PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள்!
PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' -இந்திய அரசு.Kalaignar Magalir Urimai Thogaidriving licenseகிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு நோபால் கூட வீசாத பந்துவீச்சாளர் யார் தெரியுமா? ஈரானை தாக்க அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதா? ஈரான் மீதான தாக்குதலில் மோடி அரசு உடந்தையாக இருந்ததா? அமெரிக்க குண்டுவீச்சு பிளான் இந்திய வான்வெளி மூலம் ஈரானை அடைந்தன? என சமூக ஊடகங்களில் கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருவேளை ஈரான் மீதான தாக்குதல்களில் இந்தியா ஈடுபட்டிருந்தால், ஒரு பெரிய உலகளாவிய நெருக்கடி எழுந்திருக்கும். ஆனால் இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் பெரும் புயலைக் கிளப்புவதற்கு முன்பு, இந்திய அரசாங்கத்தின் பிரஸ் இன்ஃபோடெக் பீரோ உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு குழு இதனை 'போலியானது' 'வெறும் வதந்தி' என்று தனது எக்ஸ் தள ஊடகத்தில் தெரிவித்துள்ளது.முதலில் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளைப் பற்றி பார்ப்போம். சஹார் எமாமி என்ற பயனர் சமூக ஊடகங்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை தாக்க இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக எழுதினார். புது தில்லியின் மௌன உடந்தையாக இருப்பது இப்போது வரலாற்றின் தவறான பக்கத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஈரான் இதை ஒருபோதும் மறக்காது எனப் பதிட்டு இருந்தார். மேலும் தனது மற்றொரு பதிவில்,"ஈரான் மீது இராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கா இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன" எனக் கூறியிருந்தார். அவரின் பதிவுக்கு பலர் இது போலியானவை, தவறான கருத்து எனவும் எதிர்கருத்து தெரிவித்திருந்தனர்.ஆனாலும் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியதை அடுத்து, பின்னர் ஜூன் 22 அன்று இரவு 8:56 மணிக்கு, PIB ஊடகம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை போட்டது. அதில்,"பல சமூக ஊடக கணக்குகள் ஆபரேஷன் மிட்நைட் ஹேமரின் போது, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக விமானங்களை ஏவ இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாகக் கூறி தகவல் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கூற்று போலியானது. இது ஆபரேஷன் மிட்நைட் ஹேமரின் போது செய்யப்படவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பின் போது, அமெரிக்காவின் கூட்டுப் பணியாளர்களின் தலைவரான ஜெனரல் டான் கேன், அமெரிக்க விமானங்கள் பயன்படுத்தும் பாதை குறித்து கூறியதாக PIB விளக்கம் அளித்துள்ளது. Several social media accounts have claimed that Indian Airspace was used by the United States to launch aircrafts against Iran during Operation மொத்தத்தில் ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' என்று இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஈரானின் மூன்று முக்கிய அணு ஆயுதத் தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பெயர் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' .ஜூன் 22 அன்று மாலை, ஜெனரல் டான் கேன் வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்பொழுது ஈரான் மீதான் தாக்குதல் நடவடிக்கை பாதையை பகிர்ந்து கொண்டார். அதன்மூலம் எந்த அமெரிக்க விமானமும் இந்திய வான்வெளியில் நுழையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.ஜெனரல் கேன் கூற்றுப்படி, நடவடிக்கையின் கீழ் வெறும் 25 நிமிடங்களில் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் தாக்கப்பட்டன. 300 பவுண்டுகள் எடையுள்ள பங்கர் பஸ்டர் குண்டுகள், அதாவது சுமார் 13,68 கிலோ ஃபோர்டோ மற்றும் நடாஸ் அணுசக்தி தளங்கள் மீது வீசப்பட்டன. அதே நேரத்தில், இந்த வாகனம் டோமாக் குரூஸ் ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. 125 க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் ஏழு ஸ்டெல்த் பி-2 குண்டுவீச்சு விமானங்களும் இதில் ஈடுபட்டன.ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பிறகு, பல நாடுகள் இதைக் கண்டிக்கின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது. UNSC-ல், ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முன்மொழிந்துள்ளன.ரேட்டர் செய்தி ஊடகத்தின் அறிக்கையின்படி, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஜூன் 23 திங்கட்கிழமை மாலைக்குள் தங்கள் எதிர்வினைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு UNSC-ன் மற்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு குறைந்தது ஒன்பது வாக்குகள் தேவை. மேலும், அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா அல்லது சீனா நாடுகள் அவர்களின் வீட்டோ அதிகாரத்தை பய்ன்படுத்தக் க்கூடாது என்பதும் மிக முக்கியமானது. மேலும் படிக்க - 'நரி திட்டம்' அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா? மேலும் படிக்க - பதிலடியை தொடங்கிய ஈரான்... எகிறும் கச்சா எண்ணெய் விலை - இந்தியாவுக்கு பாதிப்புகள் என்ன?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!இந்துக்கள் தான் முஸ்லீம், கிறிஸ்டின் ஆக மாறி உள்ளனர் - அமைச்சர் ஐ . பெரியசாமி!நவபஞ்சம யோகம்... சனி - புதன் அருளால் ராஜயோக பலன்களை பெறும் 5 அதிர்ஷ்ட ராசிகள்AtharvaaPM KisanZodiac Signs
Donald Trump News In Tamil Israel Iran Attack News In Tamil Vladimir Putin News In Tamil Benjamin Netanyahu News In Tamil Supreme Leader Ali Khamenei News In Tamil அலி கமேனி செய்திகள் டொனால்ட் டிரம்ப் செய்திகள் இஸ்ரேல் ஈரான் தாக்குதல் அப்டேட் விளாடிமிர் புடின் செய்திகள் பெஞ்சமின் நெதன்யாகு செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ஐபிஎல்-ல் நன்றாக விளையாடியும் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள்!இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
Read more »
கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள்.. அனில் கும்ப்ளே வருத்தம்!பெங்களூருவில் ஆர்சிபி ரசிகர்கள் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வருத்தம் தெரிவித்துள்ளார்.
Read more »
’அவருக்கு ஈடாக பந்துவீச்சாளர்கள் இருக்காங்க’ பும்ராவை ஓரங்கட்ட தொடங்கிய கவுதம் கம்பீர்..!Gambhir on Bumrah: ஜஸ்பிரித் பும்ராவுக்கு இணையான பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Read more »
இந்த CSK சிங்கத்திற்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? - ஆடிப்போன இங்கிலாந்து லயன்ஸ்!India A vs England Lions: இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மிடில் ஆர்டரை சரித்த இந்திய ஏ அணியில் விளையாடும் சிஎஸ்கே சிங்கத்திற்கு பிரதான இந்திய அணியில் இடம் கிடைக்குமா...?
Read more »
Live: ஈரானை பதம்பார்த்த அமெரிக்கா முருக பக்தர்கள் மாநாடு விஜய் பிறந்தநாள்Live: ஈரானை பதம்பார்த்த அமெரிக்கா முருக பக்தர்கள் மாநாடு விஜய் பிறந்தநாள் - லைவ் அப்டேட்ஸ்!
Read more »
நரி திட்டம் அச்சத்தில் அமெரிக்கா... பயமுறுத்தும் ஈரான்... ஸ்லீப்பர் செல் ஞாபகம் இருக்கா?Sleeper Cell: ஈரானுக்கு எதிரான போரில் தற்போது இஸ்ரேலுடன் அமெரிக்கா கைக்கோர்த்துவிட்டது. இந்நிலையில், ஈரானின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
Read more »
