EPFO : மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தின்படி அனைத்து நிறுவனங்களுக்கும் பிஎப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தின்படி அனைத்து நிறுவனங்களுக்கும் பிஎப் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட புதிய விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.புதிய தொழிலாளர் நலச் சட்டம் அமல்இந்த வார டாப் 5 சீரியல்கள்! பின்னுக்கு சென்ற ‘சிறகடிக்க ஆசை’.
.முதல் இடத்தில் யார்?horoscopeEPFO : நாடு முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் வர்கத்துக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பை மத்திய அரசு கொடுத்துள்ளது. அதாவது, இன்று முதல் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இப்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகள் மூலம் பணி நியமன ஆணை மற்றும் பிஎப் உள்ளிட்டவை அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர என்னென்ன சிறப்பம்சங்கள் என்பதை இங்கே பார்க்கலாம்.மத்திய அரசின் தொழிலாளர் சட்டம் : புதிதாக என்னென்ன விதிகளில் மாற்றங்கள்?பழைய விதிமுறையில், வேலைவாய்ப்பில் பணி நியமன ஆணை கட்டாயம் இல்லை. இதனால், பல தொழிலாளர்கள் வேலை பாதுகாப்பு இல்லாமல், வாய்மொழி ஒப்பந்தங்களின் அடிப்படையில் பணிபுரிந்தனர். இனி அப்படி வேலைக்கு ஒருவரை அமர்த்த முடியாது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.சீர்திருத்தத்திற்கு முன் EPF, ESIC ஆகியவை ஒரு சில தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தன. அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிக அளவில் சமூகப் பாதுகாப்பு அற்ற நிலையில் இருந்தனர். ஆனால், புதிய விதிமுறைப்படி, கிக் தொழிலாளர்கள், பிளாட்ஃபார்ம் தொழிலாளர்கள் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்புக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் PF, ESIC, காப்பீடு மற்றும் பிற சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கும்.குறைந்தபட்ச ஊதியச் சட்டம், அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்களுக்கு மட்டுமே முன்பு இபொருந்தியது. இதனால், பல பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய பாதுகாப்பு இன்றி இருந்தனர். ஆனால், புதிய விதிமுறைப்படி, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சட்டரீதியான குறைந்தபட்ச ஊதியம் பெறுவது உரிமையாகக் கிடைத்துள்ளது.முன்பு தொழிலாளர்களுக்கு இலவச வருடாந்திர மருத்துவப் பரிசோதனை வழங்க முதலாளிகளுக்கு எந்தச் சட்டப்பூர்வ கட்டாயமும் இல்லை. ஆனால், புதிய விதிமுறைப்படி இனி 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் முதலாளிகள் வருடாந்திர இலவச மருத்துவப் பரிசோதனை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பழைய சட்டங்களின்படி, இரவு நேரப் பணி மற்றும் சில தொழில்களில் பெண்கள் வேலை செய்வதற்குத் தடைகள் இருந்தன. நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய சட்டங்களின்படி, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அவர்களின் சம்மதத்தின் பேரில், பெண்கள் இரவு நேரப் பணி மற்றும் அனைத்து வகையான வேலைகளிலும் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.சீர்திருத்தத்திற்கு முன்பு ESIC பாதுகாப்பு குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. 10 ஊழியர்களுக்குக் குறைவான நிறுவனங்கள் பொதுவாக இதில் இருந்து விலக்கப்பட்டன. ஆனால், இப்போது ESIC பாதுகாப்பு மற்றும் பலன்கள் பான்-இந்தியா அளவில் விரிவாக்கப்பட்டுள்ளன. ஆபத்தான செயல்முறைகளில் ஈடுபடும் நிறுவனங்களில் ஒரு ஊழியர் இருந்தாலும் ESIC கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 10-க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தானாக முன்வந்து சேரலாம்.சீர்திருத்தத்திற்கு முன், பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் கீழ், பல பதிவுகள், உரிமங்கள் மற்றும் ரிட்டன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. இது நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியது. இனி வரும் காலங்களில் ஒரே பதிவு, பான்-இந்தியா அளவில் ஒரே உரிமம் மற்றும் ஒரே ரிட்டன்ஸ் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நடைமுறைகளை எளிமையாக்குவதுடன், நிறுவனங்களின் சுமையைக் கணிசமாகக் குறைக்கிறது.மேலும் படிக்க | EPS Pension: 15 ஆண்டு சர்வீஸ் செய்த தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.South Indian Film“மாதம்பட்டி ரங்கராஜ் தலைமறைவு?” ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட புது போஸ்ட்! என்ன கூறியிருக்கிறார்?RBI Repo Rate Cut: கார், வீட்டுக் கடன் EMI குறையப்போகிறது.. டிசம்பரில் முக்கிய அறிவிப்பு!Ind vs SAEps PensionLife Certificate ஆயுள் சான்றிதழ்: ஓய்வூதியதாரர்கள் Jeevan Pramaan போர்டல், UMANG செயலி மூலம் DLC சமர்ப்பிப்பது எப்படி?
