கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் லிஸ்ட். டாப் இவர்தான்.
கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்த நிலையில், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.தென்னிந்தியாவின் பணக்கார நடிகர்கள் லிஸ்ட்.. டாப் இவர்தான்.. ரஜினி கூட சொன்னாரே!தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் நேற்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த சூழலில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரவோடு இரவாக கரூர் விரைந்தார். அங்கு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இச்சம்வத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.இதுவரை 38 பேர் உயிரிழந்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது. அமைச்சர், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகர் சூரி,"கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்". இவ்வாறு எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,"நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷால்,"முழுக்க முழுக்க முட்டாள்தனம். நடிகர்/அரசியல்வாதி விஜய்யின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேள்விப்படுவது மனதை வேதனைப்படுத்துகிறது. அப்பாவி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். தமிழக வெற்றிக் கழக கட்சியினரிடம் எனது மனமார்ந்த வேண்டுகோள், இறந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் அதுதான் கட்சியால் செய்யக்கூடிய குறைந்தபட்சமாக இருக்கும். எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று நம்புகிறேன்". இவ்வாறு தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்,"கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்" என தெரிவித்துள்ளார். நடிகர் பார்த்திபன்,"கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்.. 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி, உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி 'கொடுத்து வைத்தவர்கள்' ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! இவ்வாறு கூறி உள்ளார். மேலும், பலரும் தங்களது இரங்கலையும் ஆறுதலையும் தெரித்து வருகின்றனர்.மேலும் படிக்க: கரூரில் 38 பேர் மரணம்: உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கன்னி ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், நிதி ஆதாயம் உண்டாகும்PM Kisan 21வது தவணை விவசாயிகளுக்கு திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது: காரணம் என்ன?Robo Shankarஅக்டோபரில் மிகப் பெரிய கிரகப் பெயர்ச்சிகள் நிகழும்: 5 ராசிகளுக்கு மகிழ்ச்சி, அனைத்திலும் வெற்றி
Tvk Vijay Karur Vijay Campaign Latest News In Tamil Tamil Nadu Tamilaga Vetri Kalagam Kamal Hasan Vishal Soori Gv Prakash Tamil Nadu Political Karur Stampede Tvk Stampede தவெக விஜய் கரூர் கரூர் கூட்ட நெரிசல் கமல்ஹாசன் விஷால் சூரி ஜிவி பிரகாஷ் தமிழக வெற்றிக் கழகம் விஷால் தமிழ்நாடு பிரபலங்கள் இரங்கல் தவெக விஜய் நடிகர் பார்த்திபன்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
UP: 'आई लव मोहम्मद' विवाद के बीच लखनऊ की सड़कों पर लगी 'आई लव योगी आदित्यनाथ' और 'आई लव बुलडोजर' की होर्डिंग्सउत्तर प्रदेश में इन दिनों &39;आई लव मोहम्मद&39; मामला तूल पकड़ रहा है। कई शहरों से इसको लेकर प्रदर्शन की खबरें सामने आई हैं। इसी बीच भाजपा युवा मोर्चा के नेता द्वारा राजधानी लखनऊ
Read more »
UP: अब मथुरा में महिला पुलिस टीम ने किया शॉर्ट एनकाउंटर, मुठभेड़ में शातिर लुटेरा घायल; अवैध हथियार बरामदजनपद में अपराधों पर अंकुश लगाने के लिए चलाए जा रहे &39;मिशन शक्ति&39; अभियान के तहत मथुरा में शनिवार को महिला पुलिस टीम ने पहला शॉर्ट एनकाउंटर किया। महिला पुलिस टीम और बदमाशों के बीच
Read more »
करूर में टीवीके बैठक में भगदड़: 39 की मौत, मंत्री अनबिल महेश ने जताया दुखकरूर में तमिलनाडु विजय கழக के प्रचार कार्यक्रम में भगदड़ मचने से 39 लोगों की मौत हो गई, जिसमें बच्चे और महिलाएं भी शामिल हैं। मुख्यमंत्री के आने और राहत कार्यों की घोषणा के साथ, पीड़ितों को तत्काल सहायता प्रदान की जा रही है। पूर्व मंत्रियों और वर्तमान मंत्रियों ने भी घटना पर दुख व्यक्त किया है और पीड़ितों की मदद के लिए आगे आए हैं।
Read more »
Karur Stampede: 'जांच आयोग के जरिये सामने आएगी सच्चाई,सख्त कार्रवाई करेंगे', करूर पहुंच कर बोले सीएम स्टालिनKarur Stampede: &39;जांच आयोग के जरिये सामने आएगी सच्चाई,सख्त कार्रवाई करेंगे&39;, करूर पहुंच कर बोले सीएम स्टालिन (खबर अपडेट की जा रही है।)
Read more »
LIVE கரூர் வந்தார் ஸ்டாலின் உயிரிழப்பு 39 ஆக உயர்வு மருத்துவமனையில் 81 பேர்LIVE கரூர் வந்தார் ஸ்டாலின் உயிரிழப்பு 39 ஆக உயர்வு மருத்துவமனையில் 81 பேர்
Read more »
Karur Rally Stampede: ദുരന്ത ഭൂമിയായി കരൂർ; മരണം 39 ആയി, വിവരിക്കാനാകാത്ത ദുരന്തമെന്ന് സ്റ്റാലിൻ, കരൂരിലെ ആശുപത്രി സന്ദർശിച്ചു10 ലക്ഷം രൂപയാണ് മരിച്ചവരുടെ കുടുംബങ്ങൾക്ക് സർക്കാർ അനുവദിച്ചിരിക്കുന്നത്.
Read more »
