ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!

Rahul Gandhi News

ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்ட்...? ரகசியத்தை பகிர்ந்த ராகுல் காந்தி!
Rahul Gandhi NewsCongressLok Sabha Election 2024 Third Phase Polling
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 218 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 146%
  • Publisher: 63%

Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.

Rahul Gandhi Lok Sabha Elections: ஏன் எப்போதும் வெள்ளை டீ-சர்டை அணிந்துகொள்கிறீர்கள் என ராகுல் காந்தி யிடம் கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர் அளித்த நச் பதிலை இங்கு காணலாம்.நாடு முழுவதும் 3ம் கட்ட வாக்குப்பதிவு மே 7இல் நடைபெறுகிறது.

Guru Peyarchiகுரு பெயர்ச்சி: 2025 வரை இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம்... வெற்றிகள் குவியும், மகிழ்ச்சியில் திளைப்பார்கள்!!18வது மக்களவை தேர்தலின் முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், அசாம், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கடும் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராகுல் காந்தி இன்று அவரது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், ராகுல் காந்தியிடம் ஒருவர் கேள்வி கேட்கிறார், அதேபோல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடம் கேள்வி எழுப்பும் விதமாகவும் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம், இந்த வீடியோ கர்நாடகாவில் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதில் ஏன் எப்போதும் வெள்ளை டி-சர்டை மட்டும் அணிகிறீர்கள் என ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,"வெளிப்படைத்தன்மையும், எளிமையும்தான். உடைகள் குறித்து பெரியளவில் கவனம் செலுத்த மாட்டேன். எளிமையானதாக இருக்க வேண்டும் என நினைப்பேன்" என்றார். அதன்பின் அவர் ஹெலிகாப்டரில் ஏறிச்செல்வது தெரிகிறது.மேலும் படிக்க | அமேதி: 40 வருட களப்பணி, 63 வயது இளைஞர், அயராத காங்கிரஸ் அபிமானி.... யார் இந்த கிஷோரி லால் சர்மா? தொடர்ந்து, ராகுல் காந்தி கார்கேவிடம் நேரில் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, இந்த பிரச்சாரத்தில் எது நல்லதாகவும், எது மோசமானதாகவும் தெரிகிறது என கேள்வியெழுப்பினார். அதற்கு,"மோசமானது என எதுவுமில்லை. நாட்டிற்காக இதை அனைத்தையும் செய்கிறோம் என்பதே நல்லதாக தெரிகிறது. நாட்டை கெடுத்துவரும் ஒருவரை, அவரை நாம் தடுத்துவிட்டோம் என்றால் நல்லதாக இருக்கும். இருப்பினும், குறைந்தபட்சம் நாட்டிற்கு நல்ல செய்கிறோம்" என்றார் கார்கே.தொடர்ந்து கார்கே, ராகுல் காந்தி, சித்தராமையா ஆகியோர் காரில் சென்ற போது பேசிய உரையாடலும் இதில் இடம்பெற்றுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதில்,"உங்களுக்கு அதிகாரமா அல்லது சித்தாந்தமா என கேட்டால் எதை தேர்வு செய்வீர்கள்" என கேட்டதற்கு 'நிச்சயம், சித்தாந்தம்தான்... சித்தாந்தம் எப்போதும் முக்கியமானது. கட்சியின் சித்தாந்தத்தையும், கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் நாம் வைக்க வேண்டும். மேலும் நீங்கள் அதிகாரத்தில் இருந்தால் நமது சாதனைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் நமது நிலைப்பாட்டை மக்கள் நிச்சயம் பாராட்டுவார்கள், அவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள்" என்றார். இதற்கு கார்கே,"அதிகாரம் வரும் போகும். ஆனால் சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பதுதான் பெரிய விஷயம். நமது தலைவர்கள் சித்தாந்தத்திற்காக தியாகம் செய்துள்ளனர்" என்றார்.,"கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோருடன் நான் இதில் உடன்படுகிறேன். என்னை பொறுத்தவரையில, நீங்கள் சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் அதிகாரத்தை நோக்கியும் செல்ல முடியாது, ஒரு பெரிய அமைப்பாகவும் செல்ல முடியாது. மேலும் நமது சித்தாந்தத்தை நாம் மக்களுக்கு உணர்த்த வேண்டும். ஏழைகளுக்காகவும், பெண்களுக்காகவும், அனைவரையும் சமமாக நடத்துவதற்காகவும் நாம் உழைக்க வேண்டும். எனவே ஒரு அமைப்பு அளவில், அதுவும் தேசிய அளவில் அரசியல் போராட்டம் எப்போதும் கருத்தியல் சார்ந்ததுதான்" என்றார்.தொடர்ந்து கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 2 கட்டங்களாகவே தேர்தல் நடைபெறுகிறது. அதில் 14 தொகுதிகளில் கடந்த ஏப். 26ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், மீதம் உள்ள 14 தொகுதிகளில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும். 2019ஆம் ஆண்டு இந்த 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை பாஜக மொத்தமாக வென்றது. கடந்த முறை கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தலா 1 தொகுதியையே வென்றது. இந்த முறை பாஜக மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. பாஜக 25 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் 3 தொகுதகளில் போட்டியிடுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஹோட்டல் ரூம் தேடி அலைய தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனில் 100 ரூபாய்க்கு தங்கலாம்Miami Cruise Shipசனி பகவான் வக்ரத்தால் 5 ராசிகள் ஜாக்கிரதை! சிக்கலை தவிர்க்க எளிய பரிகாரம்Savukku Shankar : ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடிக்கவே என்னை கைது செய்துள்ளார்கள் - சவுக்கு சங்கர்jyothika

