Montha Cyclone: தமிழகத்தில் இன்று (அக்டோபர் 27) 5 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Montha Cyclone : தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை க்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளை திங்கட்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்! மின்சார வாரியம் அறிவிப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவு 23.
30 மணி அளவில்"மோன்தா" புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 570 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 600 கிலோ மீட்டர் தொலைவிலும், போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கே 850 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் தீவிரப்புயலாக 28-ஆம் தேதி மாலை இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நேற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும், வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும். 27-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 28-10-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 29-10-2025 முதல் 02-11-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இன்று : வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை : வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த விஜய் - கொடுக்கப்பட்ட வாக்குறுதி! மகிழ்ச்சியில் குடும்பங்கள்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தந்தையாகும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் லீவ்திமுக ஆட்சி நீடித்தால்.. தமிழகம் சோமாலிய நாடாக மாறிவிடும் - ஆர்.பி, உதயகுமார்!ரயில்வே வேலை வேண்டுமா? NTPC தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு அரசின் இலவசப் பயிற்சி!Freedom From Cyber Fraud
Montha Cyclone Tn Weather Alert Chennai Weather Update Montha Cyclone Weather Update Imd Weather Update Latest News In Tami Tamil Nadu Weather Update Rain Alert Orange Alert Red Alert Yellow Alert Montha Cyclone Latest Update மிக கனமழை எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட் மோந்தா புயல் தமிழ்நாடு வானிலை அப்டேட் சென்னை வானிலை நிலவரம் மோந்தா புயல் அப்டேட் கனமழை எச்சரிக்கை மழை ரெட் அலர்ட் ஆரஞ்சு அலர்ட் மஞ்சள் எச்சரிக்கை மோந்த புயல் லேட்டஸ்ட் அப்டேட் அண்மைச் செய்திகள் மழை அறிவிப்பு வானிலை அறிவிப்பு
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Cyclone Montha Updates Today: Maharashtra, Tamil Nadu Districts On AlertCyclone Montha Updates: The cyclone is likely to cross the Andhra Pradesh coast near Kakinada on Tuesday night. Meanwhile, the IMD has issued an orange alert for three Maharashtra districts and predicted moderate spells of rain.
Read more »
Tirumala Temple: మొంథా తుపాన్ ఎఫెక్ట్.. తిరుమలలో భారీగా తగ్గిన భక్తుల రద్దీ.. సర్వదర్శనానికి ఎన్నిగంటలంటే..?Montha cyclone effect in ap: తిరుమల ఆలయంలో భక్తుల రద్దీ గణనీయంగా తగ్గింది.ఈ క్రమంలో టోకెన్లు లేకుండా సర్వదర్శనానికి 8 గంటల సమయం పడుతుందని టీటీడీ అధికారులు ఒక ప్రకటనలో వెల్లడించారు.
Read more »
மோந்தா புயல்: தமிழ்நாடு தப்பி, ஆந்திரா சிக்கியது.. ஆனா ஒரு டிவிஸ்ட்.. வானிலை மையம் அலர்ட்!Montha Cyclone: மோந்தா புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் மேகங்கள் சென்னை அருகே வர அதிக வாய்ப்புள்ளதால், மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Read more »
Cyclone Montha News: साइक्लोन मोंथा का ये नाम कैसे पड़ा, क्या होता है इसका मतलब?अरब सागर में उठ रहे चक्रवात 'मोंथा' का खतरा मंडरा रहा है, जिसके 28 अक्टूबर तक आंध्र प्रदेश के तट से टकराने की आशंका है। इस चक्रवात का नाम थाईलैंड ने सुझाया था, जिसका अर्थ है 'सुगंधित फूल'। मौसम विभाग ने आंध्र प्रदेश के कई जिलों में रेड और ऑरेंज अलर्ट जारी किया है, साथ ही तमिलनाडु, पुडुचेरी और ओडिशा में भी भारी बारिश की चेतावनी दी...
Read more »
Cyclone Montha: স্কুল-কলেজ ছুটি ঘোষণা, ৭ জেলায় রেড অ্যালার্ট! কতটা ভয়ংকর হচে চলেছে ল্যান্ডফল? কাঁপুনি ধরাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা...Cyclone Montha Update: Red alert in seven districts, School colleges closed as Andhra Pradesh braces for Cyclone Montha landfall
Read more »
Montha Cyclone: మొంథా తుపాన్ ఎఫెక్ట్.. రంగంలోకి సీఎం రేవంత్ రెడ్డి.. కీలక ఆదేశాలు..Revanth reddy on montha cyclone: మొంథా తుపాన్ నేపథ్యంలో అధికారులు అప్రమత్తంగా ఉండాలని సీఎం రేవంత్ రెడ్డి కీలక ఆదేశాలు జారీ చేశారు. ముఖ్యంగా రైతులు పంటల విషయంలో జాగ్రత్తలు తీసుకొవాలన్నారు.
Read more »
