Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Selvaperundhagai, Tamil Nadu Congress Leader : தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்பதை பார்க்கும்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கவலையளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கவலை அளிப்பதாக பேட்டிஊர் கண் முழுவதும் இஷா அம்பானி மீதுதான்... ஒரே நாளில் 3 காஸ்ட்யூம் - அசரவைக்கும் அழகு...!சென்னை பெரம்பூரில் ரவுடிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முழுவதும் தலித் தலைவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். உளவுத்துறையை வலிமைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட செல்வப்பெருந்தகை, ஒரு தேசியக்கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்ற செய்தி, மிகவும் கவலையளிப்பதாக கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழங்கு மோசம் இல்லை என்றாலும், அடுத்தடுத்து நிகழக்கூடிய படுகொலைகளை பார்க்கும்போது கவலையளிப்பதாகவும் கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய செல்வப்பெருந்தகை,"ஆம்ஸ்ட்ராங் படுகொலை என்பது கண்டனத்துக்குரியது. கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும். கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு சரணடைந்தவர்களோடு விசாரணையை முடித்துக் கொள்ளக்கூடாது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். ஸ்காட்லாந்துக்கு இணையாக புலன் விசாரணை செய்யகூடிய காவல்துறை என்ற பெயர் பெற்ற தமிழ்நாடு காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த கொலைக் குற்றத்தில் செய்தவர்களுடன் தொடர்புடையவர்களாக செய்திகள் வருகின்றன. அது குறித்தும் காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். புலன்விசாரணையை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.11 பேரை பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு யார் உதவி செய்தார்கள், பின்னணியில் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். தேசிய கட்சியின் மாநிலத் தலைவரை கொல்லும் அளவுக்கான தைரியத்தை கொடுத்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் உளவுத்துறையை மேம்படுத்த வேண்டும். உளவுத்துறை சரியாக இருந்திருந்தால் இந்த கொலையை தவிர்த்திருக்கலாம். ஆண்டு ஆண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுபவர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவாலயம் கட்டும் முயற்சிக்கு நாங்களும் ஒத்துழைப்போம்" என்று தெரிவித்தார்.ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய புதிய கட்டட பணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது வந்த மர்ம கும்பல், அவரை வெட்டிக் கொலை செய்தது. உணவு டெலிவரி பாய் வேஷத்தில் வந்த இந்த கொலையை அரங்கேற்றியது ரவுடி கும்பல். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் என்பதால் ஆம்ஸ்ட்ராங் கொலை தேசிய அளவில் கவனம் பெற்றது. இதனையடுத்து காவல்துறை உடனடியாக செயல்பட்டு, கொலை செய்த 11 பேரை கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்த கொலையை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர். இருப்பினும் காவல்துறை புலன் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங்கிற்கு நினைவிடம்... நீதிமன்றம் அனுமதி - அடக்கம் செய்யும் இடமும் உறுதியானது! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ArmstrongITR Filing: இந்த தவறுகளை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.... ஜாக்கிரதை!!ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!Cholesterol silent killerChennai Armstrong murder
Tamil Nadu Congress Leader Armstrong Murder Dalit Leaders Security Armstrong Mourning செல்வப்பெருந்தகை பேட்டி தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஆம்ஸ்ட்ராங் கொலை பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு கொலை Crime News Tamilnadu Crime News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மோடி பதவியேற்புக்கு கடைசி நிமிடத்தில் வந்த கார்கே...! காங்கிரஸில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பை புறக்கணிக்கலாம் என நினைத்திருந்த காங்கிரஸ் கடைசி நிமிடத்தில் பங்கேற்றது. அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்றார்.
Read more »
சூடுபிடிக்கும் மணிப்பூர் விவகாரம்! பிரதமர் மோடி செல்வது எப்போது? ப. சிதம்பரம் கேள்விP Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Read more »
’பொதுவெளியில் பேசக்கூடாது’ தமிழிசை சவுந்திர ராஜனுக்கு ஆர்டர் போட்ட அமித் ஷா!Amit Shah s Stern Warning to Tamilisai: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்த தமிழிசை சவுந்திர ராஜனை மத்திய உள்துறை அமித் ஷா கண்டித்துள்ளார்.
Read more »
கள்ளக்குறிச்சி செல்லும் தவெக தலைவர் நடிகர் விஜய் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார்Actor Vijay Kallakurichi visit : கள்ளக்குறிச்சி செல்லும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.
Read more »
பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடியை சீக்கிரம் தூக்கியாகணும்பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Read more »
நடிகர் விஜய்யின் செயல்களால் தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி பெரும்நடிகர் விஜய் தி.மு.க சார்ந்த கொள்கைகளை எடுக்க எடுக்க, தமிழகத்தில் பாஜக ஓட்டும், ஆதரவும் வளரும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.
Read more »