Epfo New Labour Law India PF Mandatory Update EPF Rules 2025 ESIC Mandatory Central Government Labour Code பிஎப் இபிஎப்ஓ மத்திய அரசு தொழிலாளர் சட்டம் புதிய தொழிலாளர் சட்டம் மத்திய அரசு அறிவிப்பு Minimum Wage Law India Appointment Letter Mandatory Workers Rights India Labour Reform 2025 PF Rules For Gig Workers ESIC For All Companies New Labour Code Features
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மிகப்பெரிய குட் நியூஸ்!EPFO : ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டிற்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவை வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, EPFO இடையே இன்று கையெழுத்தானது.
Read more »
EPFO Digital Life Certificate: BIG NEWS! কোটি কোটি পেনশনভোগীর জন্য EPFO নিয়ে এল দারুণ সুবিধা...EPFO Digital Life Certificate: EPFO Brings Big Relief for Pensioners Get Digital Life Certificate Free at your doorstep
Read more »
இபிஎஃப்ஓ (EPFO) புதிய விதிகள்: 75% பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்?EPFO New Rules 2025: இபிஎஃப்ஓ (EPFO) புதிய விதிகளின் ஒருவர் 75% பிஎஃப் பணத்தை எப்போது எடுக்கலாம்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »
ಈಗ ಸುಲಭವಾಗಿ ಸಿಗುತ್ತೆ ಡಿಜಿಟಲ್ ಲೈಫ್ ಸರ್ಟಿಫಿಕೇಟ್, ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಜಾಕ್ಪಾಟ್EPFO: ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ನೆರವಾಗುವ ನಿಟ್ಟಿನಲ್ಲಿ ನೌಕರರ ಭವಿಷ್ಯ ನಿಧಿ ಸಂಸ್ಥೆ(EPFO) ಹೊಸ ಸೇವೆ ಆರಂಭಿಸಿದೆ. ಇದರಿಂದ ಲಕ್ಷಾಂತರ ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಬಿಗ್ ರಿಲೀಫ್ ಸಿಕ್ಕಂತಾಗಿದೆ.
Read more »
EPFO: ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಹೊಸ ಸೌಕರ್ಯ ಡಿಜಿಟಲ್ ಲೈಫ್ ಸರ್ಟಿಫಿಕೇಟ್ ಸಲ್ಲಿಸಲು ಇಲ್ಲಿದೆ ಸುಲಭ ಮಾರ್ಗEPFO News: ನೌಕರರ ಭವಿಷ್ಯ ನಿಧಿ ಸಂಸ್ಥೆ (EPFO) ಇದೀಗ ಪಿಂಚಣಿದಾರರ ದೊಡ್ಡ ಸಮಸ್ಯೆ ಒಂದನ್ನು ಪರಿಹರಿಸಿದೆ. ಪಿಂಚಣಿದಾರರು ತಮ್ಮ ಪ್ರಮುಖ ಕೆಲಸವನ್ನು ಮನೆ ಬಾಗಿಲಿನಲ್ಲೇ ಪೂರ್ಣಗೊಳಿಸಲು ಇದು ಸಹಕಾರಿ ಆಗಲಿದೆ.
Read more »
EPFO: ಪಿಎಫ್ ಸಂಬಳ ಮಿತಿ ಏರಿಕೆ, 11ವರ್ಷಗಳ ಬಳಿಕ ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಭರ್ಜರಿ ಜಾಕ್ಪಾಟ್EPFO Latest Update: ನೌಕರರ ಭವಿಷ್ಯ ನಿಧಿ ಸಂಸ್ಥೆ (EPFO) ಇಪಿಎಫ್ ಮತ್ತು ಇಪಿಎಸ್ ಸಂಬಂಧಿಸಿದಂತೆ ಪ್ರಮುಖ ಸುಧಾರಣೆಗೆ ಮುಂದಾಗಿದ್ದು ಇದರಿಂದ ಕೋಟ್ಯಾಂತರ ಉದ್ಯೋಗಿಗಳು, ಪಿಂಚಣಿದಾರರಿಗೆ ಹೆಚ್ಚಿನ ಪ್ರಯೋಜನವಾಗಲಿದೆ.
Read more »
