸ்ரீராம் என்ற 35 வயது மதிக்கத்தக்க ஆணும் தூக்கில் தொங்கிய நிலையிலும், சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்,இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியின் சடலத்தின் அருகே எலுமிச்சை பழம், தர்ப்பைப்புல் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெரம்பலூர் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், உயிர்த்தெழுவார் என இறந்த தாயின் சடலத்திற்கு அவரது மகன் பூஜை செய்திருக்கலாம் என சந்தேகம் கொண்டனர். அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் மனம் உடைந்து மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்திருக்கிறது. தாயும், மகனும் ஒரே இடத்தில் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், இது குறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!Ajith Kumar5 ஆண்டுகளில் ரூ. 24 லட்சம் வரை வருமானம்... ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்யலாம் - இதை பாருங்க!Kamal HaasanVenus Transit
Son Commits Suicide After Mother's Death பெரம்பலூர் தாய் மகன் தற்கொலை உயிர்தெழுவார் இறந்த தாய் உடலுக்கு பூஜை பெரம்பலூர் காவல்துறை Rituals To Revive Dead Mother Perambalur Perambalur Mother-Son Death Incident Son Performs Pooja For Deceased Mother Perambalur Double Death Investigation Perambalur Tragic Incident News Police Investigation Perambalur Suicide Unfortunate Perambalur Mother-Son Case Perambalur Pooja Suicide Tragedy
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
வைட்டமின் பி12 அதிகமாக எடுத்து கொண்டால் இவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுமா?வைட்டமின் பி 12 உடலுக்கு தேவை என்றாலும் அதிகப்படியாக எடுத்து கொண்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
தொடரும் ரயில் விபத்துகள்... தடுக்கும் Kavach வேலை செய்யவில்லையா?Kanchanjungha Express Train Accident: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு அமைப்பான Kavach என வேலை செய்யவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Read more »
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பில் மாற்றம் வருமா? எதிர்பார்க்கும் தேர்வர்கள்டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது என்பதால் அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Read more »
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
Read more »
டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை! மேட்டுப்பாளையத்தில் சோகம்!Suicide In Mettupalayam : பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டதால் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளான அரசுத்துறையில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!
Read more »
மயிலாடுதுறையில் திருமணமான பெண் தூக்கிட்டு தற்கொலை: பெண்ணின் பெற்றோருக்கு மிரட்டல்மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், கலைச்செல்வியின் மரணம் கொலையா? தற்கொலையா என உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீர்வரிசை பொருட்களை மீட்டுத்தரவும் வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
Read more »
