பள்ளி, கல்லூரி முடித்தவர்களுக்கு மாத உதவித் தொகை

Tamil Nadu Government Unemployment Allowance News

பள்ளி, கல்லூரி முடித்தவர்களுக்கு மாத உதவித் தொகை
Tnvelaivaaippu.Gov.Inவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்தமிழ்நாடு அரசு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 157 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 104%
  • Publisher: 63%

Tamil Nadu Government : பள்ளி, கல்லூரி முடித்தவர்கள் தமிழ்நாடு அரசின் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu Government : பள்ளி, கல்லூரி முடித்தவர்கள் தமிழ்நாடு அரசின் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் Tamil Nadu Government : பள்ளி, கல்லூரி முடித்தவர்கள் தமிழ்நாடு அரசின் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்தமிழ்நாட்டில் தஞ்சாவூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இப்போது வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசால் 2006-ம் ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். 2020-ம் ஆண்டு செப்டம்பர் -30-ம் தேதியன்று அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200/-ம் பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-ம் மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-ம் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-ம் என வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற தாங்கள் பொதுப்பிரிவினராக இருந்தால் 40 வயதிற்குள்ளும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600/-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-ம், உதவித்தொகையாக 10- ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. பதிவுசெய்து 2025-ம் ஆண்டு செப்டம்பர் - 30-ம் தேதி அன்று ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் உதவி தொகை பெற பதிவு செய்து 1 ஆண்டு முடிவுற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரராக இருந்தால் அனைத்து வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. அவ்வாறு வயது வரம்பு ஏதுமின்றி உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை இதுவரை எங்கும் பெறவில்லை என தங்கள் ஊரின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் சுயசான்று அளித்து உதவித்தொகை பெற்றுக்கொள்ளலாம். உதவித்தொகை பெறும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேர மாணவராக இருத்தல் கூடாது. ஆயினும் தொலைதூரக்கல்வி பயில்பவராக இருக்கலாம். அரசுத்துறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெறும் எந்த பதவியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பிலோ ஈடுபடுபவராக இருக்கக்கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும். மேலும் எந்த ஒரு அரசு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருத்தல் கூடாது. தகுதி உடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை https://tnvelaivaaippu.gov.in 61603 இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தில் அனைத்து கலங்களையும் முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து கல்வி சான்றிதழ்கள் ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் ஆகஸ்ட் மாதத்திற்குள் அலுவலக வேலைநாட்களில் மணிமண்டபம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தஞ்சாவூரில் நேரில் அளிக்க வேண்டும். உதவித்தொகை ஏற்கெனவே பெற்று வருவோரின் கவனத்திற்கு: அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கு பத்து வருடங்களுக்கும், பொதுப்பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை தொடங்கிய காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். அவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் அளிக்கத் தவறியவர்கள் உடன் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து தவறாது நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் அளிக்க வேண்டும்ரூ.20 லட்சம் வீட்டுக் கடன்... கடன் முடியும்போது கையில் ரூ.24 லட்சம் - அது எப்படி?விஜய்-அஜித்திற்கு பிடித்த நடிகை! இப்போ படங்களில் நடிப்பதே இல்லை-யார் தெரியுமா?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tnvelaivaaippu.Gov.In வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு அரசு லேட்டஸ்ட் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு TN Government Youth Assistance Unemployment Stipend Tamil Nadu Apply Unemployment Benefits TN TN Allowance For Graduates Unemployment Scheme Tamil Nadu 2025 Government Help For Jobless Youth TN

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பேக்கரி பிசினஸ் ஸ்டார்ட் பண்ண சூப்பர் சான்ஸ்! 4 நாள் அட்வான்ஸ் ட்ரெய்னிங்பேக்கரி பிசினஸ் ஸ்டார்ட் பண்ண சூப்பர் சான்ஸ்! 4 நாள் அட்வான்ஸ் ட்ரெய்னிங்Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு அட்வான்ஸ் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சியை கொடுக்க உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Read more »

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
Read more »

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் வரும் அதிரடி மாற்றம்!தமிழ்நாடு அரசு- மாருதி ஒப்பந்தம்டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் வரும் அதிரடி மாற்றம்!தமிழ்நாடு அரசு- மாருதி ஒப்பந்தம்Tamil Nadu Government : டிரைவிங் லைசென்ஸ் இனி மனித தலையீடு இன்றி தானியங்கி சோதனை முறையில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read more »

Tamil Nadu Govt To Introduce Bill Banning Hindi Hoardings And Films Across StateTamil Nadu Govt To Introduce Bill Banning Hindi Hoardings And Films Across StateThe Tamil Nadu government plans to introduce a bill to ban Hindi hoardings and Hindi-language films across the state.
Read more »

தீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புதீபாவளி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளை வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேரக்கட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »

தீபாவளி முன்னெச்சரிக்கை : விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புதீபாவளி முன்னெச்சரிக்கை : விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புTamil Nadu Government : தீபாவளி விபத்து பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Read more »



Render Time: 2026-04-02 21:04:20