Sanju Samson: சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் சுப்மன் கில்லுக்கு அழுத்தம்.
Shubman Gill vs Sanju Samson: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் சுப்மன் கில் லுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடிய நிலையில், இந்திய அணியின் நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் அதிரடி பேட்டிங்ஐபிஎல் 2026: RCB அணியின் பெஸ்ட் பிளேயிங் 11.. வெங்கடேஷ் ஐயர் இருக்காரா?தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. முதலில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடிய நிலையில், இரு அணிகளும் இறுதியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்திய அணி 3-1 என்ற கண்க்கில் தொடரை வென்றது. இந்த நிலையில்தான். டி20 தொடரின் கடைசி போட்டியில் தனக்கு கிடைத்த வாய்ப்பில் சஞ்சு சாம்சன் இந்திய நிர்வாகத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.அதாவது டி20 அணியில் சுப்மன் கில் மீண்டும் நுழைந்ததில் இருந்தே பிளேஇங் 11 சஞ்சு சாம்சனின் இடம் சந்தேகமாகிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இத்தொடரிலும் கூட சுப்மன் கில்லே பிளேயிங் 11ல் இருந்து வந்தார். ஆனால் சுப்மன் கில்லின் ஆட்டம் மிகவும் மோசமானதாக இருத்ந்து. இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட 5வது டி20 போட்டிக்கூட ஒரு ரிஸ்க் இல்லாத போட்டிதான். இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால் 5வது டி20 போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடரை இழக்க வேண்டிய சூழல் ஏற்படாது. தொடர் சமன் என்ற நிலையே ஏற்படும்.முதல் மூன்று போட்டியில் விளையாடிய சுப்மன் கில் கடுமையாக சொதப்பினார். அவர் வெறும் 32 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிகவும் குறைவாக 103..22 ஆகும். பவர் ப்ளே-வில் அதிரடி காட்ட வேண்டிய அவர், ஆமை வேகத்தில் செயல்பட்டு தடுமாறியது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த சூழலில், 4வது டி20 போட்டி பணிமூட்டத்தால் ரத்தான நிலையில், 5வது போட்டிக்கு முன்பாக கில்லுக்கு லேசான காயம் ஏற்பட்டதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் சர்மாவுடன் களமிறங்கிய் சஞ்சு சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதன் மூலம் சுப்மன் கில் மூன்று போட்டிகளில் சேர்த்த 32 ரன்களை, சஞ்சு சாம்சன் ஒரே போட்டியில் தகர்த்தார். அவர் 22 பந்துகளில் 37 ரன்கள் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களும் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 168.18 ஆகும்.2026 டி20 உலகக் கோப்பை நெருங்கி வருகிறது. இந்த வேளையில் சஞ்சு சாம்சனின் இந்த அதிரடி சுப்மன் கில்லுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில்லின் அணுகுமுறை சரி இல்லை என்றும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அல்லது ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரரை கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகரக்ள் தெரிவித்து வருகின்றனர். மேலும், நேற்றைய போட்டிக்கு பிறகு 2026 டி20 உலகக் கோப்பைக்கு சஞ்சு சாம்சனே சிறந்த தொடக்க வீரராக இருப்பார் என்றும் ஆதரவு குரல்கள் வலுக்க தொடங்கி இருக்கிறது. மேலும் படிக்க: மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ரோகித் சர்மா 2 போட்டிகளில் மட்டும்தான் - முழு விவரம்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!SIRJana NayaganIndia Squad2026 புத்தாண்டு ராசிபலன்: அடுத்தடுத்து உருவாகும் சுப யோகங்களால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்CSK-வின் பெரிய பலவீனம் என்ன தெரியுமா...? மினி ஏலத்தில் செய்த பெரிய தப்பு!
Saju Samson Csk Ind Vs Sa 2026 T20 World Cup Sanju Samson Latest News Csk Latest News Shubman Gill Latest News Shubman Gill Under Pressure T20 World Cup Sanju Samson T20 World Cup Chances Sanju Samson Puts Pressure On Shubman Gill Sanju Samson Batting Vs South Africa Sanju Samson Latest T20 Performance Will Sanju Samson Replace Shubman Gill In T20s Sanju Samson Sends Strong Message To Selectors Samson Shines In IND Vs SA 5Th T20 Chennai Super Kings Csk Latest News சுப்மன் கில் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 2026 டி20 உலகக் கோப்பை சஞ்சு சாம்சன் லேட்டஸ்ட் நியூஸ் சிஎஸ்கே சமீபத்திய செய்திகள் சுப்மன் கில் லேட்டஸ்ட் நியூஸ் டி20 உலகக் கோப்பையில் சுப்மன் கில் மீதான அழுத்தம் சஞ்சு சாம்சனின் டி20 உலகக் கோப்பை வாய்ப்புகள் சஞ்சு சாம்சன் சுப்மன் கில் மீது அழுத்தம் கொடுக்கி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான சஞ்சு சாம்சனின் பேட சஞ்சு சாம்சனின் சமீபத்திய டி20 செயல்பாடு டி20 போட்டிகளில் சுப்மன் கில்லுக்கு பதிலாக சஞ்சு தேர்வாளர்களுக்கு சஞ்சு ச
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
CSK கழட்டிவிட்ட வீரர் இரட்டை சதம்.. செம ஃபார்ம்.. மிஸ் பண்ணிட்டமோ?CSK: சிஎஸ்கே முன்னாள் வீரர் இரட்டை சதம் அடித்து அசத்தி உள்ளார்.
Read more »
தமிழ்நாட்டில் நாளை (டிசம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகளின் முழு லிஸ்ட்!Tomorrow Saturday (December 20) Shutdown Areas: தமிழகத்தில் நாளை சனிக்கிழமை (டிசம்பர் 20) மின்தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட் இங்கே.
Read more »
चेन्नई सुपर किंग्स ने KKR को अपने जाल में फंसाया, 25.20 करोड़ खर्च करने के लिए किया मजबूररविचंद्रन अश्विन ने कैमरून ग्रीन के लिए KKR की रिकॉर्ड-तोड़ बोली पर सवाल उठाए, कहा कि CSK को और धैर्य रखना चाहिए था। अश्विन का मानना है कि ग्रीन CSK के लिए एक बड़ी चूक हैं, जो लंबे समय तक खेल पर प्रभाव डाल सकते हैं।
Read more »
धोनीचा एक्झिट प्लॅन तयार, CSK ने 32.50 कोटी रुपये केले खर्च, IPL 2026 ठरणार शेवटचा?IPL 2026 CSK : सीएसकेने आयपीएल 2026 नंतर धोनीचा एक्सिट प्लॅन तयार केला असून त्यांनी यासाठी जवळपास 32.50 कोटी रुपये खर्च केले आहेत.
Read more »
Aaj Ka Panchang: ये है 20 दिसंबर का पूरा दैनिक पंचांग, आज गण्ड योग, जानें राहुकाल कब तकAaj Ka Panchang 20 December 2025: शनिवार यानी 20 दिसंबर 2025 का दिन अति शुभ और सकारात्मक है. शनिवार
Read more »
இன்றைய ராசிபலன் (டிசம்பர் 20, 2025): பணவரவு இருக்கும் நாள்!December 20 Today Rasi Palan: இன்றைய ராசிபலன் - டிசம்பர் 19 சனிக்கிழமை, 12 ராசிகளுக்கான பலன்களை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Read more »
