ஒபாமா கொடுத்த ஒற்றை குரல்... கமலா ஹாரிஸிற்கு பிரகாசமாகும் வெற்றி வாய்ப்பு!

US Presidential Election News

ஒபாமா கொடுத்த ஒற்றை குரல்... கமலா ஹாரிஸிற்கு பிரகாசமாகும் வெற்றி வாய்ப்பு!
Kamala HarrisJoe BidenDonald Trump
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 228 sec. here
  • 39 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 214%
  • Publisher: 63%

US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.

US Presidential Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸிற்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து, அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. ஜோ பைடன் , கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக முன்மொழிந்துள்ளார்.

ரிஷப் பந்த் இல்லை! ஏலத்தில் சிஎஸ்கே குறிவைக்கும் விக்கெட் கீப்பர் இவர் தான்!டிஏ 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? முழு கணக்கீடு இதோடெஸ்ட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டாப் 5 பேட்டர்கள் - முதலிடத்தில் சச்சின் இல்லை! அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 9ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது என்றாலும், இப்போது இருந்தே தினமும் அங்கு அரசியல் களம் என்பது பரபரப்படைந்திருக்கிறது. உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் அதிபர் தேர்தல் என்பது உலகளவில் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. எனவே, அமெரிக்க மக்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள பல மக்களும் அமெரிக்க தேர்தலை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கான தேர்தல் பரப்புரைகளும் தொடங்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. அதேநேரத்தில் எதிர்த்து களம் காணும் குடியரசு கட்சியின் வேட்பாளர்வேட்பாளராகும் ஜோ பைடன்? அந்த வகையில், சில நாள்களுக்கு முன் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தான் விலகிக்கொள்வதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸை, ஜோ பைடன் முன்மொழிந்தார். ஜோ பைடன் கமலா ஹாரிஸை வேட்பாளராக முன்மொழிந்த பின்னர், கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக அதிக நிதி திரளத் தொடங்கியது. மேலும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியிலும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெறுவார் எனவும் கூறப்பட்டது. மேலும் படிக்க | டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்ததில் காயம்... அலறிய மக்கள் - நடந்தது என்ன? ஆகஸ்ட் மாதம் நடக்கும் ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டிலேயே அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் உறுதிசெய்யப்படுவார் எனலாம். இந்தச் சூழலில் பலரும் கமலா ஹாரிஸிற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசெல் ஒபாமா ஆகியோர் மட்டும் மௌனம் காத்ததாக கூறப்பட்டது. ஜோ பைடன் போட்டியிடாவிட்டால் அதிபர் வேட்பாளராக மிசெல் போட்டியிட திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது கமலா ஹாரிஸ் பலராலும் முன்னிலைப்படுத்தப்படுவாதல் ஒபாமா தரப்புக்கு அதிருப்தி என்றும் தகவல்கள் பரவின.ஆனால், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கமலா ஹாரிஸிற்கு பராக் ஒபாமா மற்றும் மிசெல் ஒபாமா ஆகியோர் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆதரவால் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராவது ஏறத்தாழ உறுதியாகிவிடும் எனலாம். அதுமட்டுமின்றி, தற்போது டொனால்ட் டிரம்பின் பக்கம்தான் அதிக நிதி திரள்கிறது என்றும் அவருக்குதான் ஆதரவு அதிகமிருக்கிறது என்றும் கூறப்பட்டது. அதுவும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின் டிரம்பிற்கான ஆதரவு அபரிமிதமாக உள்ளது. அந்த வகையில், தற்போது பராக் ஒபாமாவின் ஆதரவு என்பது கமலா ஹாரிஸின் பிரச்சாரத்தை வலுப்படுத்தியிருக்கிறது எனலாம். இதன்மூலம், கமலா ஹாரிஸிற்கு ஆதரவாக இன்னும் நிதிகள் திரளும் என கணிக்கப்படுகிறது. முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, ஜனநாயக கட்சியில் மிக பிரபலமான தலைவர் ஆவார். அவர் அதிபர் பதவியில் இருந்து வந்து 10 ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், மக்களிடம் செல்வாக்கு நிறைந்த தலைவராக தொடர்கிறார், பராக் ஒபாமா. எனவே, அவரின் ஆதரவு இருப்பதால் பலரும் கமலா ஹாரிஸை நோக்கி நகர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன.பராக் ஒபாமா - மிசெல் ஒபாமா ஆகிய இருவரும் சேர்ந்து கமலா ஹாரிஸ் உடன் உரையாடும் ஒரு தனிப்பட்ட மொபைல் உரையாடலின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. இன்று வெளியான அந்த வீடியோவில்தான் கமலா ஹாரிஸிற்கு பராக் - மிசெல் தங்களின் ஆதரவை தெரிவித்திருக்கின்றனர். அந்த மொபைல் காலில்,"உங்களை அதிபர் வேட்பாளராக முன்மொழிவதை விட எனக்கும், மனைவி மிசெலுக்கும் வேறு எதுவும் பெருமைக்குரியதாக இருக்காது. இந்த தேர்தலில் எங்களால் முடிந்தவற்றை செய்து உங்களை இந்த தேர்தலில் வெற்றி பெற வைத்து, ஓவல் அலுவலகத்திற்குள் நுழைய வழிவகை செய்வோம்" என பராக் ஒபாமா, கமலா ஹாரிஸிடம் தெரிவித்தார். "உங்களை நினைத்து மிகவும் பெருமைக்கொள்கிறேன். இது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைய போகிறது" என மிசெல் ஒபாமாவும் தனது ஆதரவை கமலா ஹாரிஸிடம் தெரிவித்தார். அதற்கு கமலா ஹாரிஸ்,"இருவருக்கும் மிக்க நன்றி, இது எனக்கு பெரும் பேரு..." எனவும் பதில் அளித்திருந்தார். மேலும் இது ஒபாமா - கமலா ஹாரிஸ் உடன் பேசிய உண்மையான மொபைல் கால் ஆகும். மேலும் படிக்க | டிரம்ப் உயிரை காத்தது கடவுள் ஜெகந்நாதர்... சொல்வது இஸ்கான்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஜூலை 29 முதல் கஜகேசரி யோகத்தால் வாழ்க்கையை அனுபவிக்கப் போகும் ராசிகள்!!Andhra Pradeshஓராண்டுக்கு 'எல்லாம் இலவசம்' பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய முத்தான 3 ப்ரீபெய்ட் பிளான்கள்!உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Kamala Harris Joe Biden Donald Trump American Politics Democratic Party Republican Party Election Campaign Political News US Presidential Election 2024 Candidates Kamala Harris Political Career Joe Bidens Decision To Not Run For President Donald Trumps Chances Of Winning The Election Impact Of Barack Obamas Endorsement On Kamala Har Democratic Partys Front Runner For President Republican Partys Nominee For President Key Issues In The US Presidential Election 2024 Election Polls And Predictions Role Of Social Media In The US Presidential Elect அமெரிக்க அதிபர் தேர்தல் கமலா ஹாரிஸ் ஜோ பைடன் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசியல் குடியரசுக் கட்சி ஜனநாயக் கட்சி அமெரிக்க அதிபர் தேர்தல் 2024 கமலா ஹாரிஸ் அரசியல் வாழ்க்கை பராக் ஒபாமா மிசெல் ஒபாமா ஜோ பைடன் விலகல் கமலா ஹாரிஸிற்கு பெருகும் ஆதரவு டொனால்ட் டிரம்ப் வெற்றி வாய்ப்பு கமலா ஹாரிஸ் வெற்றி வாய்ப்பு கமலா ஹாரிஸிற்கு பராக் ஒபாமாவின் ஆதரவு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!இறந்து போனவருக்கு பட்டா கொடுத்த அதிகாரி - கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் புகார்!
Read more »

கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
Read more »

தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்கும் 5 உணவு முறைகள்Breastfeeding diet ; இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் இயற்கையாகவே அதிகரிக்க வேண்டும் என்றால், 5 உணவு முறைகளை பின்பற்றினால் அதற்கான வாய்ப்பு அதிகம்.
Read more »

சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றிசிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு லாபம், லக், அதிர்ஷ்டம், வெற்றி
Read more »

கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!கேப்டன் சூர்யகுமார் யாதவை பார்த்ததும் ஹர்திக் கொடுத்த ரியாக்ஷன்..!Hardik Pandya reaction : டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவை மும்பை ஏர்போர்ட்டில் பார்த்ததும் ஹர்திக் பாண்டியா கொடுத்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது.
Read more »

கமலா ஹாரிஸ் வெற்றி பெற... பேனர் வைத்த திமுக நிர்வாகி - ஊர் மக்களின் பெரிய கோரிக்கைகமலா ஹாரிஸ் வெற்றி பெற... பேனர் வைத்த திமுக நிர்வாகி - ஊர் மக்களின் பெரிய கோரிக்கைKamala Harris: அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்தின் திருவாரூரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் மக்கள் வழிபாடு மேற்கொண்டனர்.
Read more »



Render Time: 2026-04-02 21:26:07