Reason Behind Karur Stampede: கரூர் கூட்டநெரிசலில் 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் உள்ளிட்ட சிலர் தண்ணீர் வீசியதும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.
Reason Behind Karur Stampede : கரூர் கூட்டநெரிசலில் 40 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், பிரச்சார வாகனத்தில் இருந்து விஜய் உள்ளிட்ட சிலர் தண்ணீர் வீசியதும் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகின்றன.
களத்தில் இருந்த வந்த தகவல் ஆகும்.ஐஸ்வர்யா ராய்க்காக இரவு பகலாக அழுத நடிகர்! இப்போ வரைக்கும் சிங்கிளா இருக்காரு-யார் தெரியுமா?கரூரில் நேற்றிரவு நடந்த அசம்பாவிதம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. சுமார் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னும் 40 பேருக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்த 40 பேரில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து உயிரிழந்தார். மீதம் இருந்த 39 பேரும் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கரூரில் அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், அதிகாரிகள் கரூரில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாவட்ட செயலாளர்களும் தற்போது தலைமறைவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது எப்படி?, இதற்கு முன் 5 இடங்களில் விஜய் பிரச்சாரம் செய்திருந்த நிலையில் கரூரில் ஏன் இந்த விபத்து நிகழ்ந்தது?, குறுகலான சாலையில் நிகழ்வு திட்டமிடப்பட்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டதா? ஆம்புலன்ஸ்களுக்கு தொண்டர்கள் வழிவிடாமல், அதில் யாராவது இருக்கிறார்களா என தடைசெய்யப்பட்டதா? போன்ற எண்ணற்ற கேள்விகளும், சந்தேகங்களும் பலருக்கும் இருந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து விசாரணை செய்து தீவிரமாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் நேற்று கரூரில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், விஜய் கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து தண்ணீர் பாட்டில்களை வீசியதே முக்கிய காரணம் என தகவல்கள் கூறுகின்றன. விஜய் நேற்றிரவு சுமார் 7.15 மணிக்கு தனது பேச்சை தொடங்கினார். அவர் பேச தொடங்கியதில் இருந்து பலமுறை பேச்சை நிறுத்தி ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தார்.அதுமட்டுமின்றி, அவரது பிரச்சார வாகனத்தில் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் பலரும் மயக்கமடைந்ததால் அதை பார்த்தும் பேச்சை நிறுத்தி, தனது பிரச்சார வாகனத்தில் இருந்து முதலில் ஒரே ஒரு தண்ணீர் பாட்டிலை கூட்டத்தை நோக்கி வீசினார். தொடர்ந்து சில பாட்டில்களையும் மக்களை நோக்கி வீசினார். அதற்கு பின்னரும் சில நிமிடங்கள் பேச்சை தொடர்ந்தார். அவரது பிரச்சார வாகனத்தை சுற்றியிருந்த பலரும் மீண்டும் மீண்டும் தண்ணீர் கேட்க, விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்துகொண்டு ஆதவ் அர்ஜூனா மற்றும் பாதுகாவலர்களும் பலரும் தண்ணீர் பாட்டிலை வீசினர்.தண்ணீர் பாட்டிலை வீசியதால் அதனை பிடிக்கும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த பாட்டில்களை எடுக்க சிலர் முண்டியடித்ததால் பலர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. கீழே விழுந்தவர்களை மற்றவர்கள் மிதித்ததே உயிரிழப்பு அதிகரிக்க காரணம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூட்டநெரிசலில் பலர் காயமடைந்திருக்கலாம் என்றும் இதனால் கூட உயிரிழப்புகள் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் காலை 11 மணிமுதல் மக்கள் வேலுச்சாமிபுரத்தில் கூடியதாலும், அங்கு தண்ணீர் மற்றும் உணவு அருந்தாமல் இருந்ததாலும் கூட பலரும் கூட்டத்தில் மயக்கமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இருப்பினும் இதுகுறித்து உறுதியான தகவல்கள் தெரியவில்லை. எனவே, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஒரு நபர் ஆணையம் இதுகுறித்து தனது அறிக்கையில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும் படிக்க | தவெக-க்கு எதிராக ஒன்று கூடிய அரசியல் கட்சிகள்! விஜய்யின் அடுத்த மூவ்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!"