Chennai Traffic Changes: சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள்
Chennai Traffic Changes : சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து இங்கு காணலாம்.ஞாயிறு என்பதால் மக்கள் கடற்கரைக்கு அதிகம் செல்ல வாய்ப்புள்ளதுகலைஞர் மகளிர் உரிமைத்தொகை : பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய அப்டேட்டுகள்Kalaignar Magalir Urimai ThogaiNivetha Pethuraj சென்னையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம் இன்று நடைபெற இருக்கின்றன.
சென்னையில் உள்ள பல்வேறு இடங்களிலிருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் பக்தர்களால் கடற்கரைப் பகுதியில் உள்ள தீர்மானிக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு வரப்பட உள்ளன.மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீனிவாசபுரம், திருவான்மியூரில் உள்ள பல்கலை நகர், புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள N4 மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பகுதியில் உள்ள பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்களில் விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட உள்ளன. விநாயகர் சிலை ஏற்றிச் செல்லும் வாகனங்களுடன், பாதசாரிகளின் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போக்குவரத்தின் அளவைப் பொறுத்து பின்வரும் போக்குவரத்து ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட உள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.திருவல்லிகேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை வரை வாகன போக்குவரத்து மெதுவாக இருப்பதால், காந்தி சிலை, ஆர்.கே. சாலை சந்திப்பில் இருந்து , வி.எம். தெரு, லஸ் ஜங்சன், அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர். ரங்கா சாலை , பீமண்ண கார்டன் சந்திப்பு, சி.பி. ராமசாமி சாலை , செயிண்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீனிவாசா அவென்யூ , ஆர்.கே. மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அடையாறில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் தெரு , வி.கே.ஐயர் சாலை சந்திப்பு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை , ஆர்.கே. மடம் சாலை , தெற்கு மாட சந்திப்பு, வெங்கடேச அக்ரஹாரம் சாலை , கிழக்கு அபிராமபுரம், லஸ் அவென்யூ, பி.எஸ். சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, டாக்டர் ஆர்.கே. சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.சிலை ஊர்வலம் ரத்னா கஃபே சந்திப்பைக் கடக்கும் போதெல்லாம், ஜாம் பஜார் காவல் நிலையத்தில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் ஜானி ஜான்கான் ரோடு வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். சிலை ஊர்வலம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை கடக்கும் போதெல்லாம், ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் இருந்து ரத்னா கஃபே சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, இந்த வாகனங்கள் பெசன்ட் ரோடு காமராஜர் சாலை வழியாக திருப்பி விடப்படும் அல்லது இடதுபுறம் GRH சந்திப்பை நோக்கி சென்று தங்களின் இலக்கை அடையலாம்.அதேபோல், சிலையை கொண்டு வரும் வாகனங்கள் மட்டுமே கலங்கரை விளக்கத்தில் இருந்து ஸ்ரீனிவாசபுரம் சிலை கரைக்கும் இடத்திற்கு லூப் சாலை வழியாக அனுமதிக்கப்படும். விநாயகர் சிலையினை கரைக்கும் இடங்களை சுற்றி சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு எந்தவித வணிக வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்ட இந்த போக்குவரத்து ஏற்பாடுகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைக்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் படிக்க | ஸ்டாலின் மருத்துவ முகாம்: 1 வாரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்-அமைச்சர் மா.சு பேட்டி!மேலும் படிக்க | அமெரிக்க வரி விதிப்பால் கடும் பாதிப்பு - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!SCSSRahul GandhiFarmersமாதம்பட்டி ரங்கராஜ் இவ்வளவு மோசமானவரா? ஜாய் கிரிஸில்டா விவரித்த கொடுமைகள்!வர்த்தகப் போர்: மிரட்டும் அமெரிக்கா.. கொந்தளிக்கும் இந்தியா.. இதுதான் அடுத்த திட்டம்பள்ளி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி... ஷாக் சம்பவம் - பின்னணி என்ன?
Chennai Traffic Changes Alert Vinayagar Statue Immersion In Chennai Mylapore Thiruvanmiyur New Washermenpet Thiruvottiyur Chennai Traffic News Latest Chennai News Chennai Today News Greater Chennai Traffic Police சென்னை போக்குவரத்து மாற்றம் சென்னை போக்குவரத்து மாற்றம் அலர்ட் சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு மைலாப்பூர் திருவான்மியூர் புதிய வண்ணாரப்பேட்டை திருவொற்ரியூர் சென்னை போக்குவரத்து செய்திகள் லேட்டஸ்ட் சென்னை செய்திகள் சென்னையில் இன்று செய்திகள் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
அண்ணா சாலையில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் - ஆக.17 முதல்... காவல்துறை அறிவிப்புசென்னை தேனாம்பேட்டையில் மேம்பாலக் கட்டுமானப் பணியை எளிதாக்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
Read more »
சென்னை மக்களே... நாளை இந்த பகுதிகளில் மின்தடைChennai Power Outage: சென்னையில் நாளை (ஆகஸ்ட் 16) வெவ்வேறு பகுதிகளில் பராமரிப்பு காரணமாக முழு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
விநாயகர் சதுர்த்தி 2025: இன்று முதல் இந்த ராசிகளை பிரமாதமாய் வாழவைப்பார் பிள்ளையார்Vinayagar Chaturthi 2025 Rasipalan: இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று பல சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால் விநாயகர் சதுர்த்தி முதல் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
இன்றைய ராசிபலன்: ஆவணி 14 - இன்று இந்த ராசிகளுக்கு வெற்றிகரமான நாள்August 30 Today Rasipalan: ஆவணி மாதம் 14ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 30), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
ஜெர்மனிக்கு புறப்படும் முன்... ஸ்டாலின் சொன்ன புள்ளிவிவரங்கள் - 32.81 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முன், சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
Read more »
தினசரி ராசிபலன்: ஆவணி 15 - இன்று இந்த ராசிகளுக்கு வாழ்வில் மாற்றம் வரும் நாள்!August 31 Today Rasipalan: ஆவணி மாதம் 15ஆம் நாளான இன்று (ஆகஸ்ட் 31), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »
