Government Employees and Teachers: தமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு.
Tamil Nadu Government Employees Salary: தமிழக பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
October 2024 அக்டோபர் 1, 2024, இன்று முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி விலை, ஆதார், அகவிலைப்படி... முழு லிஸ்ட் இதோதமிழக பள்ளி கல்வித்துறை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்த மத்திய அரசு. இதன் காரணமாக மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. பண்டிகை நாட்களுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி, அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15,000 பேருக்கு செப்டம்பர் மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சம்பளம் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் மத்திய அரசு எனக்கூறப்படுகிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.573 கோடி நிதி இன்னும் கொடுக்காமல் இருப்பதால், நிதி பற்றாக்குறை காரணமாக 15,000 பேரும் சம்பளத்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. பள்ளி கல்வித்துறைக்கு என மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் தனித்தனியாக திட்டங்கள் உள்ளன. அந்தந்த அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு வருகின்றன. மறுபுறம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பில்"ஒருங்கிணைந்த கல்வித் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க - TN School Holidays | காலாண்டு விடுமுறை! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்த முக்கிய அப்டேட் இந்த ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் அரசு மாநில அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சமக்ரா சிக்ஷயா அபியான் திட்டத்திற்கு ரூ.3586 கோடி நிதி ஒதுக்க வேண்டும். அதில் 60 விழுக்காடு மத்திய அரசின் பங்காகவும், 40 விழுக்காடு மாநில அரசின் பங்காகவும் நிதி ஒதுக்கப்படுகிறது. மொத்தம் ரூ.3586 கோடியில் 60% தொகையான ரூ. 2152 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். அதில் முதல் காலாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய ரூ. 573 கோடி நிதியை இன்னும் விடுவிக்கப்படவில்லை. மறுபுறம் 40% தொகையான ரூ. 1434 கோடி மாநில அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படமல் இருப்பதற்கு காரணம், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாமல் இருப்பது தான் எனக் கூறப்படுகிறது. நிதி விடுவிக்காத நிலையில், தமிழக அரசு சார்பில் பலமுறை பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு மவுனம் காக்கிறது. இதனால் 15,000 ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் மாநில கல்வித்துறை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கணு வேண்டும் என்றால், கிட்டத்தட்ட ரூ.25000 கோடி நிதி அவசியம். செப்டம்பர் மாதம் சம்பளம் இன்னும் விடுவிக்கப்படாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் போர்க்கால் அடிப்படையில சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து சம்பளத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.மறுபுறம்"அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை" தேசிய கல்விக்கொள்கை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க - Quarterly Exam Holidays | காலாண்டு விடுமுறை நீட்டிப்பு? மாணவர்களுக்கு குட் நியூஸ் வரப்போகிறது! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!PF சந்தாதாரர்களுக்கு குஷியான செய்தி: இனி பிஎஃப் பணத்தை மிக வேகமாக எடுக்கலாம்... புதிய அப்டேட் இதோEPF Withdrawal Rules: விதிகளிக் பெரிய மாற்றம், பிஎஃப் உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சி... அமைச்சர் அளித்த அப்டேட்Vijay | தவெக முதல் மாநாடு! 38 மாவட்டங்கள்.. பக்கா மாஸ்டர் பிளான் போடும் விஜய்!Apple iPhoneViral Video
Tamil Nadu Government Teachers Faces Problem Sept 15 000 Government Employees Salary Stop Central Government Not Released Rs 573 Crore To B New Education Policy New Education Policy In Tamil Nadu What Is Samagra Shiksha Scheme தமிழக அரசு ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் 15 000 அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தம் மத்திய அரசு தமிழகதிற்கு 573 கோடி ரூபாய் வழங்கவில் புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை சமக்ரா சிக்ஷா திட்டம் என்றால் என்ன
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
டிஏ ஹைக் மட்டுமல்ல... மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் 5 ஜாக்பாட் அறிவிப்புகள்: முழு லிஸ்ட் இதோ7th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பல முக்கிய அறிவிப்புகளை பற்றி பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
Read more »
8வது ஊதியக்குழுவில் ஏற்றத்துடன் மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா சம்பள உயர்வு8th Pay Commission: இந்தியாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், காலப்போக்கில் பணவீக்கத்தை நிவர்த்தி செய்ய நிறுவப்பட்ட பல்வேறு மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மூலம் குறிப்பிடத்தக்க திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.
Read more »
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு முக்கிய உத்தரவு!Tamil Nadu Government Latest News: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதிர்களுக்கு அரசு முக்கிய உத்தரவு
Read more »
மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்... அதிரடி டிஏ ஹைக்: நாளை அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு?7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இந்த முறை அரசு அகவிலைப்படியை 3-4% அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
Read more »
அம்மாடி.... சம்பளம் இவ்வளவு அதிகரிக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், அது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும்.
Read more »
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைசா? ஊதியம் எவ்வளவு உயரும்?8th Pay Commission: 8வது ஊதியக்குழு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், அடிப்படை சம்பளம் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையலாம்.
Read more »
