Mustafizur Rahman, Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
Mustafizur Rahman , Chennai Super Kings : சென்னை சூப்பர் கிங்ஸ் , பிசிசிஐ கோரிக்கையை ஏற்று முஸ்தபிசுர் மேலும் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.மே 1 வரை மட்டுமே விளையாடுவார் என அறிவிப்புCSK vs MI Memes : மும்பையை பொளந்து கட்டிய சென்னை! CSK ரசிகர்கள் இணையத்தில் கும்மாளம்-வைரல் மீம்ஸ்! Chennai Super Kings மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பணம், பதவி, புகழ்.
.... அற்புதமான நற்பலன்கள் கிடைக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பவுலராக இருக்கும் முஸ்தபிசுர் இம்மாத கடைசி வரை மட்டுமே ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டது. ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க இருப்பதால் அதற்கான பயிற்சியை தொடங்கும் வகையில் அவர் வங்கதேசம் திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கேற்ப ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே முஸ்தபிசுர் ஐபிஎல் போட்டியில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அவரின் விடுமுறை இன்னும் ஒருநாள் நீட்டிக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் வைக்கப்படிருந்தது. மேலும் படிக்க | ஹைதராபாத் அடித்த 287 ரன்கள்... டி20 வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் - முதலிடத்தில் யார்? அதற்கு காரணம், சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலராக மட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராகவும் முஸ்தபிசுர் இருக்கிறார். அவரின் இருப்பு சென்னை அணிக்கு மிகப்பெரிய பலம். டெத் ஓவர்களில் பத்திரனாவுடன் இணைந்து சூப்பராக பந்துவீசிக் கொண்டிருக்கிறார் முஸ்தபிசுர். இதனைக் கருத்தில் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் விளையாடும் போட்டி வரையாவது முஸ்தபிசுர் விளையாட வேண்டும் என சிஎஸ்கே விரும்பியது. அதற்கு ஏற்ப எடுத்த நடவடிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாசிடிவ் ரிசல்ட் கிடைத்திருக்கிறது. மே 1 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் முஸ்தபிசூர் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது குறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய துணை தலைவர் ஷஹ்ரியார் நஃபீஸ்,"முஸ்தபிசுர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் அவருடைய விடுமுறையை நீட்டிக்குமாறு சென்னை சூப்பர் கிங்ஸ், பிசிசிஐ தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது மே 1 ஆம் தேதி நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் போட்டியில் அவர் விளையாட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களின் கோரிக்கை வங்கதேச கிரிக்கெட் சங்கம் சார்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டு முஸ்தபிசுர் விடுமுறை மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முஸ்தபிசுர் விளையாடுவதற்கான தடை நீக்கியுள்ளது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளது. ஐபிஎல் 2024 தொடரைப் பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது சிஎஸ்கே. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஏப்ரல் 19 ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நடக்க உள்ளது. மேலும் படிக்க | சிஎஸ்கேவுக்கு அடுத்த 2 போட்டியும் வெற்றி தான்... பிரகாசமாகும் பிளே ஆப் வாய்ப்பு - அது எப்படி? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கோவையில் 'இந்த கட்சிக்கு' தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புஇனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!உடலுறவு வைத்துக்கொண்டால் அறிவாளி ஆகலாமா? ஆய்வுகள் கொடுக்கும் சுவாரஸ்ய தகவல்..பிரதமர் மோடி பேட்டி: 'சனாதனம் குறித்து கேவலமான கருத்து...' திமுக மீது சராமாரி குற்றச்சாட்டு
IPL 2024 Chennai Super Kings Bangladesh Cricket Board Extension For Mustafizur Rahman BCCI CSK Breaking News CSK Latest News Tamil Chennai Super Kings Latest News Tamil CSK Mustafizur Rahman News Tamil முஸ்தபிசுர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியம் சென்னை சூப்பர் கிங்ஸ் லேட்டஸ்ட் நியூஸ் தமிழ் ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தல தோனியின் வெறியாட்டம்... அதிர்ந்தது வான்கடே - 207 ரன்கள் இலக்கை எட்டுமா மும்பை?MI vs CSK: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 206 ரன்களை குவித்து அசத்தியுள்ளது.
Read more »
MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Read more »
இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
Read more »
தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
Read more »
கடைசி வரை போராடிய தினேஷ் கார்த்திக்... சின்னசாமியில் சிக்ஸர் மழைRCB vs SRH Highlights: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக 288 ரன்களை துரத்திய பெங்களூரு அணி கடைசி வரை போராடி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
Read more »
இனி ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளர்கள் இதனை செய்ய கூடாது! பிசிசிஐ அதிரடி!ஐபிஎல் வீரர்கள், அணி உரிமையாளர்கள், வர்ணனையாளர்கள் மைதானங்களில் இருந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட கூடாது என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
Read more »