வாடகைக்கு கார் வேண்டும்".. உரிமையாளருக்கு நாமம் போட்ட தவெக தொண்டர்!'திமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜகவுக்கு போட்டதற்கு சமம்' - நாமக்கல்லில் விஜய் அதிரடி பேச்சுகரூரில் பலியான 39 உயிர்கள்! ஒவ்வொரு வாழ்க்கைக்கு பின்னும் ஓராயிரம் கதைசனிக்கிழமை மட்டும் வெளியே வரும் ஆள் நான் கிடையாது.. உதயநிதி ஸ்டாலின் நக்கல் பேச்சு!Asia Cup
Main Reason For Karur TVK Stampede TVK Campaign Stampede Latest News Updates Karur Stampede Karur Stampede Latest News Updates Vijay Thrown Water Bottles To Crowd Reason Behind Karur Stampede Major Reason For Karur Stampede கூட்டத்தை நோக்கி பாட்டிலை வீசிய விஜய் விஜய் தண்ணீர் பாட்டிலை வீசியதால் கூட்டநெரிசல் ஏற் கரூர் கூட்டநெரிசல் தவெக பரப்புரை கரூர் கூட்டநெரிசலுக்கு முக்கிய காரணம் கரூரில் பலி எண்ணிக்கை உயர இதுவும் காரணமா கரூர் கூட்டநெரிசல் விபத்து கரூர் விஜய் கூட்டம் விபத்து கரூர் அசம்பாவிதம் காரணம் கரூர் ஸ்டாம்பீட் 2025 விஜய் அரசியல் கூட்டம் விபத்து தமிழ்நாடு கூட்ட நெரிசல் விபத்து கரூர் கூட்டம் மரணங்கள் கரூர் தண்ணீர் பாட்டில் பிரச்சனை கரூர் உயிரிழப்பு விபரம் கரூர் கூட்ட நெரிசல் விசாரணை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Karur Stampede: പോലീസ് ലാത്തി വീശി, കല്ലേറുണ്ടായി, ഹര്ജി നാളെ പരിഗണിക്കും; കരൂര് ദുരന്തത്തിൽ ഗൂഢാലോചന ആരോപിച്ച് ടിവികെ കോടതിയിൽകരൂര് ദുരന്തത്തിൽ ഗൂഢാലോചന ആരോപിച്ച് ടിവികെ
Read more »
Actress tweet on Karur stampede: విజయ్ను అరెస్ట్ చేయాలంటూ హీరోయిన్ ట్విట్.!. నెట్టింట నటికి ఘోర అవమానం..tvk Vijay rally stampede: టీవీకే పార్టీ కరూర్ ఘటనపై తమిళ నటి ఓవియా రియాక్ట్ అయ్యింది. దీనిపై విజయ్ ను అరెస్ట్ చేయాలని ట్విట్ చేసింది. దీనిపై సోషల్ మీడియాలో పెద్ద వార్ మొదలైంది. నటిని బూతులు తిడుతూ విజయ్ అభిమానులు రెచ్చిపోయారు.
Read more »
Karur Stampede: विजय की लेट एंट्री! ना पानी ना बैरिकेड... करूर रैली ऐसे बना बना मातम का मैदान, जानें अंदर क...Karur Stampede Latest Update: तमिलगा वेत्त्री कझगम (TVK) के प्रमुख विजय की करूर रैली में भगदड़ से 40 लोगों की मौत हो गई है. अब इंतजाम और देरी पर सवाल खड़े हो रहे हैं. पीड़ित परिवारों को 20-20 लाख मुआवज़े का ऐलान किया गया है.
Read more »
Vijay Stampede : 40 ಮೃತರಿಗೆ ತಲಾ 20 ಲಕ್ಷ ಘೋಷಣೆ ಮಾಡಿರುವ ನಟ ವಿಜಯ್ ಆಸ್ತಿ ಮೌಲ್ಯ ಎಷ್ಟಿದೆ ಗೊತ್ತೆ..?Actor Vijay networth : ದಕ್ಷಿಣ ಚಲನಚಿತ್ರೋದ್ಯಮದ ಸೂಪರ್ಸ್ಟಾರ್ ಮತ್ತು ತಮಿಳು ವೆಟ್ರಿ ಕಳಗಂ (TVK) ರಾಜಕೀಯ ಪಕ್ಷದ ಅಧ್ಯಕ್ಷ ದಳಪತಿ ವಿಜಯ್, ಪ್ರಸ್ತುತ ಕರೂರ್ ಕಾಲ್ತುಳಿತ ಪ್ರಕರಣದಿಂದ ಸಂಕಷ್ಟಕ್ಕೆ ಸಿಲುಕಿದ್ದಾರೆ. ಪ್ರಸ್ತುತ ಈ ವಿಚಾರ ದೇಶದಲ್ಲಿ ಸಂಚಲನ ಸೃಷ್ಟಿಸುತ್ತಿದೆ. ಇದರ ನಡುವೆ ವಿಜಯ್ ಮೃತ ಕುಟುಂಬಕ್ಕೆ ತಲಾ 20 ಲಕ್ಷ ರೂ. ಘೋಷಣೆ ಮಾಡಿದ್ದಾರೆ.
Read more »
விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் அட்டாக்..Karur Stampede Oviya Shares Arrest Vijay Post : விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று பதிவிட்ட பிரபல நடிகை! கெட்ட வார்த்தையால் அட்டாக் செய்யும் ரசிகர்கள்..முழு விவரம், இதோ!
Read more »
Karur Stampede: सितारे...फैंस...दीवानगी और भगदड़, सेलेब्स के इवेंट में कब-कब घटीं दिल दहला देने वाली घटनाएं?तमिलनाडु के करूर में टीवीके पार्टी के प्रमुख और साउथ फिल्मों के चर्चित अभिनेता विजय थलपति की रैली में भगदड़ मच गई। इसमें 39 लोगों के मरने और कई लोगों के घायल होने की
Read more »
