தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்! ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு அப்டேட்

Tamil Nadu Government News

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்! ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு அப்டேட்
Tamil Nadu Farmers UpdateOnline Kezhvaragu Saleதமிழ்நாடு அரசு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 241 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 142%
  • Publisher: 63%

Tamil Nadu Government : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆன்லைன் விற்பனை, தென்னை காப்பீடு தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு 2 முக்கிய அறிவிப்புகள்! ஆன்லைன் விற்பனை , தென்னை காப்பீடு அப்டேட் Tamil Nadu Government : தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஆன்லைன் விற்பனை , தென்னை காப்பீடு தொடர்பான 2 முக்கிய அறிவிப்புகள் அரசிடமிருந்து வெளியாகியுள்ளது.

Most Expensive ipl playersRation CardTamil Nadu Government : தமிழ்நாடு விவசாயிகளுக்கு இந்த வாரத்தில் முக்கிய அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், பிஎம் கிசான் திட்டத்திற்கு தேவையான விவசாயிகள் பதிவெண் பெறாத விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதைப்போலவே, இன்னொரு இரண்டு முக்கிய அறிவிப்புகள் விவசாயிகளுக்காக வெளியாகியுள்ளது. ஆன்லைனில் கேழ்வரகு விற்பனை, தென்னை காப்பீடு தொடர்பான அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது.கேழ்வரகு கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை விற்பனை செய்து பயன்பெற இணையவழி பதிவு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் என சேலம் மாட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை விற்பனை செய்து பயன்பெற இணையவழி பதிவு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம். தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவு. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அரசாணையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் இந்திய அரசின் பரவலாக்கப்பட்ட கேழ்வரகு கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கேழ்வரகு பணிகள் நடைபெற்று வருகிறது.விவசாயிகள் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு கேழ்வரகு விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள e-DPC இணையத்தில் எதிர்வரும் கொள்முதல் பருவம் 2025-2026 ல் விவசாயிகள் தங்களது பெயர். ஆதார் எண், புல எண். வங்கிக்கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில்ஆகிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. கே.எம்.எஸ் 2025-2026 ஆம் பருவத்திற்கு கேழ்வரகு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.4886/. ஆதாரவிலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மேற்காணும் இணையதளத்தில் எதிர்வரும் கே.எம்.எஸ் 2025- க்கு டிசம்பர் மாதம் முதல் இணைய வழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு ஓமலூர் மற்றும் மேட்டூர் வட்டம் பெரியசோரகை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு தேவையான வருவாய் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறும், அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையத்தின் பெயர், கேழ்வரகு" விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். விவசாயிகள் தங்களது அலைபேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த கேழ்வரகினை விற்பனை செய்து பயன்பெற்று, இந்த இணையவழி பதிவு திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் ஒத்துழைப்பு நல்கிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டல மேலாளர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம் நெம்பர் 528. திருச்சி மெயின் ரோடு. சீலநாயக்கன்பட்டி, சேலம் -636201 என்ற முகவரியிலோ அல்லது 94431 18108 / 9677054961/ 9600814730/ 8675842600 என்ற செல்லிடப்பேசி எண்களிலோ தொடர்பு கொண் பயன்பெறலாம்.சேலம் மாவட்டத்தில் தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் 13,661 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபாடி செய்யப்பட்டு வருகிறது. புயல், வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளினால் தென்னை மரம் அதன் உற்பத்தி திறனை இழக்கும்போது ஏற்படும் பாதிப்பிலிருந்து தென்னை விவசாயிகளை காக்க தென்னை காப்பீடு திட்டம் தமிழ்நாட்டில் தென்னை வாரியத்தின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 4 முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.2.25/ மரம் பிரிமீயம் தொகையாகவும் இழப்பீட்டு தொகையாக ரூ.900/மரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், 16 முதல் 60 வயது வரை உள்ள மரங்களுக்கு ரூ.3.50/ மரம் பிரிமீயம் தொகையாகவும் இழப்பீட்டு தொகையாக ரூ.1750/- ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள் ஆதார் நகல், அடங்கல், நில வரைபடம், வங்கி கணக்கு புத்தக நகல், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரைவோலை போன்ற ஆவணங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.எனவே, அனைத்து தென்னை விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் தென்னை பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம்.மேலும் படிக்க | Ration Card : PHH, PHH-AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!New Ration Cardவிக்ரம் பிரபு நடிக்கும் சிறை படத்தின் டிரெய்லர்! வெளியிட்ட நடிகர் தனுஷ்!CSKMumbai Indiansரயிலில் ரீல்ஸ் பார்த்தால் அபராதம்! ரயில்வே புது ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சிக்கோங்க

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Farmers Update Online Kezhvaragu Sale தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கான அறிவிப்புகள் தென்னை காப்பீடு கேழ்வரகு விற்பனை ஆன்லைன் விற்பனை Coconut Insurance Tamil Nadu TNCSC Procurement News Agriculture Department Announcement Farmers Scheme Tamil Nadu Crop Insurance Update

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைTamil Nadu government Warining | தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு (Tamil Nadu government free scooter scheme) மாற்றுத் திறனாளிகள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Tamil Nadu Government : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.
Read more »

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.66000 உதவித் தொகை10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.66000 உதவித் தொகைTamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சியுடன் ரூ.66000 உதவித் தொகை வழங்குகிறது.
Read more »

பாலிடெக்னிக் பசங்களா... ஆல் கிளியர் பண்ண சூப்பர் வாய்ப்புபாலிடெக்னிக் பசங்களா... ஆல் கிளியர் பண்ண சூப்பர் வாய்ப்புTamil Nadu Government: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், ஆல்-கிளியர் செய்ய அருமையான வாய்ப்பு
Read more »

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!Tamil Nadu government : ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை, சுயதொழில், இலவச மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்Tamil Nadu Government: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்போர், இந்த ஆவணங்களை இன்றே ரெடியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
Read more »



Render Time: 2026-04-02 22:27:38