Ashwin CSK reunion : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்திறன் மையத்துக்கு பொறுப்பாளராக அஸ்வின் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐபிஎல் 2025ல் அவர் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Ashwin CSK reunion : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உயர் செயல்திறன் மையத்துக்கு பொறுப்பாளராக அஸ்வின் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஐபிஎல் 2025ல் அவர் சிஎஸ்கே அணியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அஸ்வின், ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன விளக்கம்Mansoor Ali KhanTamil Nadu Lok Sabha Election Result: கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்தியாராணி பெற்றுள்ள வாக்குகள்!சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உயர் செயல்திறன் மையத்தை திறக்க இருக்கிறது. இதற்கு முழு பொறுப்பாளராக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்படும் வீரர்கள் பயிற்சி பெற இருக்கிறார்கள். அந்த பிளேயர்கள் எப்படி பயிற்சி உள்ளிட்ட அனைத்து வழிகாட்டல்களும் அஸ்வின் கொடுக்க இருக்கிறார். ஐபிஎல் 2025 ஏலத்துக்கு முன்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அஸ்வினுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்திருப்பதால், ஏலத்துக்கு முன்பாகவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க | அயர்லாந்து போட்டியிலும் இந்திய அணிக்கு ஆபத்து வரலாம்... இந்த 3 வீரர்கள் ரொம்ப முக்கியம்! ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ்நாட்டு கிரிக்கெட் வீரரான அஸ்வின் முதன்முதலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் விளையாடினார். 2009 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் இணைந்த அவர் 2015 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின்னர், சிஎஸ்கே அணியில் இருந்து விலகினார். இது பலருக்கும் சர்பிரைஸாக இருந்தது. இதுகுறித்து அஸ்வின் ஒரு சில ஆண்டுகள் கொடுத்த விளக்கத்தில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்குடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், அதனால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்று விரும்புவதாகவும், சென்னை சேப்பாக்கத்தில் விளையாட சிஎஸ்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.அஸ்வின் ஏலத்தில் எடுக்கப்படாதது குறித்து அப்போது ஸ்டீபன் கொடுத்த விளக்கத்தில், அவரை ஏலத்தில் எடுக்க நாங்கள் முயற்சித்தோம். அவருக்கான பட்ஜெட்டாக 4 கோடி ரூபாய் வரை நிர்ணயித்து வைத்திருந்தோம். ஆனால் அதற்கு மேல் சென்றதால் எங்களால் அஸ்வினை ஏலத்தில் எடுக்கவில்லை என்றார். இது குறித்து சிஎஸ்கே நிர்வாக இயக்குநர் காஸி விஸ்வநாதன் அண்மையில் பேசும்போது, ஒரு பிளேயரை ஏலத்தில் எடுப்பது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி ஐபிஎல் 2024ல் அந்த பொறுப்பில் இருந்து விலகினார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டன் என்றும் அடையாளம் காட்டினார். தோனி தலைமையில் சிஎஸ்கே இதுவரை 5 ஐபிஎல் சாம்பியன் கோப்பைகளை வென்றிருக்கிறது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிவிட்ட தோனி, அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2024: பாகிஸ்தான் முக்கிய வீரருக்கு காயம்..! இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விலகல்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Coimbatore Election Result 2024: ட்விட்டரில் மாஸ் காட்டும் #Annamalai, #Coimbatore.... டிரெண்ட் ஆகும் அண்ணாமலை எம்பி ஆவாரா?Election 2024 Lok Sabha Election Result 2024: அன்றே கணித்த Zee News... AI மூலம் Exit Poll... துல்லியமான கருத்துக்கணிப்பு!ஒரே ஒரு ‘கைது’ தான்! ஆட்சியையே இழந்த ஜெகன் மோகன் ரெட்டி! சந்திரபாபு நாயுடு மாஸ்டர் மூவ்..!AP Elections 2024 Result : ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாஷ் அவுட்! அரியணை ஏறும் தெலுங்கு தேசம் கட்சி..Election Results 2024: ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து! பிகாருக்கு என்ன?Lok Sabha election 2024
Chennai Super Kings 2025 CSK High-Performance Centre IPL 2025 Auction Ashwin CSK Reunion Stephen Fleming Conflict CSK Training Center ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2025 ஏலம் ஸ்டீபன் பிளெமிங் எம்எஸ் தோனி Ashwin Coaching Role IPL Tamil Nadu Players CSK Management Decisions Ashwin IPL Journey CSK Auction Strategy High-Performance Training CSK Player Development Ashwin's Return To CSK Kashi Viswanathan Statement CSK Future Plans Ashwin's Cricket Career IPL Team Dynamics CSK Player Selection
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
சிஎஸ்கேவிற்கு பெரும் பின்னடைவு! பத்திரனா இனி சென்னை அணிக்காக விளையாட மாட்டார்!Matheesha Pathirana: ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பத்திரனா வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7.68 பொருளாதாரத்துடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
Read more »
CSK vs RR: அஸ்வினின் வியூகத்தை முறியடிக்குமா சிஎஸ்கே... சேப்பாக்கத்தின் கொம்பன் யாரு...?CSK vs RR Match: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நாளை (மே 12) மோதும் லீக் போட்டி குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.
Read more »
சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
Read more »
ஆர்சிபி போட்டியில் முதல் இன்னிங்ஸில் நடந்த சுவாரஸ்யங்கள்ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை பார்க்கலாம்.
Read more »
ஆர்சிபி ரசிகர்கள் இப்படி செய்யலாமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!பெங்களூருவில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு சிஎஸ்கே ரசிகர்கள், ஆர்சிபி ரசிகர்களால் கேலி மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர்.
Read more »
எலோன் மஸ்கின் X தளத்தை விட இன்ஸ்டாகிராம் தான் எனக்கு விருப்பம்-எம்.எஸ். தோனி வைரல் வீடியோMahendra Singh Dhoni s Video Viral: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் மகேந்திர சிங் தோனியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Read more »