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rahul Gandhi News Congress Lok Sabha Election 2024 Third Phase Polling Karnataka News TN Latest News Updates Rahul Gandhi White T Shirt Secrets National Latest News Updates Congress News காங்கிரஸ் மக்களவை தேர்தல் 2024 3ஆம் கட்ட வாக்குப்பதிவு மக்களவை தேர்தல் தேசிய செய்தகள் காங்கிரஸ் செய்திகள் ராகுல் காந்தி ராகுல் காந்தி செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்உலகிலேயே மிக ஆழகான இடம் வயநாடு: தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி புகழாரம்Lok Sabha Elections: கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டல் தனது 4 நாள் பிரச்சாரத்தின் இரண்டாவது நாளான இன்று (ஏப்ரல் 16) அவர் கோழிக்கோடு கோடியத்தூரில் ரோடு ஷோக்களை நடத்தினார்.
Read more »

மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்மோடி vs ராகுல்: வெறுப்பு பேச்சு.. பாஜக மற்றும் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்Election Commission of India: தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்டு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு.
Read more »

பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்பதறுகிறார் மோடி... இன்னும் கொஞ்ச நாளில் மேடையில் அழுவார் பாருங்கள்Rahul Gandhi Slams PM Modi: பிரதமர் மோடியின் பேச்சில் இப்போது பதற்றம் தெரிகிறது என்றும் கூடிய விரைவில் அவர் மேடையில் கண்ணீர் விடக்கூடும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Read more »

அமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேஅமேதி, ரேபரேலியில் காந்தி குடும்பமே வேண்டாம்: அடம் பிடுக்கும் ராகுல், காத்திருக்கும் கார்கேLok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவோ அல்லது ராகுல் காந்தியோ இந்த தொகுதிகளில் போட்டியிட்டால், அது, மாநிலத்தில் கட்சியில் பிடிப்பை மேம்படுத்தும் முயற்சிக்கு வலு சேர்க்கும் என்று உள்ளூர் தொண்டர்கள் கட்சித் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.
Read more »

“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு“விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்குRahul Gandhi Attack Narendra Modi: தோல்வியின் அச்சத்தில் மோடி பிரதமரின் கண்ணியத்தை மறந்து பொய்களின் இயந்திரமாக மாறி விட்டார் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) பக்கத்தில் கூறியுள்ளார்.
Read more »

முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மாமுடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மாLok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 22:41:09